பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, இந்திய விக்கி அறிவியல் மாதம் 2018ஐ முன்னிட்டு பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). இதன் நோக்கம் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும், பெண்கள் நலன் சார்ந்த கட்டுரைகளைச் செம்மைப்படுத்துவதும் ஆகும்.
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018 தொடர்தொகுப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அக்டோபர் மாதம் 28ஆம் திகதி ஞாயிறு அன்று நேரடி சந்திப்பு நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள விக்கிப்பீடியர்கள் கீழே தங்கள் பெயரை பதிவு செய்யலாம். இங்கே பதிவு செய்க – ta.wikipedia.org/s/7dn8
இடம்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, இடைமலைப்பட்டிப் புதூர்,திருச்சி
நிகழ்வு ஒருங்கிணைப்பு
நிகழ்வு
28-10- 2018 ஞாயிறு.
- 10:00 – 10:30 மருத்துவருடன் பெண்கள் நலன் சார்ந்த ஓர் உரையாடல்
- 10:30 – 11:00 தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுத்தல், பொதுவகம் பற்றிய விளக்கம்
- 11:00 – 11:20 தேநீர் இடைவேளை
- 11:20 – 1:00 புதியவர்களுக்கான கணக்குத் தொடங்குதல், தொகுத்தல்.
- 1:00 – 2:00 மதிய உணவு இடைவேளை
- 2:00 – 4:00 பெண்கள் நலன்சார்ந்த கட்டுரை உருவாக்கம் மற்றும் தொகுத்தல், தேநீர் வழங்கல்.
(நிகழ்வுகள் மாறுதலுக்குட்பட்டது)
மேலும் விவரங்களுக்கு – ta.wikipedia.org/s/7dfq