திறமூல (Drupal) தகவமைவினை கொண்டு வலைத்தளத்தை எளிதாக அணுகக் கூடியதாக மாற்றிடுக

இணையதளங்களின் அணுகல் என்பது தொடர்ந்து வளர்ந்து வரும் கவலையாக இருப்பதால், இணையதள உரிமையாளர்களும் மேம்படுத்துநர்களும் தங்கள் இணையதளங்கள் அமெரிக்கர்களின் மாற்றுத்திறனாளிகளின் சட்டத்திற்கு (Americans with Disabilities Act (ADA)) இணங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான நிலையில் Drupal, ஒரு பிரபலமான திறமூல உள்ளடக்க மேலாண்மை அமைப்பு (CMS) திகழ்கின்றது, மேலும் நம்முடைய வலைத்தளம் அனைத்து பயனர்களுக்கும் அவர்களின் திறன்களைப் பொருட்படுத்தாமல் அணுகுவதை உறுதிசெய்ய பல்வேறு கருவிகளையும் தகவமைவுகளையும் வழங்குகிறது.
ஏன் இணையதள அணுகல் முக்கியமானது
பல காரணங்களுக்காக இணையதள அணுகல் முக்கியமானது. முதலில், மாற்றுத்திறனாளிகள் கூட இணையதளத்தை எளிதாகஅணுகி பயன்படுத்தி கொள்ளமுடியும் என்பதை இது உறுதி செய்கிறது. இதில் பார்வை, செவித்திறன், உடல் , அறிவாற்றல் குறைபாடுகள் உள்ளவர்களும் அடங்குவர். அவர்கள்அனைவரும் இணையதளத்தை அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம், சட்டத்திற்கு இணங்குவது மட்டுமின்றி அனைத்து பயனர்களுக்கும் சிறந்த அனுபவத்தையும் வழங்குகின்றோம்.
கூடுதலாக, வலைத்தள அணுகல்தன்மை வலைத்தளத்தின் தேடுபொறி உகப்பாக்கத்தினை (SEO) மேம்படுத்தலாம் வலைத்தளத்தின் பயன்பாட்டினை அதிகரிக்கலாம். தேடுபொறிகள் எளிதாகஅணுகக்கூடிய வலைத்தளங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன, மேலும் பயனர்கள் இணையதளத்தில் அதிக நேரம் இணையஉலாவருவதன்மூலம், உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தால் அவ்வாறு ஈடுபட வாய்ப்புள்ளது.
ADA இணக்கத்திற்கான அடிப்படை தேவைகள்
ADA க்கு அனைத்து இணையதளங்களும்எண்ணிம உள்ளடக்கமும் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். ADA இணக்கத்திற்கான சில அடிப்படைத் தேவைகளில் பின்வருவன அடங்கும்:
1.அனைத்து படங்கள் உரை அல்லாத உள்ளடக்கத்திற்கு மாற்று உரை விளக்கங்களை வழங்குதல்.
2.அனைத்து கானொளிகாட்சிகளிலும் தலைப்புகளும் உரைமாற்றிகள் இருப்பதை உறுதி செய்தல்.
3. வலைத்தளத்தை மேலும் படிக்கக்கூடியதாக மாற்ற வண்ண மாறுபாடு ,பிற வடிவமைப்பு கூறுகளைப் பயன்படுத்துதல்.
4. இசை விளக்கங்கள் ,விசைப்பலகை வழிசெலுத்தல் போன்ற உள்ளடக்கத்தை அணுக மாற்று வழிகளை வழங்குதல்.
5. இணையதளம் திரைபடிப்பான்கள் பார்வையற்றவர்களுக்கான வெளியீடுகள் போன்ற உதவிகரமான தொழில்நுட்பங்களுடன் இணக்கமாக இருப்பதை உறுதி செய்தல்.
இவ்வாறான ADA இன்இணக்கத்தை அடைய Drupal எவ்வாறு உதவும்
வலைத்தள அணுகல் , ADA இன் இணக்கத்தை அடைவதற்கக உதவ பல்வேறு கருவிகளையும் தகவமைவுகளையும் Drupal வழங்குகிறது. அவைகளுள் மிகவும் பயனுள்ளதாக இருப்பவை பின்வருமாறு:
3.1.Accessibility Checker: இது பொதுவான அணுகல்தன்மைச் சிக்கல்களுக்கு இணைய தளத்தை வருடுதல் செய்து மேம்பாடுகளை பரிந்துரைக்கிறது.
3.2.Color Contrast Analyzer : இது இணையதளத்தின் வண்ண மாறுபாட்டை பகுப்பாய்வு செய்து, படித்திடும்திறனை மேம்படுத்த மாற்றங்களைச் செய்கிறது
3.3.Block ARIA Landmark Roles : இது தளத்தின் மார்க்அப்பில் WAI-ARIA பயன்பாட்டை மேம்படுத்துகிறது. வலைபூவின் உள்ளமைவு படிவத்தின் மூலம் வலை தளத்தின் தளவமைப்பில் உள்ள ஒவ்வொரு கூறிற்கும் நேரடியாக ARIA நிலக்குறிப்பு அடையாளங்கள் மற்றுகின்றது/அல்லது ARIA லேபிள்களை ஒதுக்க இந்த கூறு அனுமதிக்கிறது.
3.4.Civic Accessibility Toolbar: மாற்றுத்திறனாளிபயனர்கள் இணையதளங்களில் உலாவரவுவும், தொடர்பு கொள்ளவும் உதவுக்கூடிய அணுகல் கருவிகளை வழங்குகிறது.
3.5.htmLawed: HTML ஐ கட்டுப்படுத்தி சுத்திகரிப்பதன் மூலம் இணைய தரநிலைகள் நிர்வாகக் கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது.
3.6.Text Resize : இணையதளபக்கத்தில் சரிசெய்யக்கூடிய உரை அளவு மாற்றி அல்லது பெரிதாக்கியின் செயல்பாட்டைக் காண்பிப்பதன் மூலம் இணைய அணுகலை மேம்படுத்துகிறது.
7.Automatic Alternative Text : மாற்று உரை (alt text) இல்லாதபோது படத் தலைப்பை உருவாக்க மைக்ரோசாஃப்ட் அஸூர் அறிவாற்றல் சேவைகள் API ஐப் பயன்படுத்திகொள்கிறது.
முடிவாக: இணையத்தள அணுகல் , ADA இணக்கத்தை உறுதிப்படுத்துவது சட்ட காரணங்களுக்காக , அனைத்து பயனர்களுக்கும் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவதற்கும் முக்கியமானது. அணுகல்தன்மை சரிபார்ப்பிலிருந்து வண்ண மாறுபாடு பகுப்பாய்வி வரை, Drupal ஆனது வலைத்தளம் ADA-இணக்கமானதா என்பதை உறுதிப்படுத்த பல்வேறு வழிகளை வழங்குகிறது. Drupal இன் கருவிகள் தகவமைவுக்கூறுகளைப் பயன்படுத்தி,ள் இணையதளத்தை இணையதளத்தினை அனுகுபவர் அனைவரின் திறன்களையும் பொருட் படுத்தாமல் அணுகக்கூடியதாக மாற்றலாம் அவர்களுக்கு சிறந்த பயனர் அனுபவத்தை வழங்கலாம்.

%d bloggers like this: