தமிழ் IRC – மே 2, 2020 சந்திப்பு – 8-9 PM IST – #tamilirc – irc.freenode.net

தமிழ் IRC – மே 2, 2020 அன்று இந்திய நேரம் மாலை 8 – 9  (8 PM IST) நடைபெறும்.

கணிணித் தமிழ் தொடர்பான உங்கள் பங்களிப்பு விவரங்கள், புது முயற்சிகள்,
திட்டங்கள், புது திட்ட வேண்டுகோள்கள் ஆகியன பற்றி உரையாடலாம்.

அனைவரும் வாருங்கள்.

webchat.freenode.net/ க்கு இணைய உலாவியில் செல்லுங்கள்.


Nickname என்பதில் உங்கள் உண்மையான பெயர் அல்லது வலையில் நீங்கள்
பயன்படுத்தி வரும் பெயரைத் தாருங்கள்.

Channels என்பதில் #tamilirc என்று தாருங்கள்.

I am not a robot என்பதை அழுத்தி, பின் start பொத்தானை அழுத்தவும்.
பின் கூட்டத்தில் இணைந்து, உங்களைப் பற்றிய அறிமுகம் தந்து உரையாடலைத் தொடங்கலாம்.

சரியாக ஒரு மணி நேரம் உரையாடிக் கலைவோம். இந்த உரையாடல்களைப்
படியெடுத்துப் பாதுகாத்தும் வைப்போம்.

ஒவ்வொரு மாதமும் ஒரு தேதியில் இது போல் உரையாடலாம்.

2015 ல் நடைபெற்ற உரையாடங்களை இங்கே படிக்கலாம். – tamilirc.wordpress.com/

மற்ற விவரங்களைக் கூடி முடிவெடுப்போம்.

ஒருங்கிணைப்பு – கணியம் அறக்கட்டளை

அ.கே.வி
=======

1. ஏன் IRC? meet.jit.si, zoom போன்ற வீடியோ அரட்டைகள் வேண்டாமா?

இணைய இணைப்பு மிகவும் குறைவாக உள்ளவர்களும் IRC ல் இணையலாம். வெறும்
எழுத்துகள் தான் என்பதால், அதிக பேண்ட்விட்த் தேவையில்லை.
கலந்து கொள்ள இயலாதோர், நிகழ்வில் உரையாடியவற்றை, 5-20 நிமிடங்களில்
படித்து விடலாம்.
மேலும் IRC ன் பயன்கள் பற்றி அறிய –
goinggnu.wordpress.com/2020/04/14/why-i-like-irc-internet-relay-chat-even-in-2020/

2. எதைப்பற்றி உரையாடலாம்?

கணித்தமிழ் பற்றிய எதையும். நீங்கள் பங்களித்து வரும் திட்டங்கள், புதிய
முயற்சிகள், நிகழ்வுகள் என பலவும்.

3. IRC பற்றி எங்கு படிக்கலாம்?
பின்வரும் இணைப்புகளைப் பாருங்கள்.

www.kaniyam.com/what-is-irc-an-introduction/
www.whoishostingthis.com/resources/irc-primer/
fedoramagazine.org/beginners-guide-irc/

%d bloggers like this: