கூகிள் இயக்ககத்திற்கான(Google Drive) லினக்ஸின் மாற்றுகள்

கூகிள் இயக்ககம் ஒரு சக்திவாய்ந்த , வசதியான இணைய பயன்பாடாகும். கெடுவாய்ப்பா, லினக்ஸ் ஒருபோதும் அதன் சொந்த அதிகாரப்பூர்வ, ஆதரிக்கப்பட்ட இயக்கக பயன்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்ப உதவும் 6 சக்திவாய்ந்த லினக்ஸ் மாற்றுகள் பின்வருமாறு.

அதிகாரப்பூர்வ லினக்ஸ் வாடிக்கையாளர் எவரும் இல்லாததால், தீவிர பயனர்கள் ஒத்திசைவுக்கு மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது. கூடுதலாக, தனியுரிமையை மதிக்கின்ோமெனில், தரவு சேகரிப்பு கவலைகளின் காரணமாக கோப்புகளை கூகிளின் சேவையகங்களில் சேமிக்க விரும்பாமல் போகலாம்.ஒரு திறமூல ஆர்வலராக இருந்தால், சுயமா புரவலராக செய்யப்பட்ட அல்லது மிகவும் வெளிப்படையான மாற்றுகளையும் விரும்பலாம். இந்த சிக்கல்களில் ஏதேனும் நமக்கு எதிரொலித்தால், லினக்ஸிற்கான ஆறு சிறந்த கூகிளின் இயக்ககத்திற்கான மாற்றுகள் பின்வருமாறு.

MEGA

MEGAஎன்பது ஒரு வணிக மேககணினி சேமிப்பக சேவையாகும், இது ஒரு நேர்த்தியான ,உள்ளுணர்வுடனான இணைய இடைமுகத்துடன் கூடுதலாக வலுவான குறியாக்கத்தையும் சொந்த லினக்ஸ் ஆதரவையும் வழங்குகிறது.

முக்கிய வசதிவாய்ப்புகள்

இருமுடிவுகளுக்கிடையிலான(end-to-end) மறைகுறியாக்கத்தை வழங்குகிறது, நம்முடைய கோப்புகள் தனிப்பட்டதாக இருப்பதை உறுதி செய்கிறது.

அதிக சேமிப்பிற்கான கட்டண ாய்ப்பகளுடன் தாராளமான 20GB கட்டணமற்ற திட்டத்தை வழங்குகின்றது.

தடையற்ற ஒருங்கிணைப்புக்கான அதிகாரப்பூர்வ லினக்ஸ் வாடிக்கையாளராக திகழ்கின்றது.

கடவுச்சொல் பாதுகாப்புடன் பாதுகாப்பான கோப்பு பகிர்வினை வழங்குகின்றது.

கூகிள் இயக்ககத்திற்கான சாத்தியமான மாற்று

சுய புரவலராக இல்லாமல் தனியுரிமையை மையமாகக் கொண்ட மேககணினியின் சேமிப்பக சேவையை விரும்பும் பயனர்களுக்கு MEGA சிறந்தது. 20 GBவரையிலான கட்டணமற்ற திட்டம் கூகிள் இயல்புநிலை 15 ஜிபியை விட அதிக இடத்தை நமக்கு வழங்குகிறது. இருப்பினும், நமக்கு அதிக இடம் தேவைப்பட்டால் கூகிள் போன்றே, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

pCloud

pCloud என்பது வலுவான லினக்ஸ் ஆதரவைக் கொண்ட மற்றொரு வணிக மேககணினி சேமிப்பக வழங்குநராகும். இது பயன்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் இடையில் சமநிலையை வழங்குகிறது.

முக்கிய வசதிவாய்ப்புகள்:

எளிதான கோப்பு ஒத்திசைவுக்கான சொந்த லினக்ஸ் வாடிக்கையாளரை கொண்டுள்ளது.

ஜீரோஅறிவு மறைகுறியாக்கம் (கட்டண பயனர்களுக்கு ஒரு துணை நிரலாகக் கிடைக்கிறது).

வாழ்நாள்முழுவதற்குமான திட்டங்கள், சந்தா திட்டங்கள் ஆகிய இரண்டிற்கும் போட்டி விலை நிர்ணயத்துடன் கிடைக்கின்றது.

எளிதான பகிர்வு , ஒத்துழைப்பு வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது.

விலை நிர்ணயம் ,பயன்பாட்டுத்திறன் vs. கூகிளின் இயக்ககத்துடன்

அதிகாரப்பூர்வ வாடிக்கையாளருடன் பாதுகாப்பான மேககணினி சேமிப்பிடத்தை விரும்பும் லினக்ஸ் பயனர்களுக்கு pCloud ஒரு கவர்ச்சிகரமான மாற்றீட்டை வழங்குகிறது. இருப்பினும், pCloud க்கு இரண்டு குறிப்பிடத்தக்க குறைபாடுகள் உள்ளன.கட்டணமற்ற திட்டத்துடன் மறகுறியாக்கம் வழங்கப்படவில்லை, மேலும் கட்டணமற்ற திட்டத்தில் அதிகபட்சமாக 10GB இடம் மிகவும் குறைவாகவே உள்ளது.

Syncthing

சமனிக்குசமனியான (peer-to-peer) கோப்பு ஒத்திசைவை வழங்குவதன் மூலம் இது வேறுபட்ட அணுகுமுறையை எடுக்கிறது. நம்முடைய தரவை ஒரு மைய மேககணினி சேவையகத்தில் பதிவேற்றுவதற்கு பதிலாக, இது நம்முடைய சாதனங்களுக்கு இடையில் நேரடியாக கோப்புகளை ஒத்திசைக்கிறது. பிற்காப்புநகலியின் இடமாக செயல்பட ஒத்திசைவு சங்கிலியின் ஒரு பகுதியாக ஏதேனுமொரு சேவையகத்தையும் நாமே அமைத்துக்கொள்ளலாம்.

முக்கிய வசதிவாய்ப்புகள்

மைய சேவையகம் இல்லை, அதாவது நம்முடைய கோப்புகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும். வலுவான மறைகுறியாக்கம் , தனியுரிமை சார்ந்த வடிவமைப்பு. லினக்ஸ், விண்டோஸ், மேக, கைபேசி சாதனங்கள் உட்பட குறுக்குதள ஆதரவு. தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புறைகளின் தானியங்கி ஒத்திசைவு.

பெரும்பாலான லினக்ஸ் விநியோகங்களுக்கு முக்கிய களஞ்சியங்கள் மூலம் எளிதாக நிறுவுகைசெய்தல். ஆகிய வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது

நன்மைகளும் வரம்புகளும்

இணையம் முழுவதும் கூட வெளிப்புற மேககணினி சேவைகளை நம்பாமல் பாதுகாப்பான, பரவலாக்கப்பட்ட கோப்பு ஒத்திசைவை விரும்புவோருக்கு இது சிறந்தது. இருப்பினும், இது உள்ளமைக்கப்பட்ட ஆவணத் திருத்தம் அல்லது Google Drive போன்ற இணைய ஒத்துழைப்பு திகளை வழங்காது.

Nextcloud

Nextcloud என்பது இன்று கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான சுயபுரவலராக செய்யப்பட்ட மேககணினியின் சேமிப்பக தீர்வுகளில் ஒன்றாகும். இது நாமே நம்முடைய சொந்த மேககணினி சேவையகத்தை அமைக்க நம்மை அனுமதிக்கிறது, இது நம்முடைய தரவின் மீது முழு கட்டுப்பாட்டையும் நமக்கு வழங்குகிறது. மூன்றாம் தரப்பு நிர்வகிக்கப்பட்ட ,புரவலராக செய்யப்பட்ட Nextcloudஆனது சேவையகங்களிலிருந்து நாம் தேர்வு செய்யலாம், நம்முடைய சொந்த வலை சேவையகத்தில் Nextcloud நிறுவுகைசெய்திடலாம் அல்லது நம்முடைய வீடு அல்லது அலுவலகத்தில் நம்முடைய சொந்த ையாளரில் நிறுவுகை செய்திடலாம்.

இதில்அனைத்து முக்கிய லினக்ஸ் விநியோகங்களுக்கும் பதிவிறக்கங்கள் கிடைக்கின்றன. உபுண்டு பயனர்கள் (snap ஆதரவு நிறுவுகைசெய்யப்பட்ட மற்றவர்களும்) சேவையகத்தை விரைவாக பதிவிறக்கம்செய்து snap இன் தொகுப்பாக நிறுவுகைசெய்திடலாம்.

முக்கிய வசதிவாய்ப்புகள்

திறமூல, சுயபுரவலராக செய்யப்பட்ட, முழுமையான தனியுரிமையை உறுதி செய்கிறது. சாதனங்களில் கோப்பு ஒத்திசைவு. ஆவணத் திருத்தம், அரட்டை , காலண்டர் வசதிவாய்ப்புகள் உட்பட Google Drive போன்ற உள்ளமைக்கப்பட்ட ஒத்துழைப்பு கருவிகள். கூடுதல் பாதுகாப்பிற்கான இருமுடிவுகளுக்கிடையிலான (end-to-end) மறைகுறியாக்கத்தை கொண்டுள்ளது.

இதனைGoogle Drive உடன் எவ்வாறு ஒப்பிடுவது

கட்டுப்படுத்தக்கூடிய முழு திவாய்ப்புகளுடன் கூடிய மாற்றீட்டைத் தேடுகின்ோமெனில், Nextcloud ஒரு அருமையான ாய்ப்பகும். கானொளிகாட்சிவாயிலான சந்திப்புகள் ,போன்ற பலவற்றை உள்ளடக்கிய கூகிள் Google Workspace பயன்பாடுகளைப் போன்றே இது கிட்டத்தட்ட அனைத்து திவாய்ப்புகளையும் கொண்டுள்ளது. புதிய லினக்ஸ் பயனர்களுக்கு மிகவும் சவாலான பல நிறுவுகைசெய்திடுகின்ற ாய்ப்பகளும் உள்ளன என்பது இதன் குறைபாடு. இருப்பினும், பல தயார்நிலை இயக்க தீர்வுகளும் உள்ளன, ஆனால் அவை கட்டணமற்றமற்றவை ன்று.

Seafile

Seafile என்பது உயர் செயல்திறன் கொண்ட, சுயபுரவலராக செய்யப்பட்ட கோப்பு ஒத்திசைவு தீர்வாகும், இது கூட்டுத் திட்டங்களில் பணிபுரியும் திறன் தேவைப்படும் குழுக்களுக்கும் நிறுவனங்களுக்கும் மிகவும் பொருத்தமானது.

முக்கிய வசதிவாய்ப்புகள்

குறைந்தபட்ச கணினி வள பயன்பாட்டுடன் இலகுரக , திறமையான கோப்பு ஒத்திசைவு கொண்டுள்ளது.

பகிர்ந்துகொள்ளப்பட்ட நூலகங்கள் ,அனுமதி கட்டுப்பாடுகள் உட்பட வலுவான குழு ஒத்துழைப்பு வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது.

மேம்பட்ட பாதுகாப்பிற்கான விருப்பமான இருமுடிவுகளுக்கிடையிலான(end-to-end) மறைகுறியாக்கத்தை கொண்டுள்ளது.

சுய புரவலராக செய்யப்பட்ட ,வணிக மேககணினி பதிப்புகள் கிடைக்கின்றன.

இதில்சாதனங்களுக்கு இடையில் கோப்புகளை ஒத்திசைக்கவும் அல்லது வலைபின்னல்களில் நேரடியாக அணுகவும் முடியும்.

பாதுகாப்பும் வேக நன்மைகளும்

Seafileஆனது கிடைக்கக்கூடிய வேகமான ஒத்திசைவு தீர்வுகளில் ஒன்றாகும் . செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கும் பயனர்களுக்கு இது சிறந்தது. சேவையகத்தை அமைக்க சில கைமுறை நிறுவுகைசெய்தல் அவசியமாகும், ஆனால் இது சிக்கலானது ன்று. பெரும்பாலான லினக்ஸ் விநியோகங்களின் களஞ்சியங்களில் வாடிக்கையாளர் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த அமைப்பில் சில பயனுள்ள ஒத்துழைப்பு கருவிகள் உள்ளன, ஆனால் அவை கூகிள் இயககத்தில் நாம் காணும் அளவுக்கு விரிவானவை ன்று.

ownCloud

ownCloudஎன்பது மற்றொரு சுய புரவலராக செய்யப்பட்ட மேககணினி சேமிப்பக தீர்வாகும், இது NextCloudப் போன்ற திவாய்ப்புகளை வழங்குகிறது, ஆனால் வெவ்வேறு நெகிழ்வுத்தன்மை, நிறுவன ாய்ப்பகளுடன். ையாளர், வாடிக்கையாளர் பயன்பாடுகள் நிறுவுகைசய்திட எளிதானது . அனைத்து லினக்ஸ் விநியோகங்களுக்கும் எளிதாகக் கிடைக்கின்றன.

முக்கிய வசதிவாய்ப்புகள்

தரவின் மீது முழுமையான கட்டுப்பாட்டுடன் சுய புரவலராக செய்யப்பட்ட சேமிப்பகத்தை கொண்டுள்ளது.

பல சாதனங்களில் கோப்பு பகிர்வும் ஒத்திசைவும் கொண்டுள்ளது.

வணிகங்களுக்கான கட்டணத்துடனான திவாய்புகளுடன் பெரிய நிறுவன ஆதரவு உடையது.

பரந்த அளவிலான துணை நிரல்கள், ஒருங்கிணைப்புகளுடன் தனிப்பயனாக்கக்கூடியது.

கூகிள் இயக்ககத்துடன் ஒப்பீடு

OwnCloud ல்வேறு வழிகளில் Nextcloud போன்றது, ஆனால் அதன் வணிகம் சார்ந்த ஆதரவு , தனிப்பயனாக்க ாய்ப்பளின் காரணமாக இது பெரும்பாலும் நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இன்னும் நிறுவனத்தின்தயாரான, திற மூல மேககணினி மாற்றீட்டை விரும்பினால், இது ஒரு வலுவான தேர்வாகும்.

ஒரு Linux பயனராக இருந்து, Google Drive-க்கு மாற்றாக வேறொரு சேவையைத் தேடுகின்ோமெனில், நம்முடைய தேவைகளைப் பொறுத்து நமக்குஉதவுவதற்கு தயாராக பல்வேறு சிறந்த வாய்ப்புகள் உள்ளன:

கூட்டுப்பணி (collaboration) கருவிகளுடன் கூடிய, நிர்வகிக்கும் (self-hosted) மேகக்கணினியின் சேமிப்பிற்கு: Nextcloud அல்லது OwnCloud என்பவை போதுமானதாகும்.

மையப்படுத்தப்படாத, தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கோப்பு ஒத்திசைவிற்கு: Syncthing. என்பது போதுமானதாகும்

Linux ஆதரவுடன் கூடிய, பாதுகாப்பான மேகக்கணினி சேமிப்புத் தீர்வுக்கு: MEGA அல்லது pCloud என்பது போதுமானதாகும் .

குழுவாகப் பணிபுரிபவர்களுக்கு ஏற்ற, வேகமான ,திறமையான கோப்பு ஒத்திசைவு அமைப்பிற்கு: Seafile என்பது போதுமானதாகும்.

இந்தச் சேவைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய நிறைகளும் குறைகளும் உள்ளன; எனவே, பாதுகாப்பு, கூட்டுப்பணி அல்லது பயன்பாட்டின் எளிமை — இவற்றில் எதற்கு முன்னுரிமை அளிக்கின்ோம் என்பதைப் பரிசீலித்த பின்னரே நமக்கான தேர்வை மேற்கொள்க. தேவைகள் எவையாக இருந்தாலும், இந்தத் தீர்வுகளில் ஒன்று நமக்கு கண்டிப்பாக கைகொடுக்கும்.

Leave a Reply