நாள் 26: tee
இந்த கட்டளை குழாய் வேலைகளில் இருக்கும் T வடிவ செயல்பாட்டினை கொண்டிருப்பதால் இப்பெயர் பெற்றது.அது எவ்வாறெனில் ஒரு உள்ளீட்டினை பிரித்து பல வெளியீடுகளாக தருகிறது.
இந்த கட்டளை ஒரு வெளியீட்டினை கட்டளையிலிருந்து முனையத்திற்கு தருகிறது அதேசமயம் அதனை கோப்பிலும் எழுதுகிறது .
இந்த கட்டளையுடன் -a எனும் தெரிவினை பயன்படுத்தும்போது எழுதப்படும் கோப்பினை அழித்து எழுதாமல் கடைசி வரிக்கு அடுத்ததாக சேர்த்து எழுதுகிறது.
இந்த கட்டளை -i எனும் தெரிவுடன் பயன்படுத்தும் போது எந்த ஒரு இடையூறிக்கும் நிற்காமல் இயங்குகிறது.
தொடரியல்:
hariharan@kaniyam: ~/odoc $ echo “Hello World” | tee file.extension
hariharan@kaniyam: ~/odoc $ ls | tee -a fileAndDirectoryList.txt
நன்றி !
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com