இந்த கட்டுரையில், டைப்ஸ்கிரிப்ட் , ஜாவாஸ்கிரிப்ட் ஆகியஇரண்டின் வசதி வாய்ப்புகள், நன்மைகள் , தீமைகள் ஆகியவற்றினை நாம் விவாதிக்க விருக்கின்றோம், இதன் மூலம் புத்திசாலித்தனமாக இவ்விரண்டில் சிறந்தவொன்றைதேர்வு செய்யலாம்.
தற்போதைய சுறுசுறுப்புடன்,இணைய மேம்பாட்டிற்கு ஜாவாஸ்கிரிப்ட் அல்லது டைப்ஸ்கிரிப்ட் ஆகியவற்றில் எந்த நிரலாக்க மொழியைப் பயன்படுத்துவது என்பது தற்போது முடிவில்லாத விவாதங்களில் ஒன்றாகும்: .
ஜாவாஸ்கிரிப்ட் , டைப்ஸ்கிரிப்ட் ஆகியன பற்றி தெரிந்து கொள்ளுதல்
ஜாவாஸ்கிரிப்ட் என்பது பல்வேறு நிரலாக்க வழிகளை ஆதரிக்கின்ற பல்துறை கணினிமொழியாகும். இதன்மூலம் நிகழ்வுகளைக் கையாளலாம், செயலிகளுடன் இணைந்து செயல்படலாம் , பொருட்களை உருவாக்குவதற்கு முன்மாதிரிகளைப் பயன்படுத்தலாம். ஜாவாஸ்கிரிப்ட்ஆனது நிரலாக்கத்தில் பொருள் சார்ந்த,, அறிவிப்பு பாணிகளை ஆதரிக்கிறது. இது மாறும்தன்மைகொண்டது, அதாவது இதன்வகைகள் நெகிழ்வானவை அவைகளை இயக்க நேரத்திலேயே மாற்றலாம்.
டைப்ஸ்கிரிப்ட்ஆனது ஜாவாஸ்கிரிப்ட் போன்றதே, ஆனால் பெரிய அளவிலான பயன்பாடுகளில் உள்ள சிக்கல்களைத் தீர்வுசெய்கிறது. இது நிலையான வகை சரிபார்ப்பை உள்ளடக்கியது, இது இயக்க நேரத்திற்கு முன் பிழைகளைப் கண்டுபிடிக்கிறது, நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது. இணைய உலாவியில் இயங்கும் முன் டைப்ஸ்கிரிப்ட்ஐ ஜாவாஸ்கிரிப்ட்டில் தொகுக்கப்பட வேண்டும்.
ஜாவாஸ்கிரிப்ட் , டைப்ஸ்கிரிப்ட் ஆகியவற்றின் நன்மைகள்
டைப்ஸ்கிரிப்ட் நிலையான தட்டச்சு திறன்மிக்கது, அதன் இயந்திரமொழி மாற்றியின் மூலம் இயங்கும் நேரத்திற்கு முன் பிழைகளைகண்டுபிடிக்கிறது. இது மேம்படுத்துநர்கள் மிகவும் நம்பகமான குறிமுறைவரிகளைஎழுத உதவுகிறது. குறைவான தவறுகளுடன் விரைவான நிரலாக்க மேம்படுத்துதலுக்கு IntelliSense போன்ற வசதிகளை வழங்குகிறது.
மேம்படுத்துநர்கள் tsconfig.json எனும் கோப்பைப் பயன்படுத்தி டைப்ஸ்கிரிப்ட் தொகுப்பை உள்ளமைக்க முடியும். இது பழைய இணையஉலாவிகளுடன் இணக்கத்தன்மைக்காக ECMAScript எனும் பதிப்புகள் போன்ற அளவுருக்களை அமைக்க அனுமதிக்கிறது. பல்வேறு வாய்ப்புகளுடனான கண்டிப்பான இந்த பயன் முறையானது கூடுதலாக சரியான பரிசோதனைகளை வழங்குகிறது.
டைப்ஸ்கிரிப்ட்ஆனது அனைத்து உலாவிகளிலும் ES6 , ES7 ஆகிய வசதிகளை ஆதரிக்கிறது, நவீன JavaScript திறன்களைப் பயன்படுத்தும் போது குறிமுறைவரிகள் வெவ்வேறு சூழல்களில் செயல்படுவதை உறுதி செய்கிறது. இது சமீபத்திய கணினிமொழிகளின் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் எதிர்கால-சான்று தேவைப்படுகின்ற பயன்பாடுகளுக்கு உதவுகிறது
டைப் ஸ்கிரிப்டை எப்போது பயன்படுத்த வேண்டும்
பின்வரும் நிபந்தனைகளுடன்,செயல்திட்டப்பணிக்கு TypeScript உதவியாக இருக்கும்:
1. பெரிய அளவிலான செயல்திட்டங்கள் , 2. குழுவான மேம்பாடு: , 3. கட்டமைப்பு களுடனும் நூலகங்களுடனும் பணிபுரிதல்:4. நம்முடைய குறிமுறைவரிகளுக்கு எதிர்காலச் சான்று தேவைப்படும்போது: ஆகிய பணிகளுக்கு டைப் ஸ்கிரிப்டை பயன்படுத்தி கொள்ளலாம்
ஜாவாஸ்கிரிப்ட்டை எப்போது பயன்படுத்த வேண்டும்
1. சிறிய அல்லது தனிப்பட்ட செயல்திட்டம்: , 2. விரைவான முன்மாதிரி: ,3. டைப்ஸ்கிரிப்ட் குறித்த தெரிந்து கொள்ளாமை: ஆகிய பணிகளுக்கு ஜாவாஸ்கிரிப்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.
பெரிய செயல்திட்டம் எனில் டைப் ஸ்கிரிப்டை யும் சிறிய அளவிலான பயன்பாடுகளெனில் ஜாவாஸ்கிரிப்ட்டையும் பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது.