Tag Archives: library standards

எண்ணிம நூலகவியல் 5 – எண்ணிமப் பொருள் (Digital Object)

பெளதீக நூலகங்களிலும் ஆவணகங்களிலும் நாம் நூற்கள், இதழ்கள், ஆவணங்கள், இறுவட்டுக்கள் என்று பெளதீக பொருட்களையே முதன்மையாகப் பயன்படுத்துகிறோம். அருங்காட்சியங்களில் கலைப்பொருட்களை (artifacts) சென்று பார்க்க முடியும். எண்ணிம நூலகங்கள், ஆவணகங்கள், அருங்காட்சியகங்களில் நாம் எண்ணமப் பொருட்களை (digital objects) உருவாக்கி, பாதுகாத்து, பயன்படுத்துகிறோம்.  இங்கு எண்ணிமப் பொருள் என்பது ஒரு முக்கிய கருத்துருவாக எழுகிறது. எண்ணிமப் பொருட்கள் இரு வகைகளில் உருவாக்கப்படுகின்றன.  ஒன்று, இயல்பாகவே எண்ணிம வடிவத்தில் உருவாக்கப்படும் ஆவணங்கள் மற்றும் மெய்நிகர் பொருட்கள் ஆகும். எடுத்துக்காட்டாக… Read More »