F droid ஆப் ஸ்டோரில் காணப்படக்கூடிய செயலிகள் குறித்து பார்க்க வருகிறோம்.
தமிழ் 99 விசை பொறி தொடர்பாக, முன்பு ஒரு கட்டுரையில் விவாதித்து இருந்தோம்.
அந்தக் கட்டுரையையும் பார்வையிடவும்
F droid ஆப் ஸ்டோரில் காணப்படக்கூடிய indic keyboard எனும் செயலியை பயன்படுத்தி, உங்களால் தமிழ் 99 விசைபொறியை மொபைல் போனில் பயன்படுத்த முடியும்.

அதையும் கடந்து, மொபைல் ஃபோன்களுக்கான ஒரு கட்டற்ற,திறந்த நிலை விசைப்பொறியை நம்மில் பலரும் தேடிக் கொண்டிருப்போம்.
ஆனால் ப்ளே ஸ்டோரில் காணப்படக்கூடிய பெரும்பாலான விசைப்பொறிகள் பாதுகாப்பானவை அல்ல. என்னதான்! உங்கள் முகத்தை பின்னணியாக வைக்க முடிந்தாலும், அவற்றில் இருக்கக்கூடிய பாதுகாப்பு குறைபாடுகளால், உங்களுடைய வங்கிக் கணக்கு பூஜ்ஜியத்திற்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால், இவற்றோடு ஒப்பிடும் போது சிறந்த பாதுகாப்பான திறந்த நிலை விசைப்பொறியாக f droid ஆப் ஸ்டோரில் கிடைக்கக்கூடிய செயலி தான் indic keyboard.
இந்த விசைப்பொறியில் உங்களால் 20க்கும் மேற்பட்ட மொழிகளை பயன்படுத்த முடியும்.
மேலும், குரல் மூலமாக தட்டச்சு செய்யும் முறையும்( tamil voice typing)
இதில் சிறப்பாக வேலை செய்கிறது.
மிகவும் எளிமையான ஆண்ட்ராய்டு 5,6 போன்ற கருவிகளில் வெளியான விசைப்பொறி போன்ற அமைப்பை பெற்று இருக்கிறது.




மேலும், தமிழ் 99 அடிப்படையிலான கூட்டெழுத்து முறை விசைபொறியும், இங்கு உங்களால் காண முடியும்.
உதாரணமாக, க+அ= ஆ .
என்பது போல உங்களால் தட்டச்சு செய்ய முடியும்.
மேலும், நான் முன்பே குறிப்பிட்டது போல! திறந்த நிலை கட்டற்ற செயலி என்பதால் எவ்வித கட்டணமும் இல்லை. விளம்பரங்கள் கிடையாது! மற்றும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இனிமேலும் ஏன் தாமதிக்கிறீர்கள்! உடனடியாக indic keyboard ஐ பயன்படுத்திப் பாருங்கள்.
கீழே இணைப்பு தரப்பட்டுள்ளது,
f-droid.org/en/packages/org.smc.inputmethod.indic/
மேற்படி இந்த கட்டுரை குறித்த தகவல்களை, F-droid இணையதளம் மற்றும் என்னுடைய மொபைல் போனில் பயன்படுத்தி பார்த்த அனுபவத்தில் எழுதுகிறேன்.
இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
என்னுடைய இன்ன பிற கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பான, கட்டுரைகளை படிக்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும்
kaniyam.com/category/open-source-android-apps/
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
( தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி,
நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com