கட்டற்ற தரவு களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியா தளத்தில், தமிழ் கட்டுரைகளை நிறைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நாளில் அதிகப்படியான கட்டுரைகளை எழுதக்கூடிய மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளக்கூடிய! விக்கிபீடியா மாரத்தான் நிகழ்வுகள் ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தப்படுகிறது.
தமிழ் மொழிக்கான விக்கி மாரத்தான் 2024 நிகழ்வானது,அக்டோபர் 13 2024 அன்று தொடங்குகிறது. அன்று காலை 6:00 மணியிலிருந்து, அடுத்த நாள் காலை 6 மணி வரை சரியாக 24 மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்று, கட்டுரைகளை எழுதுவதற்கு எவ்வித நுழைவு கட்டணமும் கிடையாது.
தமிழ் மீது பற்று கொண்ட யாரும் இதில் பங்கேற்றுக் கொள்ளலாம்.
எவ்வாறு விக்கிபீடியாவில் எழுதுவது? என உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அது குறித்து கணியத்திலேயே பல கட்டுரைகள் இருக்கிறது.
இந்த ஆண்டு இரண்டு முக்கிய குறிக்கோள்களை முன்னிறுத்தி இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
1. கூகுள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட விக்கிபீடியா கட்டுரைகளை மேம்படுத்துதல்
2. மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்களை சேர்த்தல்.
இந்த இரண்டும் மட்டும் தான் எழுத வேண்டுமா,? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. உங்களுக்கு விருப்பமான துறையில் விக்கிபீடியாவிற்கு, இந்த நாளில் நீங்கள் பங்களிக்கலாம்.
இலக்கணப் பிழைகளை நீக்குதல், கணினி தொடர்பான புதிய கட்டுரைகளை எழுதுதல்,ஏற்கனவே இருக்கக்கூடிய கட்டுரைகளில் படங்களை சேர்த்தல், மேலும் கட்டுரைகளில் உள்ள தரவுகளை புதுப்பித்தல் போன்ற பணிகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.
தமிழ் மீது ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வு இது.
இதற்காக அந்த 24 மணி நேரமும் நீங்கள் வேலை செய்ய வேண்டியதில்லை. உங்களால் இயன்ற பத்து நிமிடத்தை யாவது இந்த நிகழ்விற்கு நீங்கள் வழங்கலாம்.
இதன் மூலம்,தமிழ் சமூகத்தின் இணைய வளர்ச்சி மென்மேலும் உயர்ந்த நிலையை அடையும்.
விக்கிபீடியாவில் புதியதாக பல தரவுகளையும் தமிழில் அறிய முடியும்.
மேற்படி இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கும் ,இந்த நிகழ்வில் முக்கியமாக விவாதிக்கப்படக்கூடிய, கவனிக்கப்படக்கூடிய தலைப்புகள் குறித்தும் அறிந்துகொள்ளே கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
இந்த தகவலை உங்களுடைய தமிழ் ஆர்வம் கொண்ட நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பகிருங்கள்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி,
நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com