#விக்கிப்பீடியா_மங்கைகள் – 5
விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றிய அறிமுகம் இது. ஆர்வமும் திறமையும் இருந்தாலும் எனக்கு எங்கே நேரமிருக்கிறது? என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்கள் பலருக்கும் இது ஓர் ஊக்கமாக அமையலாம்.
பூங்கோதை
கோயம்புத்தூரைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். ஓய்வு பெற்ற பின் என்ன செய்யலாம்? என யோசித்தவருக்கு தனது மகனும் விக்கிப்பீடியருமான பாலா ஜெயராமனின் ஆலோசனை மற்றும் ஊக்குவிப்பு கிடைக்க அதன் மூலம் விக்கிப்பீடியாவில் நுழைந்தார். விக்கிப்பீடியாவுக்கென்றே ஒரு நோட்புக் எனப்படும் மடிக்கணினி வாங்கினார்.
2010 ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வரும் இவர், 750 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறந்த உரை திருத்துனரான இவர் புதுப்பயனர்களுக்கு உதவுவது, பிறர் எழுதிய கட்டுரைகளையும் மேம்படுத்துவது முதலிய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுவரை சுமார் 70,000 தொகுப்புகளைச் செய்துள்ளார். தான் இவ்வளவு தொகுத்தேன் எனவும் இத்தனைக் கட்டுரைகள் எழுதினேன் எனவும் ஒருபொழுதும் சொல்லிக்கொள்ளவே மாட்டார். எனது பணி தமிழுக்குத் தொண்டு இதில் கணக்கென்ன? என்பது இவரின் கொள்கை.
2012 இல் தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டியை முன்னிட்டு தமிழ் விக்சனரியில் 6000 க்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுக் கோப்புகளைப் பதிவேற்றியுள்ளார். அதாவது விக்சனரி எனப்படும் அகராதியில் உள்ள சொற்களைப் பேசிப் பதிவு செய்துள்ளார்.
மேலும் 2000 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை பொதுவுரிமத்தில் பதிவேற்றியுள்ளார்.
2012 வாஷிங்டன் டி.சி யில் நடைபெற்ற விக்கிமேனியா நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பின் பூங்கொதை பங்கேற்றுள்ளார். மேலும் இதே ஆண்டுக்கான உலகளாவிய விக்கிமீடியா நிதி சேகரிப்பில் இவரது வேண்டுகோள் சிறப்பான இடம்பெற்றது.
இயற்கணிதத்தில் ஈடுபாடு மிக்க பூங்கோதையின் கட்டுரைகள் பெரும்பாலும் கணிதக்கட்டுரைகளாகவே இருக்கும். இவை அழகுத்தமிழில் கணிதத்தைப் புரியவைப்பவை.
இருபடிச் சமன்பாடு, பரவளைவு, சார்பு, நீள்வட்டம், அதிபரவளைவு முதலியன இவர் பெரிதும் பங்களித்த கட்டுரைகளில் சில. இவரின் பங்களிப்பு மற்ற பெண் பங்களிப்பாளர்களுக்கு ஊக்கம் தருபவையாய் அமைந்தன. ஓய்வு பெற்றபின் என்ன செய்வது என எண்ணுவோர்க்கு இவர் ஓர் சிறந்த உதாரணம். அவரின் விக்கிப்பீடியா அனுபவம் குறித்து கீழ்க்கண்ட காணொளியில் அவரே விளக்குகிறார் பாருங்கள்..
பார்வதிஸ்ரீ