Tag Archives: VPC

அமேசான் இணையச்சேவைகள் – நேட் நுழைவாயில்கள்

தனிப்பட்ட துணைஇணையங்களிலுள்ள மேகக்கணினிகளுக்கு இணைய இணைப்பை வழங்குவதற்கு நேட் நுழைவாயில்கள் உதவுகின்றன. இணைய இணைப்பு கிடைத்துவிட்டால், பொதுத் துணைஇணையத்திற்கும் தனிப்பட்ட துணைஇணையத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடாதா? இணையத்திலிருக்கும் எவராலும், தனிப்பட்ட துணைஇணையத்தை நேட் நுழைவாயில் வழியாக அணுகமுடியுமா? இவற்றுக்கு விடைகாண்பதற்கு நேட் என்றால் என்னவென்று அறிந்துகொள்வது அவசியம். இணையமுகவரி மாற்றம் – Network Address Translation (NAT) சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், நேட் என்பது இடைத்தரகர் போல. தனிப்பட்ட துணைஇணையத்திலிருக்கும் மேகக்கணினியிலிருந்து துவங்கப்படும் இணையப் போக்குவரத்து, நேட் சாதனங்கள்… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – தனிப்பயன் விபிசி

இதுவரையில் நாம் விபிசியின் கூறுகளைப் பற்றியும், ஒவ்வொரு கணக்கிற்கும் அமேசான் உருவாக்கிக் கொடுக்கிற இயல்நிலை விபிசி பற்றியும் அறிந்தோம். அமேசான் இணையச்சேவைகளை முதன்முதலாகப் பயன்படுத்துவோருக்கு, விபிசி பற்றிய எந்தவொரு சிக்கலும் நேராதவண்ணம் இயல்நிலை விபிசிக்கள் பார்த்துக்கொள்கின்றன. முன்னதாக நாம் ஒரு மேகக்கணினியை உருவாக்கியபோதும், அதிலிருந்து ஒரு வலைத்தளத்தை இயக்கியபோதும், விபிசியின் இருப்பைக் கூட நாம் அறிந்திருக்கவில்லை. தொடக்கநிலையில் இருப்போருக்கு இது போதுமானது. ஆனால், பல்வேறு பயனர்களைக் கொண்டவொரு வலைத்தளத்தையோ, செயலியையோ கட்டமைக்கும்போது, இயல்நிலை விபிசிக்கள் மட்டுமே போதுமானதாக… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – அணுக்கக் கட்டுப்பாட்டுப் பட்டியல்கள்

பாதுகாப்புக்குழுக்கள் என்பவை மேகக்கணினிகளின் தீச்சுவர்களாகச் (Firewalls) செயல்படுகின்றன என முந்தைய பதிவில் அறிந்தோம். அதைப்போலவே, ஒரு துணைஇணையத்தின் தீச்சுவராக, அணுக்கக் கட்டுப்பாட்டுப் பட்டியல்கள் (Access Control Lists) செயல்படுகின்றன. மேகக்கணினிகளைப் பொருத்தவரையில், பாதுகாப்புக்குழுக்களும், அணுக்கக் கட்டுப்பாட்டுப் பட்டியல்களும் இணைந்து இரண்டடுக்கு பாதுகாப்பினை வழங்குகிறது. தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில், அணுக்கக் கட்டுப்பாட்டுப் பட்டியல்கள், துணைஇணையத்தின் உள்வருகிற மற்றும் வெளிச்செல்கிற இணையப் போக்குவரத்தினைக் கட்டுப்படுத்துகிறது. இவ்விதிகளை அதிநுணுக்கமாகக் கட்டமைக்கமுடியும். அதாவது, குறிப்பிட்ட நெறிமுறையைப் (Protocol) பயன்படுத்தி, குறிப்பிட்டத் துறை… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – மெய்நிகர் தனிப்பயன் மேகக்குழுமம் – பகுதி 2

நுழைவாயில்கள் பெரும்பாலான சமயங்களில், நமது மேகக்கணினிகளுக்கு இணையத்தொடர்பு தேவைப்படுகிறது. இது உலகளாவிய இணைய இணைப்பாகவோ (Internet), பயனரின் மெய்நிகர் தனிப்பயன் இணைய இணைப்பாகவோ (Virtual Private Network – VPN) இருக்கலாம். இவற்றில் எந்தவகை இணையத்தொடர்பாக இருந்தாலும், அவை, நுழைவாயில்கள் வழியாகவே நடைபெற முடியும். தன்வழியே நிகழும் இணையப்பரிமாற்றங்களுக்கான, இணையமுகவரிகளைப் கண்டறிவது (Network Address Translation – NAT) இவற்றின் முக்கிய வேலையாகும். துணைஇணையத்திற்கும் நுழைவாயிலுக்குமான தொடர்பைப் பொருத்து, துணைஇணையங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். பொதுத் துணைஇணையம்… Read More »

அமேசான் இணையச்சேவைகள் – மெய்நிகர் தனிப்பயன் மேகக்குழுமம் – VPC

EC2, S3 ஆகியவற்றிலிருந்தே, பலர் அமேசான் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். இணையச்சேவையகங்கள் (Web servers), பொருள் சேமிப்பகம் (Object Storage) குறித்த அடிப்படைகள் தெரிந்திருந்தாலே, இவற்றைப் புரிந்துகொள்வது எளிதாகிறது. இதற்கடுத்த படியாக, நமது மேகக்கணினிகளின் பாதுகாப்பு பற்றி பார்க்கும்போது, அடையாள அணுக்க மேலாண்மை (IAM), பாதுகாப்புக்குழுக்கள் (Security Groups), மெய்நிகர் தனிப்பயன் குழுமங்கள் (Virtual Private Cloud – VPC) ஆகியன தென்படுகின்றன. இவற்றில் அடையாள அணுக்க மேலாண்மையையும் (IAM), பாதுகாப்புக்குழுக்களையும் (Security Groups) முந்தைய பதிவுகளில்… Read More »