மாறிவரும் தொழில்நுட்ப உலகில், நம்முடைய அலுவலகங்களை ஆளும் அந்த பெரிய, பருமனான மேசைக்கணினிகள் மெதுவாக மறைந்து வருகின்றன. தொழில்நுட்பம் சிறியதாகவும் சிறப்பாகவும் இருப்பதால், கணினியில் நமக்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஒற்றையான அட்டை கணினியாக (single-board computer (SBC)) சந்தித்திடுக – இது சமீப காலமாக அதிக கவனத்தை ஈர்த்து வரும் சிறிய, மலிவான, வியக்கத்தக்க சக்திவாய்ந்த சாதனமாகும்.
செயல்பாடுகள் எதையும் இழக்காமல் கணினியின் அளவைக் குறைப்பது பற்றி சிந்திக்கின்றோம் அல்லது எளிமையான, குறைந்த தொழில்நுட்பத்தை சார்ந்து வாழ்வதில் ஆர்வமாக இருக்கின்றோம் எனக்கொள்க. அப்படியானால், நாம் தேடுவது இந்த SBCஆக இருக்கலாம். மேசைக்கணினிசெய்திடுகின்ற பல்வேறு பணிகளை ஒரு SBCஆல் எவ்வாறு செய்ய முடியும் என்பதற்கான ஏழு காரணங்கள் பின்வருமாறு.
7 SBCகள் சுற்றுச்சூழல் கருத்தாய்வுகளுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கின்றன
குறைந்தஅளவிலான பொருட்களின் பயன்பாடு, குறைந்த ஆற்றல் நுகர்வு , குறைந்த கார்பன் உமிழ்வு ஆகியன.
சூரிய சக்தி அமைப்பு
ஒரு SBC உடன் பசுமையான சூழலுடன் செல்வது நமக்கு மட்டும் நல்லது அன்று, இது நாம் வாழ்கின்ற இவ்வுலகிற்கும் நல்லது. பாரம்பரிய மேசைக்கணினிகள் மிகப்பெரிய ஆற்றல் இழப்பு, மின்சாரம் , கார்பன் உமிழ்வை வெளியேற்றும். ஆனால் SBCகள் அதிக ஆற்றலுடனான திறன் கொண்டவை, மின்சக்தியை வீணாக்குவதற்குப் பதிலாக சேமிக்கின்றன.
இதன் பொருள் கார்பன் தடத்தை குறைக்கும் போது மின்னாற்றல் கட்டணத்தில் பணத்தை மிச்சப்படுத்திடுவோம் – இது காலப்போக்கில் குறிப்பிடத்தக்க சேமிப்பை சேர்க்கும் ஒரு சிறிய படியாகும். கையடக்க மின்கலண் கட்டுகள் , சூரிய பலகங்கள் உட்பட பலவிதமான ஆற்றல் மூலங்களையும் பயன்படுத்தலாம்.
பொருட்களைப் பொறுத்தவரை, மேசைக்கணினிகளும் மடிக்கணினிகளும் நிறைய பிளாஸ்டிக், உலோகங்கள் , மின்னணு கூறுகளைப் பயன்படுத்துகின்றன. இவை தயாரிக்கப்படும் போதும், தூக்கி எறியப்படும் போதும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்.SBCகள் குறைவான பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன, எனவே அவை குறைந்த கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. இதனைபயன்படுத்திடுவதன் மூலம் சுற்றுச்சூழலுடன்கு நட்பாக இருப்போம் என நம்பினால், இவ்வுலகிற்கு தீங்கு விளைவிக்காமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒற்றை SBCஐ பயன்படுத்திடுவது ஒரு புத்திசாலித்தனமான வழியாகும்.
6 கிடைக்கும் தன்மை, உலகளாவிய வழங்கல்
SBCகள் பெரும்பாலும் விநியோகச் சங்கிலி சிக்கல்களால் குறைவாகவே பாதிக்கப்படுகின்றன
SBC களின் குறிப்பிடத்தக்க நன்மைகளில் ஒன்று அவற்றின் விரிவான உலகளாவிய கிடைக்கும் தன்மையும் சீரான விநியோகமும் ஆகும். இதற்கு நேர்மாறாக, பாரம்பரிய மேசைக்கணினி கூறுகள் பற்றாக்குறை , ஏற்ற இறக்கமான விலைகளுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றன, ஏனெனில் சமீபத்திய வரைகலை அட்டையின் பற்றாக்குறை இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். மறுபுறம், SBCகள் பொதுவாக மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்படுகின்றன , நெறிப்படுத்தப்பட்ட உற்பத்தி செயல்முறைகளிலிருந்து பயனடைகின்றன, வாங்கும் போது “இருப்பு இல்லை(out of stock)” எனும் அறிவிப்புகளை எதிர்கொள்ளும் வாய்ப்பைக் குறைக்கிறது.
பல SBC மாதிரிகளின் தரப்படுத்தப்பட்ட தன்மை செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது. நன்கு நிறுவுகைசெய்யப்பட்ட சில வணிகமுத்திரைகள் , உள்ளமைவுகள் மூலம், பரந்த அளவிலான வாய்ப்புகளை வழிநடத்துவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்கலாம். இது கையகப்படுத்துதலின் எளிமையை அதிகரிக்கிறது , நிலைத்தன்மையை உறுதி செய்கிறது, இது மென்பொருள் இணக்கத்தன்மை, புதுப்பிப்புகளுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது. நம்முடைய இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், வளங்கள், பயிற்சிகள் , ஆதரவின் சமூககுழுவிற்கான அணுகலை SBCகள் வழங்குகின்றன
பெருகிய முறையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு வரும் ஆனால் தொழில்நுட்ப அணுகலில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் உலகில், SBC களின் உலகளாவிய கிடைக்கும் தன்மை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. பாரம்பரிய மேசைக்கணினிபுகள் தடைசெய்யும் வகையில் விலையுயர்ந்த அல்லது கிடைக்காத பகுதிகளில் கல்வி, கண்டுபிடிப்பு , இணைப்பு ஆகியவற்றை எளிதாக்குகின்றன. ஒரு பெருநகர மையமாக இருந்தாலும் அல்லது தொலைதூர இடமாக இருந்தாலும், பரந்த பார்வையாளர்களுக்கு எண்ணிம உலகத்தை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு SBCகள் பங்களிக்கின்றன.
5 சிறந்த தகவமைப்புதிறன், அளவிடுதல்
வளர்ந்து வரும் பல்வேறு வகையான துணைக்கருவிகள் SBCயைத் தனிப்பயனாக்க பல வாய்ப்புகளை வழங்குகின்றன
Raspberry Pi 5 க்கான Waveshare PCIe முதல் M.2 HAT வரையிலான பகுதிகளை உருவாக்கிடுகின்றன
ஒற்றை பலகை கணினிகள் (SBCs) இணையற்ற நெகிழ்வுத்தன்மை , விரிவாக்கத்தை வழங்குவதன் மூலம் கணினியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. நிலையான கட்டமைப்புகளைக் கொண்ட பாரம்பரிய மேசைக்கணினிகளைப் போலன்றி, குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கக்கூடிய தளங்களாக SBCகள் செயல்படுகின்றன. USB அல்லது GPIO pinsகள் வழியாக கூறுகளைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது சாதனங்களை இணைப்பதன் மூலமோ சேமிப்பக திறனை எளிதாக விரிவாக்கலாம். இந்த பல்துறை SBC களுக்கு தனிப்பட்ட கணினி ஆய்வக அனுபவத்தை வழங்க உதவுகிறது.
மேலும், SBCகளை கொத்துகளை உருவாக்க அடுக்கி வைக்கலாம், பல அலகுகள் கோரும் பணிகளை ஒரே நேரத்தில் கையாள அனுமதிக்கிறது. ஒரு சிறிய சேவையாளர் அமைவை அமைப்பது, இணையான கணினியைப் பரிசோதிப்பது அல்லது சிக்கலான உருவகப்படுத்துதல்களை நிர்வகித்தல், SBCகளை அடுக்கி வைப்பது தேவையான சக்தி , மலிவு விலை ஆகியவற்றினை வழங்குகிறது. அவைகளின் தகவமைப்புத் தன்மை, நெகிழ்வுத்தன்மை , அளவிடுதல் ஆகியவற்றைத் தேடும் நிறுவனங்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
4 SBCகள் இணையற்ற கல்வி மதிப்பை வழங்குகின்றன
குறிமுறைவரிகளை அல்லது மின்னணு உருவாக்க கற்றுக்கொள்வதற்கான செலவு குறைந்த வழியை அவை வழங்குகின்றன
SBC கள் நம்முடைய பையில் கையடக்கமாக இருப்பதைவிட அதிகம் செய்ய முடியும். அவை நிரலாக்க, மின்னணுவியல் , வன்பொருள் உலகத்திற்கான சிறிய இணையதளங்கள். ஒரு மாணவராக இருந்தாலும், கல்வியாளராக இருந்தாலும் அல்லது ஓட்டுதல் செய்வதை விரும்புபவராக இருந்தாலும், SBCகள் தொடங்குவதற்கான சரியான வழியாகும்.
SBCகள் மூலம், எவ்வாறு குறிமுறைவரிகளை உருவாக்குவது, நம்முடைய சொந்த gadgets களை உருவாக்குவது , நம்முடைய சொந்த மீச்சிறுசேவையாள அமைப்பது எவ்வாறு என்பதை எளிதாக கற்றுக் கொள்ளலாம். நம்முடைய சொந்த செயல்வேகத்தில் பரிசோதனை செய்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் நம்முடைய சொந்த ஆய்வகத்தை விரைவாகவும் மலிவாகவும் செய்யலாம்.
SBC களும் கற்றலைக் கையாள உதவுகின்றன. மென்பொருளும் வன்பொருளும் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பற்றி மட்டும் படிப்பதற்குப் பதிலாக, LEDs, sensors, motorsபோன்ற தொட்டுணரும் கூறுகளுக்குக் குறிமுறைவரிகளை உருவாக்கலாம். இன்னும் சிறப்பாக, SBCகளுடன் எவ்வளவு அதிக நெருக்கமாகப் பணிபுரிகின்றோமோ, அவ்வளவு சிறப்பாக குறிமுறைவரிகள் வழிமுறையையும் சிக்கலையும் தீர்வுசெய்திடுவோம்.
குழந்தைகளுக்கு விமர்சன சிந்தனை , சிக்கலைத் தீர்க்கும் திறன்களைக் கற்பிப்பதற்கான சிறந்த வழி SBCகள் என்பதை பள்ளிகள் உணர்ந்துள்ளன. நடைமுறைசெயல்திட்டங்களைச் செய்வதன் மூலம், குழந்தைகள் கோட்பாட்டைப் பற்றி மட்டுமல்ல, நடப்புஉலகில் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொள்கிறார்கள். இது பாரம்பரிய மேசைக்கணினிகள் வழங்காத ஒன்றாகும்.
3 திறமூல மென்பொருள் இணக்கத்தன்மை
மென்பொருள் உருவாக்குநர்களின் துடிப்பான, அனுபவம் வாய்ந்த, நம்பகமான சமூககுழுவிலிருந்து பயனடைந்திடுக
ஒற்றை-பலகை கணினிகள் அனைத்தும் திறமூல இயக்கத்தைப் பற்றியது. அவை லினக்ஸ் போன்ற திறமூல இயக்க முறைமைகளில் இயங்குகின்றன, எனவே விலையுயர்ந்த மென்பொருளிற்காக செலவழிக்காமல் கணினி அனுபவத்தைத் தனிப்பயனாக்கலாம்.
திறமூல மென்பொருளானது, தங்கள் அறிவைப் பகிர்ந்துகொள்வதற்காக ஒன்றாக கூட்டாக இணைந்து பணிசெய்யும் மேம்படுத்துநர்களின் உலகளாவிய சமூககுழுவால் ஆதரிக்கப்படுகிறது. இந்த கூட்டு முயற்சி என்பது SBCகள் வழக்கமான புதுப்பிப்புகள், பாதுகாப்பு இணைப்புகள் ,மேம்படுத்தப்பட்ட பயன்பாடுகள் ஆகியவற்றினை பெறுவதாகும். அனைத்து வகையான உற்பத்தித்திறன் கருவிகள், படைப்பு மென்பொருள் , நிரலாக்க சூழல்களை இதில் காணலாம்.
ஆனால் திறமூலமானது பணத்தை சேமிப்பது மட்டுமன்று. இது பயனர்களை மேம்படுத்துவது, கற்றலையும் புதுமைகளையும் ஊக்குவிப்பதும் ஆகும். இந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ற மென்பொருளில் பங்களிக்கலாம் மாற்றியமைத்திடலாம். SBCகள் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மாற்றீட்டை வழங்குகின்றன, இது கணினி அனுபவத்தின் கட்டுப்பாட்டை நமக்குத் தருகிறது.
2 சிறிய அளவும் பெயர்வுத்திறனும்
SBCs ஐ சிறிய மேசை இடைவெளிகளில் எளிதாகப் பொருத்தலாம் அல்லது பயணத்தின்போதுகூட கையில் எடுத்துச் செல்லலாம்
ஒரு ராஸ்பெர்ரி பை 5 power bankஉடன் இணைக்கப்பட்டுள்ளது
SBC கள் நம்முடைய பையில் வைத்துக்கொள்ளக்கூடிய சிறிய ஆனாலும் இன்னும் கூடுதலான சக்திவாய்ந்த கணினிகளாகும். அவை வழக்கமான மேசைக்கணினி கோபுரங்களை விட மிகச் சிறியதாக இருப்பதால், அவற்றை எங்கு வேண்டுமானாலும் கையில்எடுத்துச் செல்லலாம். எண்ணிம நாடோடிகள், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் போன்ற பயணத்தின்போதேபணிசெய்ய வேண்டியவர்களுக்கு இது சரியானதாக அமைகிறது.
ஒரு SBC அமைப்பது ஒரு breezeபோன்று எளிமையானது. ஒரு திரை , பிற சாதனங்களைச் செருகிடுக, அவ்வளவுதான் பயன்படுத்த தயாராகிடலாம். அவற்றை அமைப்பதும் கட்டமைப்பதும் மிகவும் எளிதானது என்பதால், திரைப்படங்களைப் பார்ப்பது அல்லது விளையாட்டுகளை விளையாடுவது போன்ற அன்றாடப் பணிகளுக்கும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
இலகுரக SBCகள் நம்மைசுற்றிய செயல்திட்டங்களுக்கு சிறந்தவை. அவற்றை கையடக்க ஊடக மையங்கள், retro gaming consoles கள் அல்லது கள தரவு சேகரிப்பாளர்களாகவும் பயன்படுத்தலாம். அவை மிகவும் சிறியதாகவும் கையடக்கமாகவும் இருப்பதால் அவற்றை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். பாரம்பரிய மேசைக்கணினிகளால் அதைச் செய்ய முடியாது, எனவே SBCகள் எந்த வரம்புகளும் இல்லாமல் கணினியின் பயன்பாடுகளை பயன்படுத்திகொள்வதற்கான சுதந்திரத்தை நமக்கு வழங்குகின்றன.
1 தினசரி கணினியின்பணிகளுக்கு நல்ல செயல்திறன்
அதிக வளங்களைக் கொண்ட கணினியின் பணிச்சுமைகளைச் சமாளிக்கும் திறன் அதிகரித்து வருகிறது
ராஸ்பெர்ரி பை 5, விசைப்பலகை , இடம்சுட்டி செருகப்பட்டு, திரை ராஸ்பெர்ரி பை இயக்கமுறைமையின் மேசைக்கணினியைக் காண்பிக்கிறது
SBCயின் சிறிய அளவைக் கண்டு ஏமாறவேண்டாம்; இது அன்றாட கணினி பணிகளுக்கு வரும்போது ஒரு வியக்கத்தக்க திறமையான punchஐ கட்டமைப்பு செய்ய முடியும். இணைய உலாவல், மின்னஞ்சல்களைச் சரிபார்த்தல், கானொளிகாட்சிகளை தொடரோட்டம் செய்தல், சிறிய அலுவலக பணிகள் போன்ற செயல்களுக்கு, SBCகள் எளிதாக சுமைகளைக் கையாளுகின்றன. நவீன SBCகள் multi-core செயலிகள் ,வழக்கமான பணிகளுக்கு சீரான செயல்திறனை உறுதிப்படுத்த போதுமான RAMஆகியவற்றைக் கொண்டுள்ளன.
உயர்நிலை விளையாட்டு அல்லது சிக்கலான கானொளிகாட்சியின் திருத்தம்செய்தல் போன்றவற்றிற்கு கனரக கணினியின் சக்தி தேவைப்படாத ஒருவராக இருந்தால், SBC ஆனது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதை விட அதிகமாக இருக்கும். சொல் செயலிகள், விரிதாள்கள் , விளக்கக்காட்சி மென்பொருள் போன்ற பயன்பாடுகள் திறமையாக இயங்கும், தேவையற்ற வன்பொருளின் மேல்நிலை இல்லாமல் நாம் பணிசெய்ய அனுமதிக்கிறது. கூடுதலாக, உயர்-வரையறை கானொளிஇயக்கிக்கான ஆதரவுடன், பல்லூடக நுகர்வின் ஒரு துடிப்பையும் இழக்காது.
பொதுவான கணினித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டது
சாராம்சத்தில், SBC கள் நெறிப்படுத்தப்பட்ட கணினி அனுபவத்தை வழங்குகின்றன, இது அன்றாட பயன்பாட்டின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்கிறது. அமைப்பை எளிமையாக்கி, செயல்திறனை மேம்படுத்தி, அதிகப்படியான சக்தியின்றி சரியான அளவைப் பெறுகின்றோம். தொழில்நுட்பம் எவ்வளவு தூரம் வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு முதன்மையான சான்றாகும்.