மதுரையில் விக்கிப்பீடியா நிகழ்வு – நவம்பர் 30 2019

வணக்கம்,
இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்றுப் பரிசை அள்ளும் அணியில் நீங்களும் இடம் பெற வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப் பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம். அதன் பொருட்டு மதுரையில் விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு நடக்கவுள்ளது. அதாவது மாரத்தான் போல ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுதல். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதவும் நீங்களும் கலந்து கொள்ளலாம். விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

நாள்: நவம்பர் 30 2019 (சனி)
நேரம் – காலை 10.00 – மாலை 5.00  (இதற்கிடையே வரலாம்)

இடம் : மன்னர் கல்லூரி, பசுமலை, மதுரை
இணைய இணைப்புள்ள மடிக்கணினியுடன் கலந்து கொள்ள வேண்டும். அனுமதி இலவசம்

முன்பதிவு செய்யுங்கள். forms.gle/r3omu6D6nHxdU3dm9
நிகழ்ச்சி நிரல்:
போட்டி அறிமுகம்
போட்டி தொடர்பான வழிகாட்டால்
கொடுத்துள்ள தலைப்பில் கட்டுரை உருவாக்கம்
கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு
தமிழ்க் களஞ்சியத்தை வெற்றி பெற வைக்கவேண்டுமா?
வலைப்பதிவு: tamilwikipedia.blogspot.com/2019/10/project-tiger-writing-contest.html
புள்ளிவிவரம்: tools.wmflabs.org/neechal/tigerarticle.html
அன்புடன்,
நீச்சல்காரன்

%d bloggers like this: