நேற்றுதான் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையை எழுதியிருந்தேன். தொடர்ந்து, இன்றும் அடுத்த கட்டுரையை எழுதுகிறேன்.
இந்த கட்டுரையை எழுதுவதற்கு மிக முக்கியமான காரணம், என்னுடைய வீட்டில் வாங்கி ஐந்து நாட்களிலேயே பழுதாகிபோன கால்குலேட்டர் ஒன்று பல ஆண்டுகளாக ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்தது.
தீபாவளியோடு எதர்ச்சியாக இதை காண நேர்ந்தது. இன்றைக்கு அதை ஆர்வத்தோடு பிரித்துப் பார்த்தேன். ஏற்கனவே, கணிப்பான்கள் எவ்வாறு வேலை செய்கிறது? என்பது குறித்து எனக்கு ஒரு அடிப்படை அறிவு இருந்தது.
இருந்த போதிலும், அந்த கணிப்பாணை பிரித்து பார்த்தபோது, அதில் இருந்த எலக்ட்ரானிக் கருவிகள் ஆர்வத்தை தூண்டின.
அப்படி இந்த கால்குலேட்டர்குள் எந்தெந்த எலக்ட்ரானிக் கருவிகள் இருக்கின்றன ? என்பதை பார்ப்பதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இனிப்பை பயன்படுத்தவும்.
kaniyam.com/category/basic-electronics/
முதலில் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய, நான்கு screw களையும் கலக்கி விடலாம்.
நீங்கள் மேலே பார்ப்பது போன்ற மின்சுற்றுதான், இந்த கால்குலேட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
நடுவில் கரும்புள்ளியாக இருக்கும் அதற்குள் தான், உள்ளார்ந்த மின் சுற்று(IC ) அமைந்திருக்கிறது.
உண்மையில், அந்த கருப்பு புள்ளியை போல மிகவும் பெரியதாக எல்லாம் இருக்காது. அதனுடைய, எடுத்துக்காட்டு புகைப்படம் ஒன்றை நான் கீழே வழங்கி இருக்கிறேன்.
உங்கள் விரலின் நகத்தளவிற்கு இருக்கக்கூடிய, இந்த சிறிய பொருள்தான் அனைத்து கணக்கீடுகளையும் செய்வதில் முதன்மை கருவியாக அமைகிறது.
அடுத்து இந்த மின்சுற்றில் நீங்கள் ஆரஞ்சு நிறத்தில் நான்கு கெப்பாசிட்டர்களை பார்க்க முடியும்.
இந்த நான்கு கெபாசிட்டர்களும் உள்ளீட்டு தரவுகளை சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
நான் முன்பே கூறியிருந்தேன், தரவுகள் பூஜ்ஜியம் மற்றும் ஒன்று எனும் அளவிலேயே சேமித்து வைக்கப்படுகின்றன.அதற்காக, இவை பயன்படுத்தப்படுகின்றன.
புகைப்படத்தின் வலது புறம் மேற்புறமாக ஒரு பேட்டரி பொருத்தப்பட்டு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.அதற்கு அருகிலேயே ஒரு கருப்பு நிற 25 மைக்ரோ பாராட் கெபாசிட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனக்குத் தெரிந்தவரை இந்த கெபாசிட்டர் பேட்டரியில் இருந்து வரக்கூடிய மின் ஆற்றலை சரிவர வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
மேலும், இத்தகைய கால்குலேட்டர்களில் சோலார் பேனல்கள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
நாம் முதலிலேயே ஒளிமின் டையோடுகள் கட்டுரையில் பார்த்தது போல, ஒளி ஆற்றலானது நேரடியாக மின் ஆற்றல் ஆக மாற்றப்படுகிறது.
ஆனால், அதில் நிறைய பேர் நினைப்பது என்னவென்றால்! நாம் இந்த கால்குலேட்டர்கலே வெயிலில் வைக்கும் போது இதனுடைய பேட்டரிக்கு சார்ஜ் செய்யப்படும் என்று நினைத்துக் கொள்கிறோம்.
அந்த வகையில் இயங்கக்கூடிய கால்குலேட்டர்களும் சந்தையில் இருந்தாலும், பெரும்பான்மையாக மலிவு விலையில் கிடைக்கக்கூடிய கால்குலேட்டர்களில் நீங்கள் வெயிலில் காண்பிக்கும் போது சோலார் பேனல் வேலை செய்யும்.
ஆனால், அதன் மூலமாக பேட்டரிக்கு சார்ஜ் செய்வது வாய்ப்பில்லாத விஷயம்தான்.
இத்தகைய மின் சுற்றுக்கு மறுபுறம் சிறிய சிறிய தாமரம் பூசப்பட்ட புள்ளிகள் இருக்கும். இதன் மீது சிலிக்கானால் செய்யப்பட்ட நாம் பார்க்கக்கூடிய பட்டன்கள் இருக்கும்.
இதில் ஒரு பட்டனை நாம் அமிழ்த்தும்போது, அதற்கான சங்கேத குறியீடு(binary code) (like 0001) உள்ளார்ந்த மின்சுற்று அனுப்பப்படுகிறது.
அந்த மதிப்பானது எட்டு தசம எல்சிடி(8 segment) திரையில் தெரிகிறது.
மேலும் கூட்டல்,கழித்தல்,பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை நாம் செய்ய! அதற்குரிய பொத்தானை அமுக்கும்போது, அதற்குரிய சபிக்கையானது உள்ளார்ந்த மின்சுற்று அனுப்பப்பட்டு, அங்கே வழங்கப்பட்டுள்ள கெபாசிட்டர்களின் வழியாக மின்சாரம் சேமிக்கப்பட்டு கணக்கீடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இது சற்றே குழப்பக்கூடிய தலைப்பு, உங்களுக்கு அது குறித்த கட்டுரை தேவைப்பட்டால் விரிவாக நான் ஆராய்வு செய்துவிட்டு எழுதுகிறேன்.
பொதுவாக, கால்குலேட்டர்களில் பயன்படுத்தக்கூடிய பரிச்சயமான சிப்(IC ) எதுவென்று நான் இணையத்தில் தேடும்போது, இன்டெல் நிறுவனத்தின் உடைய 4004(intel core 4004)சிப் வகை ஆரம்பகால கால்க்குலெட்டர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதில் 320 பிட் அளவிலான ராம் வசதியும், 2048 பிட் அளவிலான சேமிப்பக வசதியும்( 320bit ram and 2048bit storage)கொடுக்கப்பட்டுள்ளது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாம் எந்த அளவிற்கு எலக்ட்ரானிக் துறையில் முன்னேறி இருக்கிறோம்! என்று.
இதுவே, காசியோ(casio) போன்ற நிறுவனங்களில் விற்கப்படும் அறிவியல் கால்குலேட்டர்களில்(scientific calculators)இதைவிட அதிகப்படியான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் இருக்கும்.
தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவதோடு, இதுபோல அன்றாட கருவிகளில் இருக்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை குறித்தும் கட்டுரைகள் எழுதலாமென முடிவு செய்திருக்கிறேன்.
அதற்காக பழுதான, பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சேகரித்து வருகிறேன். உங்களுக்கும் இதுகுறித்து தெரிந்தால் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்.
கருத்துக்கள் இருப்பினும் தெரிவியுங்கள்.
மீண்டும் ஒரு சுவாரசியமான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் சந்திப்போம்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com