ஆவணங்களை எழுத எம்எஸ்வேர்டுக்கு பதிலாக LaTeX ஐப் பயன்படுத்திகொள்க

அழகான ஆவணங்களை எழுத விரும்பினால், அதற்கு LaTeXதான் சிறந்த கருவியாகும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இது அடிப்படையில் ஆவணங்களை உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய ஒரு நிரலாக்க மொழியாகும், பயன்படுத்த எளிதான தொடரியல், இது கொண்டுள்ளதால் நாம் விரும்பும் அளவிற்கு எளிதாக அல்லது மேம்பட்டதாக உருவாக்கலாம். மேலும் இதனுடன் Overleaf போன்ற கருவிகள் இணைந்து இருப்பதால் இது Google Docsஐப்போன்றே அருமையாக செயல்படுகின்றது, தற்போது நாம் எழுதுவதற்காகவென நம்முடைய சொந்த LaTeX சூழலை அமைக்க வேண்டியதில்லை, ஆனால் தொகுப்புகளுக்கான (packages) ஆதரவுடன் LaTeX இல் எழுதிடுவதற்குகூட நம்மை அனுமதிக்கிறது. , .
ஏற்கனவே நாம் உருவாக்கிடுகின்ற ஆவணங்களுக்கு LaTeX ஐப் பயன்படுத்த வில்லை எனில், கண்டிப்பாக உடனடியாக பயன்படுத்த தொடங்கிடுக. அதனுடன் எழுதப்பட்ட ஆவணங்களை காண்பதற்கான எண்ணற்ற வழிமுறைகளும் வாய்ப்புகளும் உள்ளன, மேலும் அறிவியலின் பெரும்பாலான ஆய்வுகட்டுரைகள் LaTeX இல்தான் எழுதி வெளியிடப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்க. , ஏனெனில் அதற்கான சில முக்கிய காரணங்கள் பின்வருமாறு.
5 தொழில்முறை வடிவமைப்பு-
ஆவணங்கள் அழகாக இருக்க வேண்டுமா? அவ்வாவணங்கள் தனித்து நிற்க LaTeX ஆனது ஒரு சிறந்த வழியாகும், குறிப்பாக resume போன்றவற்றில் செயல்படுகின்றோம் எனில். நாம் பயன்படுத்திகொள்வதற்காக எண்ணற்ற மாதிரிபலகங்கள் இதில் உள்ளன, அங்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமக்காக ஏற்கனவே அங்குள்ள உரையைத் திருத்துவதுதான். இதற்காகவென தனியாக நிரலாக்க அனுபவம் எதுவும் நமக்குத்தேவையில்லை, மேலும் சுத்தமான தளவமைப்புடனும் தொழில்முறை தோற்றத்துடனும் உள்ளன, அதன் போட்டியாளரை விட உடனடியாக கூடுதல் நன்மையைப் பெற்றிடுவோம்.
ஒரு அறிவியலின்ஆய்வறிக்கையில் அல்லது அறிவியல்ஆய்வுக் கட்டுரையில் பணிபுரிகின்றோம் எனில், அவ்வாறான ஆய்வுகட்டுரையின் உரையில் மட்டும் நாம் கவணம் செலுத்தினால் போதுமானதாகும் இடையிடையே பொதுவாக சமன்பாடுகளை கொண்டுவரவிழைகின்ற போது அதற்காக, உண்மையான குறியீட்டுடன் சமன்பாடுகளை எழுதுவதற்கு பயன்படுத்தக்கூடிய விதிவிலக்கான கணித நூலகங்கள் இதில் உள்ளன. இது முழுமையான கணித சூத்திரங்களின்தட்டச்சு அமைப்புடன் அனைத்து கணித சின்னங்களுக்கும் ஆதரவைக் கொண்டுள்ளது.
4 தனிப்பயனாக்குதல்-
எப்போதாவது வேர்டில் ஆவணத்தைத் தனிப்பயனாக்க முயற்சிக்கும்போது, ​​நாம் விரும்பியபடி குறிப்பிட்ட பக்கத்தைப் பெறுவதில் அதிக சிரமப்பட்டிருப்போம்? LaTeX இதை நம்பமுடியாத அளவிற்கு எளிதாக்குகிறது, மேலும் ஆவணத்தின் பக்க அளவுருக்களின் அளவு , விளிம்பு போன்றவை ஆவணத்தின் தொடக்கத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ளன. சொடுக்குதல்குகளை செய்யக்கூடிய பட்டியலான வாய்ப்பினைக் கண்டறிய முயற்சிப்பதற்குப் பதிலாக, மீண்டும் மேலே இடம்சுட்டியால் ஆவணத்தில் உருட்டி சென்று ஆவணத்தின் மேல்முதன்மை பக்கத்தில உள்ள ஒரு அளவுருவின் மதிப்பை மாற்ற வேண்டும், அதை மீண்டும் தொகுத்து, உடனடியாக முடிவுகளை காணலாம்.
கூடுதலாக, பயன்படுத்தக்கூடிய பெரிய எண்ணிக்கையிலான தொகுப்புகளுடன், அனைவருக்கும் ஒவ்வொரு வகை ஆவணத்திற்கும் ஏதாவது வசதி கூட இதில் உள்ளது. இது LaTeX கல்வித்துறைக்கு மட்டுமல்ல; மேலும் எளிமையான செயல்திட்டங்களுக்கு சிறந்ததாக இருக்கின்றது.
3 பதிப்பு கட்டுப்பாடு ஆதரவு
Git போன்ற பதிப்பு கட்டுப்பாட்டினை நிரலாக்கங்களுக்கு மட்டுமல்லாமல் அதை அனைத்து வகையான உற்பத்தி பணிகளுக்கும் பயன்படுத்திகொள்ளலாம். LaTeX அவற்றில் ஒன்று, அதை வளாக கணினியில் நிறுவுகைசெய்தால், நமக்கான LaTeX கோப்புறையில் Git களஞ்சியத்தைத் தொடங்கலாம் பெரிய புதுப்பிப்புகளைச் உருவாக்கிடும்போது உறுதிபடுத்திகொள்ளலாம். நான் எனது கணினி அறிவியல் பட்டப்படிப்பை முடித்தபோது எனது இளங்கலை ஆய்வறிக்கைக்காக இதைச் செய்தேன், அது வியக்கத்தக்க வகையில் நன்றாக செயல்படுகின்றது.
கண்டிப்பாக, Git என்பதைப் பயன்படுத்த விரும்பினால் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு கருவியாகும், ஆனால் பெரிய ஆவணங்களுக்கு, மாற்றங்களை நிர்வகிப்பதையும் முந்தைய நிலைக்குச் செல்வதையும் மிகவும் எளிதாக்குகின்றது என்பதால், அதைப் பற்றிப் புரிந்துகொள்வது நல்லது தேவைப்பட்டால் திருத்தங்கள். கட்டணத் திட்டத்தில் Overleaf போன்ற கருவிகள் உள்ளமைக்கப்பட்ட Git ஆதரவையும் வழங்குகின்றன, அதை வளாககணினியில் இயக்க விரும்பவில்லை என்றால், நமக்கான ஒருங்கிணைப்பைக் கையாள முடியும்.
2 LaTeX மேற்கோள்களை செய்வதை எளிதாக்குகிறது-
ஆவணங்களில் இடையிடையே மேற்கோள்களை செய்ய வேண்டும் என்றால், LaTeX தான் மிகச் சிறந்ததாகும். ,மேற்கோள்செய்வதற்கான அடிப்படையாக ஒவ்வொரு மேற்கோளிற்கும் ஒரு பெயருடன் ஒரு பட்டியலை வரையறுத்திடுக, மேலும் மேற்கோளுடன் சொற்றொடரை எழுதும்போது, ​​மேற்கோள் கட்டளையை பெயருடன் குறிப்பிடுக. இன்னும் சிறப்பானது என்னவென்றால், இது ஆவணத்தின் முடிவில் எண்ணிடுதல் , பட்டியலிடுதல் மேற்கோள்களைக் கையாளும் அதே வேளையில், அடிக்குறிப்பில் ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தனி மேற்கோள்களையும் உட் செருகிவிடுகின்றது.
மேற்கோள்களைப் பயன்படுத்தும் ஆவணங்களை எழுதுகின்றபோது மேற்கோள்களை காண்பிக்கவேண்டுமே அதிலேயே கவணத்தைகொண்டுசென்று அதிகஅளவு சிந்திக்காமல், அதற்குப் பதிலாக கட்டுரையை எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்த முடியும். அனைத்திற்கும் மேலாக, இது அட்டவணையையும் உள்ளடக்க அட்டவணையையும் தானாக இணைப்பதன் மூலம் கையாளுகின்றது, இதனால் ஆவணத்தைப் படிக்கும் நபர் குறிப்பிட்ட மேற்கோளிற்குச் செல்ல சொடுக்குதல் செய்திட வசதியாகும்.
1 LaTeXஆனது ஒரு கட்டற்றதும் கட்டணமற்றதுமாகும்
இதனுடன் இணைந்து செயல்படுகின்ற Overleaf போன்ற சேவைகளானவை கட்டணச் சந்தாக்களைக் கொண்டிருந்தாலும், LaTeX பயன்படுத்த முற்றிலும் கட்டணமற்றது. இது முழுக்க முழுக்க திறமூலமாகும், மேலும் ஆவணங்களை உருவாக்க எண்ணற்ற பல்வேறு எழுதும் சூழல்களில் இருந்து நாம் விரும்பியதை தேர்வு செய்யலாம். NAS அல்லது சில வகையான home lab இருந்தால், நம்முடைய சொந்த Overleaf சேவையாளரை புரவலராக செய்யலாம். இதன் மூலம் நம்முடைய சொந்த வன்பொருளில் நம்முடைய ஆவணங்களை நிர்வகிக்கலாம். . Overleaf இன் சமூகப் பதிப்பு நாம் விரும்பும் பலருடன் ஒத்துழைக்க உதவுகிறது, அதே நேரத்தில் Git ஐ யும் ஆதரிக்கிறது.
LaTeX இன் திறமூல இயல்பினால் இவை அனைத்தும் செயல்படுத்தப்படுகின்றது, மேலும் எண்ணற்ற பிற வாய்ப்புகளும் உள்ளன, சொந்த சேவையகத்தை ஓம்புதல் செய்யும் போது நாமே முயற்சி செய்யலாம். மேலும் Overleaf இன் கட்டணமற்ற பதிப்பு நம்முடைய பணிக்கு போதுமானதாக இருக்கலாம், நாம் விரும்பினால் TexMaker போன்றவைகளையும் நம்முடைய சொந்த கணினியில் இயக்கி பயன்படுத்தலாம்.

%d bloggers like this: