மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 9: லேத் பட்டறையில் வேலையை மாற்றி மாற்றி ஏற்றி இறக்குவது போல!
Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 9 நான் தகவல் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு முன் ஒரு இயந்திர பொறியாளராக என் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன். நடுத்தர அளவிலான தொழிற்சாலையில் வேலை திட்டமிடல் எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். லேத் பட்டறை இயக்குபவரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார், “காலைல கிருஷ்ணன் சார் சொல்ற வேலையை ஏத்துவோம் சார். அதைக் கஷ்டப்பட்டு அலைன் பண்ணி முடிச்சு டூல் செட் பண்ணி கடைசல ஆரம்பிக்கலாம்னு இருப்போம். அப்பதான் சக்திவேல்… Read More »