Tag Archives: logic gates

Ex-OR கதவு| நான் கொஞ்சம் வேற ரகம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 42

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், லாஜிக் கதவுகள் குறித்து பார்த்து வருகிறோம். லாஜிக் கதவுகளின் வகைகளில் இன்று நாம் கடைசியாக பார்க்க விருப்பது Ex-OR கதவு. லாஜிக் கதவுகளிலேயே பலரையும் குழப்பக்கூடிய, ஒரு வகையிலான கதவாக இந்த EX-OR கதவு இருக்கிறது. IC7486 எனும் உள்ளார்ந்த மின்சுற்றே இந்த கதவிற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கதவு ஒரே விதமான உள்ளீடுகளை அனுமதிப்பதில்லை. வெவ்வேறான உள்ளீடுகள் வழங்கப்படும் போது மட்டுமே வெளியீடை வழங்குகிறது. கேட்பதற்கே சற்று வினோதமாக இருக்கலாம். அடிப்படையில் லாஜிக்கல்… Read More »

OR கதவின் தலைகீழி NOR கதவு | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 39

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான லாஜிக்கல் கதவுகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருக்கிற கதவு,NOR லாஜிக் கதவு. நாம் ஏற்கனவே பார்த்திருந்த, ஓர் கதவின் தலைகீழி வகையான லாஜிக் கதவு தான் இந்த NOR கதவாகும். மேலும், இந்த கதவில் எவ்வித உள்ளீடும் வழங்கப்படாத போது மட்டுமே உங்களுக்கு வெளியீடு கிடைக்கும்(If both the inputs are zero, then only you’ll get the output). நாம்… Read More »

AND கதவின் தலைகீழி NAND| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 36

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் கடந்த சில வாரமாக லாஜிக் கதவுகள் குறித்து பார்த்தோம்.அந்த வகையில், நம்முடைய தொடக்க கட்டுரைகளிலேயே AND கதவு குறித்து விவாதித்து இருந்தோம். இந்த AND கதவின் தலைகீழி என அழைக்கப்படும் கதவு தான் NAND கதவு. நீங்கள் AND கதவில் இரண்டு உள்ளீடுகள் அல்லது மூன்று உள்ளீடுகளை கொடுத்து அதற்கு எத்தகைய வெளியீடுகளை பெறுகிறீர்களோ! அதற்கு தலைகீழான வெளியீடு இந்த NAND கதவில் உங்களுக்கு கிடைக்கும். உதாரணமாக, AND கதவில் அனைத்து உள்ளீடுகளும்… Read More »

வரும் ஆனா வராது | Not கதவு | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 33

கடந்த வாரம் லாஜிக் கதவுகள் தொடர்பான கட்டுரைக்கு விடுமுறை விட்டு விட்டேன். எங்கே இந்த தொடரை இப்படியே கைவிட்டு விடுவேனோ? என எனக்குள்ளேயே சந்தேகம் கிளம்பிவிட்டது. அதற்காகத்தான் வேகவேகமாக NOTகதவு குறித்து கட்டுரை எழுதுவதற்கு என்று வந்திருக்கிறேன். கடந்த இரண்டு லாஜிக் கதவுகள் தொடர்பான கட்டுரையில் AND மற்றும் OR கதவுகள் குறித்து பார்த்திருந்தோம். NOT கதவு என்றால் என்ன? அது தொடர்பாகத்தான் இன்றைக்கு பார்க்கவிருக்கிறோம். ஆங்கில வார்த்தையான NOTஎன்பதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? வேறு… Read More »

நீ பாதி நான் மீதி|  OR கதவு | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 31 | லாஜிக் கதவுகள் குறுந்தொடர்

கடந்த வாரம் எழுதியிருந்த, லாஜிக் கதவுகள் தொடர்பான கட்டுரையில் AND லாஜிக் கதவு குறித்து விரிவாக பார்த்திருந்தோம். இன்றைய கட்டுரையில், OR லாஜிக் கதவு குறித்து விரிவாக பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். kaniyam.com/category/basic-electronics/ அடிப்படையில் கூட்டல் செயல்முறைக்கு ஒத்த வகையிலான, லாஜிக் கதவாகவே OR கதவு அறியப்படுகிறது. பூலியன் இயற்கணிதத்தின் OR விதியின்படி, இந்த லாஜிக் கதவு ஆனது… Read More »

லாஜிக்கோடு AND கதவை அணுகுவோமா ? | AND கதவு | லாஜிக் கதவுகள் பகுதி: 3 | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 30

கடந்த கட்டுரையில் லாஜிக் கதவுகளின் வகைகள் குறித்து விரிவாக பார்த்திருந்தோம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதன்முதலாக கற்பிக்கப்படும் லாஜிக் கதவு எதுவென்று கேட்டால், AND கதவு தான். என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க, கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். பெருக்கலை அடிப்படையாகக் கொண்ட லாஜிக் கதவு தான், இந்த AND கதவு. பூலியன் இயற்கணிதத்தின் AND வகைப்பாட்டின் அடிப்படையில், இந்த கதவு வேலை செய்கிறது இந்த AND கதவின் விதியின்படி, இரண்டு உள்ளீடுகளும் ஒன்றாக… Read More »

லாஜிக் கதவுகளும் அதன் பொதுவான வகைகளும் | லாஜிக் கதவுகள் பகுதி 2 | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 29

கடந்த வாரம், லாஜிக் என்றால் என்னவென்று பார்த்திருந்தோம். லாஜிக் கதவுகள் எலக்ட்ரானிக்ஸ் துறையின் மிக மிக முக்கியமான பங்கு வகிக்கும் பிரிவு மட்டுமல்ல! மாறாக அன்றாட வாழ்வில் அனைத்து துறைகளிலும் “லாஜிக்” என்பது மிக மிக முக்கியமானது என்று தெளிவாக பார்த்திருந்தோம். இதுபோல என்னுடைய இன்னபிற, எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளைப் படிக்க கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். சரி! நம்முடைய எலக்ட்ரானிக்ஸ் துறையில், லாஜிக் கதவுகள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன என்று பார்க்கின்ற பொழுது! பொதுவாக சுமார்… Read More »

லாஜிக் கதவுகள் : குறுங்தொடர் – அறிமுகம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் – 27

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்! எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு தலைப்புகள் குறித்து 26 கட்டுரைகள் மூலம் நாம் விவாதித்திருக்கிறோம். இனிமேல் வரக்கூடிய சுமார் பத்து கட்டுரைகள் வரை, லாஜிக் கதவுகள் தொடர்பாக விரிவாக பார்க்கவிருக்கிறோம். இந்த 10 கட்டுரைகளையும் எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியோடு, குறுந்தொடராக வெளியிட நான் முடிவு செய்து இருக்கிறேன். என்னுடைய, இன்ன பிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். kaniyam.com/category/basic-electronics/ அடிப்படையில், நம்மில் பலரும் பள்ளி மற்றும்… Read More »