சென்ற இதழில் உள்ளீடு(input) மற்றும் “விடுபடு தொடர்” (Escape Sequence) என்பதை பார்த்தோம். இப்போது மாறிகள்/மாறிலிகள் மற்றும் அதன் பயன்களை (Variables and uses) பார்ப்போம்
மாறிகள்(variables):
மாறிகள் எனபது ஒரு பெயர் – அது சேமிப்பு இடத்தை (Storage Location pointed by a name) குறிக்கும். எடுத்துக்காட்டாக வேகம்(Speed) என்பதை “S” என்ற பெயரில் குறிக்கலாம். இது எந்த ஒரு எண்ணாகவும் இருக்கலாம்.
மாறிலிகள்(Constants)
மாறிலிகள் என்பதுவும் ஒரு பெயரே. ஆனால் இதன் மதிப்பு எப்போதும் மாறாது. எடுத்துக்காட்டாக கணிதத்தில் பை(pi – π) என்ற மாறிலியை அனைவரும் அறிவோம். அதன் மதிப்பு 3.143.இது எப்போதும் மாறாது. இதனை “PI = 3.143” என்று குறிப்போம்.
மாறிகளை கீழ்கண்டவாறு நாம் குறிப்பிடுவோம்
<Data Type> <Variable Name List>
இங்கு Data Type என்பது மாறியை குறிக்கும் வகையாக கறுதப்படுகிறது. Variable Name List என்பது மாறிகளின் பெயர் வரிசை. இவற்றை பற்றி கீழே காண்போம்.
தரவு வகைகள்(Data Types):
இந்த மாறிகள் மற்றும் மாறிலிகள் வகைப்படும்.
௧. முழு எண் (integers)
௨. தசம எண் (floating points)
௩. உருச்சரம் (Characters)
௧. முழு எண் (integers)
முழுமையான எண்களை குறிக்க இவ்வகை மாறிகள் பயன்படுகின்றன. இவற்றை கீழ்கண்டவாறு நாம் குறிக்கலாம்
int a,b,c;
இங்கு a என்பது ஒரு மாறி ஆகும். அதனைப் போலவே b,c ஆகியனவும் வெவ்வேறு மாறிகள் ஆகும். இவற்றில் நாம் முழு எண்களை பதித்து வைக்க முடியும்.
௨. தசம எண் (floating points)
இது தசம எண்களை குறிக்க பயன்படுகிறது. இவற்றை கீழ்கண்டவாறு நாம் குறிக்கலாம்.
float d,e,f;
௩. உருச்சரம் (Characters)
இது உருச்சரங்களை (characters like A-Z a-z 0-9 etc )பதிக்க பயன்படுத்தபடுகிறது..
char g,h,i;
மாதிரி நிரல்:
/*datatypesamples.c*/
#include<stdio.h>
int main()
{
char name[20];
int age;
float height;
printf(“Please enter your name, age and height :”);
scanf(“%s %d %f”,name,&age, &height);
printf(“\nThank you Mr.%s”,name);
printf(“\nYour age : %d your height : %f\n”,age, height);
return 0;
}
Output
$ gcc datatypesamples.c
$ ./a.out
Please enter your name, age and height :john 30 5.8
Thank you Mr.john
Your age : 30 your height : 5.800000
இங்கு int, float மாறிகள் நேரிடையாக பயன்படுதிருக்கிறோம். ஆனால் char மாறி அருகில் [10] என்று ஒன்று உள்ளது. அதன் பெயர் வரிசை (array). அவற்றை பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.