Tag Archives: tamil

எளிய தமிழில் Electric Vehicles 14. மின்கலன் மேலாண்மையகம்

மின்னூர்தியின் செயல்பாடுகள் அதன் மின்கலத்தைப் பெரிதும் நம்பியுள்ளன. ஆகவே அதைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதும் கட்டுப்பாடு செய்வதும் அவசியம். உயர் மின்னழுத்த லித்தியம் அயனி மின்கலங்களில் மின்னூர்திகள் இயங்குகின்றன. லித்தியம் அயனி மின்கலங்கள் மற்ற மின்கல வேதியியல்களுடன் ஒப்பிடும்போது அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டவை. ஆனால் சில வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் இவை தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. ஆகவே பயனர் பாதுகாப்பையும் ஊர்தியின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக முன் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளுக்குள் மின்னூர்திகளை இயக்குவது மிகவும்… Read More: எளிய தமிழில் Electric Vehicles 14. மின்கலன் மேலாண்மையகம் »

எளிய தமிழில் Electric Vehicles 13. மோட்டார் கட்டுப்பாட்டகம்

பெட்ரோல் டீசல் கார்களிலும் பல மின்னணு கட்டுப்பாட்டகங்கள் உள்ளன. ஆகவே மின்னூர்திகளுக்குப் பிரத்தியேகமான கட்டுப்பாட்டகங்களைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம். மின்னழுத்தத்தையும், அலைவெண்ணையும் துல்லியமாகக் கட்டுப்படுத்த வேண்டும் நம் வீடுகளில் மின்தடங்கல் ஏற்பட்டால் அவசரகாலப் பயனுக்கு மின்மாற்றி (inverter) வைத்திருப்போம் அல்லவா? மின்சாரம் இருக்கும்போது மாறுமின்சாரத்தை (Alternating Current – AC) நேர்மின்சாரமாக (Direct Current – DC) மாற்றி மின்கலத்தில் மின்னேற்றம் செய்யும். மின்தடங்கல் ஏற்பட்டால் மின்கலத்திலிருந்து வரும் நேர்மின்சாரத்தை மாறுமின்சாரமாக மாற்றி விளக்கு, மின்விசிறி… Read More: எளிய தமிழில் Electric Vehicles 13. மோட்டார் கட்டுப்பாட்டகம் »

எளிய தமிழில் Electric Vehicles 12. திறன் மின்னணுவியல்

வழக்கமாக சமிக்ஞைகளையும் (signals) தரவுகளையும் (data) அனுப்பவும் செயல்படுத்தவும் (processing), சேமிக்கவும்தான் நாம் மின்னணுவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த வேலைகளுக்கு ஆற்றல் (power) அதிகம் தேவையில்லை. கணினிகள், தொலைக்காட்சி, விளையாட்டு முனையங்கள் (game console) ஆகியவற்றின் மின்னோட்டத் தரநிலை (rating) ஒரு ஆம்பியருக்குக் (ampere) குறைவுதான்.  மின்னூர்திகளில் திறன் மின்னணுவியல் இழுவைக்குப் பெரும்பாலும் மூன்றலை மாறுமின் (3-phase AC) மோட்டார்களைப் பயன்படுத்துகிறோம். மின்கலத்தில் கிடைக்கும் 300 க்கும் அதிகமான வோல்ட் மின்னழுத்த நேர்மின்சாரத்தை (DC)  மூன்றலை மாறுமின்சாரமாக… Read More: எளிய தமிழில் Electric Vehicles 12. திறன் மின்னணுவியல் »

எளிய தமிழில் Electric Vehicles 11. மின்கலக் கூறுகளும் தொகுதிகளும்

மின்னழுத்தமும் மின்னோட்டமும் பெட்ரோல் டீசல் கார்களில் ஈய-அமில ( Lead acid) மின்கலங்களைப் பயன்படுத்துகிறோம். இவை 12 வோல்ட் மின்னழுத்தத்தில் 48 ஆம்பியர்-மணி (Ampere hour – Ah) தரநிலை கொண்டவை. அதாவது ஒரு மணி நேரத்துக்கு 48 ஆம்பியர் மின்னோட்டம் வரை தர இயலும். குளிர்காலத்தில் எஞ்சினைத் துவக்கும்போது இவற்றால் 300 முதல் 400 ஆம்பியர் வரை மின்னோட்டம் கொடுக்க இயலும். ஆனால் சுமார் 30 விநாடிகளுக்குத்தான். பல நூறு கி. மீ. பல மணி… Read More: எளிய தமிழில் Electric Vehicles 11. மின்கலக் கூறுகளும் தொகுதிகளும் »

எளிய தமிழில் Electric Vehicles 10. லித்தியம் அயனி இழுவை மின்கலம் வகைகள்

லித்தியம் அயனி மின்கலங்களிலேயே எந்த நேர்மின்முனை, எதிர்மின்முனை, மின்பகுபொருள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துப் பல வகைகள் உள்ளன. NMC வகை லித்தியம் அயனி மின்கலங்கள் நாம் பெட்ரோல் டீசல் கார்களில் ஓட்டத் துவக்குவதற்குப் பயன்படுத்துபவை ஈய-அமில (Lead-acid) மின்கலங்கள். இவற்றில் ஈயம் நேர் மின்முனையாகவும் (anode), ஈய ஆக்சைடு எதிர் மின்முனையாகவும் (cathode), நீர்த்த கந்தக அமிலம் (dilute sulphuric acid) மின்பகுபொருளாகவும் (electrolyte) பயன்படுத்தப்படுகின்றன. மின்னூர்திகளில் இழுவைக்குப் (traction) பயன்படுத்தும் லித்தியம் அயனி (lithium-ion)… Read More: எளிய தமிழில் Electric Vehicles 10. லித்தியம் அயனி இழுவை மின்கலம் வகைகள் »

எளிய தமிழில் Electric Vehicles 9. மின்கல அடிப்படைகள்

மின்னூர்திகளில் மின்சாரத்தை சேமித்து வைக்க நமக்கு ஒரு செயல்திறன் மிக்க நம்பகமான மின்கலம் தேவை. ஆகவே மின்கலங்கள் எந்த அடிப்படையில் வேலை செய்கின்றன என்று முதலில் பார்ப்போம். மின் வேதியியல் வினை (Electrochemical reaction) மின் வேதியியல் மின்கலம் என்பது வேதிவினைகளிலிருந்து மின் ஆற்றலை உருவாக்கும் ஒரு சாதனம் ஆகும். ஒரு முதன்மை (primary) மின்கலம் மீளமுடியாத வேதிவினைகளால் மின்னோட்டத்தை உருவாக்குகிறது. எ.கா. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் மின்கலங்கள். இவற்றை மீள்மின்னேற்றம் (recharge) செய்ய முடியாது. இரண்டாம்… Read More: எளிய தமிழில் Electric Vehicles 9. மின்கல அடிப்படைகள் »

எளிய தமிழில் Electric Vehicles 8. மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார்

தூண்டல் மோட்டாரின் (Induction Motor) அம்சங்களையும் தொடியற்ற நேர்மின் மோட்டாரின் (Brushless DC Motors – BLDC) அம்சங்களையும் மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார் (AC Permanent Magnet Synchronous Motor – PMSM) ஓரளவு கொண்டது. இதன் வடிவமைப்பு தொடியற்ற நேர்மின் மோட்டார் போன்றதே. சுற்றகத்தில் (rotor) நிலைக்காந்தங்களும் நிலையகத்தில் (stator) கம்பிச்சுருள்களும் இருக்கும். ஆனால் இதற்கு மூன்றலை (3 Phase) மாறுமின்சாரம் (AC) கொடுத்து இயக்குகிறோம். ஒத்தியங்கு மோட்டார் என்றால் என்ன? நிலையகத்திலுள்ள கம்பிச்சுருள்களில்… Read More: எளிய தமிழில் Electric Vehicles 8. மாறுமின் நிலைக்காந்த ஒத்தியங்கு மோட்டார் »

எளிய தமிழில் Electric Vehicles 7. மாறுமின் தூண்டல் மோட்டார்

நீரேற்றி (water pump), மின்விசிறி, குளிர் சாதனங்கள், கலவைக் கருவி (mixie), மாவரைக்கும் எந்திரம் (wet grinder) போன்ற பல அன்றாட மின்சாதனங்களில் மாறுமின் தூண்டல் மோட்டாரைப் (AC induction motor) பயன்படுத்துகிறோம். இவற்றில் வீட்டில் பயன்படுத்தும் குறைந்த திறன் சாதனங்களில் பெரும்பாலும் ஒற்றையலை (single phase) மோட்டார் இருக்கும். தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அதிக திறன் சாதனங்களில் மூன்றலை (3-phase) மோட்டார் இருக்கும். மின்கலத்தின் நேர்மின்சாரத்தை (DC) மூன்றலை மாறுமின்சாரமாக  (3-phase AC) மாற்ற வேண்டும் மின்கலம்… Read More: எளிய தமிழில் Electric Vehicles 7. மாறுமின் தூண்டல் மோட்டார் »

எளிய தமிழில் Electric Vehicles 6. நேர்மின் தொடியற்ற மோட்டார்

சந்தையில் பல இருசக்கர மின்னூர்திகளிலும் மூன்று சக்கர மின்னூர்திகளிலும் நேர்மின் தொடியற்ற மோட்டார்கள் (Brushless DC Motor – BLDC) பயன்படுத்தப்படுகின்றன.  இவை எவ்வாறு வேலை செய்கின்றன என்று புரிந்து கொள்வதற்கு முதலில் நேர்மின் தொடி மோட்டார் அடிப்படையைப் பார்ப்போம்.  நேர்மின் தொடி மோட்டார் (Brushed DC Motor) இவற்றில் சுற்றகத்தில் (rotor) கம்பிச்சுற்றுகளும் நிலையகத்தில் (stator) நிலைக்காந்தங்களும் இருக்கும். சுழலும் மின்திசைமாற்றிக்குத் (commutator) தொடிகள் மின்சாரத்தை வழங்குகின்றன. இதனால் சுற்றகம் (rotor) மின்காந்தமாகிச் (electromagnet) சுழல்கிறது.… Read More: எளிய தமிழில் Electric Vehicles 6. நேர்மின் தொடியற்ற மோட்டார் »

எளிய தமிழில் Electric Vehicles 5. மின்மோட்டாரின் அடிப்படைகள்

மின்மோட்டார் என்பது மின்சாரத்தை இயந்திர ஆற்றலாக மாற்றப் பயன்படும் ஒரு சாதனம் ஆகும். இதற்கு நேர்மாறாக மின்னியற்றி (generator) என்பது இயந்திர ஆற்றலை மின்சாரமாக மாற்றப் பயன்படும் ஒரு சாதனம் ஆகும்.  மின்காந்தவியல் (electromagnetism) இவை மின்காந்தவியலைப் பயன்படுத்தி செயல்படுகின்றன. மின்காந்தவியல்படி ஒரு காந்தப்புலத்தில் இருக்கும் கம்பிச்சுருளில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அந்தக் கம்பிச்சுருளில் காந்த முறுக்குவிசை ஏற்படும். இது அந்தக் கம்பிச்சுருளைச் சுழற்ற முயலும். அந்தக் கம்பிச்சுருள் அரை சுற்று சுற்றியவுடன் நாம் மின்சாரத்தின் திசையை மாற்றினால்… Read More: எளிய தமிழில் Electric Vehicles 5. மின்மோட்டாரின் அடிப்படைகள் »