மேகக்கணிமை – அறிமுகம்
இன்று, மேகக்கணிமையின் (Cloud Computing) வளர்ச்சியால், இணையசெயலிகள் / சேவைகளை (Web Applications / Services) உருவாக்கும் பலருக்கும் அதை எங்கிருந்து இயக்குவது என்ற அடிப்படைச் சிக்கல் இருப்பதில்லை. தமக்கென சொந்தமாக வன்பொருள்களும் (Hardware), நினைவகங்களும் (Storage), நிரந்தரமான தடையற்ற இணைய இணைப்பும் இல்லாமலேயே, நம்மால் செயலிகளையும், சேவைகளையும் வழங்கமுடிகிறது. அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல முன்னனி நிறுவனங்கள் மேகக்கணிமைக்கான கட்டமைப்பை ஒரு சேவையாக வழங்குகின்றன. இவற்றை சேவை வழங்குநர்கள் (Service Providers) என அழைக்கிறோம்.… Read More »