Tag Archives: include

C மொழியின் மாறிகள் | எளிய தமிழில் C பகுதி -6

மாறி என்றால் என்ன? எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய கணித ஆசிரியர் இந்த பெயரை முதல் முதலாக சொன்னபோது, தனுஷ் நடிச்ச படம் தான் “மாரி” என பின் பெஞ்சிலிருந்த நண்பன் சத்தம் போட்டது இன்றும் நினைவிருக்கிறது. ஒருபுறம் மாறி என்பதையும், மாரி என்பதையும் குழப்பிக் கொண்டவர்கள் பலரும் இருக்கிறார்கள். மாரி என்றால் மழை என்று அர்த்தம். மாரி பொழியாது போனால், வையகம் எங்கும் வாடிய பயிர்கள்… Read More »

C மொழியில் அடுத்த வரிக்கு செல்வது எப்படி? | எளிய தமிழில் சி பகுதி 5

வழக்கமாக, பள்ளி- கல்லூரியில் ஆசிரியர் சொல்ல,சொல்ல மாணவர்கள் குறிப்பெடுத்து கொண்டிருக்கும் போது, இந்த வரியை அடுத்த பத்தியாக(para) எழுத வேண்டும் என ஆசிரியர் கூறுவார். அல்லது இந்த இடத்தில் மேற்கோள் குறி இட வேண்டும்(“) என்று குறிப்பிடுவார். இந்த அடிப்படையான வேலைகளை கணினியின் அடிப்படை மொழியான C யில் எப்படி செய்வது? என்று தான் இன்றைக்கு பார்க்கவிருக்கிறோம். ஏற்கனவே, printf() செயல்பாட்டின் மூலம் நீங்கள் கொடுக்கும் உள்ளீடை, வெளியீட்டு திரையில் காண்பிக்க முடியும் என பார்த்து இருந்தோம்.… Read More »

C மொழியின் குறிப்புகள்(comments) | எளிய தமிழில் C பகுதி 4

ஒவ்வொரு மொழியிலும் நிரலாக்கம் எழுதும்போது எந்த அளவிற்கு சரியாக எழுதுகிறோமோ, அந்த அளவிற்கு வரிக்கு வரி அதை விளக்கும் விதமான குறிப்புகளை வழங்கிக் கொண்டே வரவேண்டும். ஆங்கிலத்தில் இதை கமெண்ட் என அறியப்படுகிறது. எப்படி சமையல் செய்யும்போது சமையல் குறிப்புகள் பயன்படுகிறதோ, அது போலவே நிரலாக்கத்தின் போதும் குறிப்புகளை வழங்க வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் குறுகிய காலம் பணியாற்றி விட்டு வெளியில் செல்ல கூடும். அப்படி வெளியில் செல்லும்போது, உங்களுக்குப் பிறகு அதே வேலைக்கு வருபவர்… Read More »

C மொழியில் சின்னதாக ஒரு கூட்டல் கணக்கு | எளிய தமிழில் C

எளிய தமிழில் C கட்டுரைகளை எழுதத் தொடங்கி கடந்த 15 நாட்களாக கட்டுரை எதுவும் வெளியாகவில்லை. சில தனிப்பட சரி இன்றைக்கு பெரியதாக ஒன்றும் பார்க்கப்போவதில்லை! C மொழியில் எளிமையாக ஒரு கூட்டல் கணக்கு போடுவது எப்படி ?என்றுதான் இன்றைய கட்டுரையில் பார்க்க வருகிறோம். இதற்கு உங்களுக்கு அடிப்படையான தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு நான் எழுதியிருக்கக் கூடிய,C மொழியில் பொங்கல் வாழ்த்து என்னும் கட்டுரையை படித்து பாருங்கள். C மொழியில் எழுதுவதற்கு அடிப்படையான தகவல்கள்… Read More »

கற்றுக்கொள்க லின்கஸின்உருவாக்கமைய நிரலாக்கத்தின் அடிப்படைகளை

ஒரு இயக்க முறைமையின் மையமும் மையக் கூறும் உருவாக்கமையம்(kernel) என அழைக்கப்படுகிறது. பணி மேலாண்மை ,வட்டு மேலாண்மை போன்ற அனைத்து அடிப்படை வன்பொருள் நிலையிலான செயல்பாடுகளும் இயக்க முறைமையின் உருவாக்கமையத்தால் கண்காணிக்கப்படுகின்றன. ஒரு பயனர்-நிலையில் செயல்முறைக்கு வன்பொருள் கூறுகளுக்கு நேரடி அணுகல் தேவைப்படும் போது, அது உருவாக்கமையத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்புகிறது, இது கணினியின் அழைப்பு என குறிப்பிடப்படுகிறது. உருவாக்கமையம் ஆனது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ளது, அனுமதிஅளிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே அணுக முடியும். இதன்மூலம் வன்பொருளை… Read More »