முன்னுரை: திற மூலமென்பொருள் வழியில் கானொளி காட்சிகளை பதிப்பித்தல்
நவம்பர் 2011 இல், opensource.com எனும் திறமூல இணையதளமானது / இதற்குமுன் வெளியிடப்படாத மிகச்சிறந்த வெற்றிகரமான தொடர் ஒன்று என்று நிரூபிக்க வேண்டும் என்பதற்கான ஒரு கானொளி காட்சிகளின் பதிப்பித்தலிற்கான தொடர் பயிற்சி ஒன்றினை சுதந்திரமான பல்லூடக கலைஞர் சேத் கென்லான் என்பவரின் மூலம் இயக்கத்துவங்கியது. இந்த தொடர்பயிற்சியில் பல்லூடக கலைஞர்களுக்கு கேடின்லிவ் பற்றிய புதிய உத்வேகத்தை ஊட்டிடும் வகையில் ஆறுதவனையாக பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த கேடின்லிவ்வானது ஒரு சக்தி வாய்ந்த பல்வழி கானொளி காட்சி பதிப்பித்தல் பணியினை குனு / லினக்ஸில் செயல்படுத்திட தயாராக இருக்கின்றது. திரு கென்லான் என்பவரின் அனுபவத்தின் அடிப்படையில் கானொளி காட்சியை படமெடுக்கும் ஆர்வலர்களுக்கு உதவிடுவதற்கான இந்த கேடென்லிவ் என்பது ஒரு அறிமுகத் தொடராக விளங்குகின்றது. இதில் அடிப்படையானது மேம்பட்டது ஆகிய இரு வழிகளிலும் கானொளி காட்சி பதிப்பித்தலின் தொழில் நுட்பங்களை எவ்வாறு இந்த கட்டற்ற மென்பொருளின் வாயிலாக செயல்படுத்திட முடியும் என செயல் முறை விளக்க காட்சியின் வாயிலாக கென்லான் என்பவர் விளக்குகின்றார். அதனால் முதன்முதல் இந்த பணியில் அறிமுகமாகுபவர் முதல் நல்ல அனுபவமிக்கவர்கள் வரையுள்ள எந்தவொரு நபரும் மிக எளிதாகவும் மிக விரைவாகவும் இந்த கானொளி காட்சியின் பதிப்பித்தல் பணியை கட்டணமற்ற நமக்கு உதவத்தயாராக உள்ள இந்த கேடின்லிவ்வ எனும் கருவியை பற்றி இந்ததொடரின் வாயிலாக எளிதாகவும் விரைவாகவும் அறிந்துகொண்டு செயல்படுத்தி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த வெளியீடானது கென்லானின் படைப்புகளின் சுருக்கமானதும் ஒரு ஒற்றையான தொகுதிக்குள் அனுகுவதுமான விரிவான வழிகாட்டியாகவும் அனுபவமிக்கவர்களால் எழுதப்பட்ட திறமூல வழியிலான சிறந்ததொரு மேம்பட்ட தொகுப்பாகவும் விளங்குகின்றது. மேலும் தொழில்நுட்பமிக்கவர்களின் அனுபவங்களை இதன் வாயிலாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் அடிப்படையில் மற்றவர்களும் இந்த பணியை எளிதாக அறிந்து இதில் மிகச்சிறப்பாக மிளிரமுடியும் என்பது திண்ணம்.
கேடின்லிவ் ஒரு அறிமுகம்:
குனு லினக்ஸ் ஆனது ஒரு நல்ல சிறந்த வலுவானதொழில்முறையிலான கானொளி காட்சிகளை பதிப்பித்தலின் கருவி ஒன்று தோன்றுவதற்காக பலஆண்டுகளாக புகழெதுவும் அடையாமல் காத்துகிடந்தது. மேலும் அந்த நம்பிக்கையின் ஒளிக்கீற்று இங்கு தோன்றிடுமா அல்லது அங்கு தோன்றிடுமா என எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனாலும் பெரும்பாலான பதிப்பாளர்களால் தொழில்நுட்ப பயன்பாடு ஒன்று கண்டிப்பாக உருவாக வேண்டும் என உணரவும் தேடிடவும் செய்த நேரத்தில் அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப புதிய பயனுள்ள விபத்து போன்றதொரு சிறந்த விடிவெள்ளியாக இந்த கேடின்லிவ் எனும் திறமூலக்கருவி தோன்றியது. பெரும்பாலும் அனைவரின் எதிர்பார்ப்பிற்கேற்ற நிலையானதும் உண்மையில் அனைவரும் செயல்படுத்திடும் மிகச்சாதாரணதுமான கானொளி காட்சிகளை பதிப்பித்தலுக்கு அப்பால் அவைகளிலிருந்து மிகமாறுபட்ட புதிய சகாப்தமாக இந்த கேடின்லிவ்வானது மாறுதல்களை கானொளி காட்சிகளின் பதிப்பித்தலில் கொண்டு வந்துள்ளது.
திரைப்படங்களின் உற்பத்தி வசதிகளுள்ள வளாகத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு கேடின்லிவ்வானது குனுலினக்ஸ் இயக்கமுறையில் அவ்வாறான திரைப்பட உற்பத்தி பயன்பாட்டிற்காக பதிப்பித்தல் பயன்பாட்டினை உருவாக்கியுள்ளது என்பதும், இது மேக் இயக்க-முறைமையின் செயல்திறனுடன் இதனை பராமரிப்பதில் நெகிழ்வு தன்மையுடனும், செயல்வேகத்துடனும் நிலைத்தன்மையுடனும் மிகச்-சிறந்ததாக (அடிக்கடி மிகச்சிறந்ததாகவும்) விளங்குகின்றது. தொழில் முறை பதிப்பான கேடின்லிவ்வானது எவ்வாறு தனியுடமை கருவிகளுக்கு ஒருதுளிமாற்றாக ஏறத்தாழ அதற்கு பதிலாக திறமூல கருவியாக ஒளிறுகின்றது என உங்களின் பார்வைக்கு இந்த தொடரின் வாயிலாக வைக்கப்பட்டுள்ளது.
ஒருசிறந்த கானொளிகாட்சியின் பதிப்பு மென்பொருளானது எந்தவொரு நபரும் கானொளிகாட்சியை பதிப்பித்தல் செய்திடவிரும்பினால், அதற்கு பொருத்தமாகவும் தன்னுடைய கானொளிகாட்சி பதிப்பித்தல் பணிக்கு தேவையான அனைத்து வசதிகளை வழங்குவதாகவும், செல்லிடத்து பேசி அல்லது படப்பிடிப்பு கருவியில் சொடுக்குதலின் வாயிலாக பெறப்படும் காட்சிப் படங்களை மிகவிரைவாக வெட்டி ஒட்டி தொகுத்திட அனுமதிப்பதற்கு எளிதாகவும் விளங்கிடவேண்டும். ஆயினும் நம்முடைய கானொளி காட்சி செயல்திட்டத்தின் நம்பிக்கைக்கு அப்பால் ஏராளமான சரியான அல்லது தவறான வழிகள் பல இருந்தாலும் கேடின்லிவ் வாயிலாக அவ்விரண்டையும் அடையமுடியும். இந்த தொடரில் முதல் ஐந்து தொடரின் வாயிலாக நடைமுறை பயன்பாடுகள், பொதுவான மிகச்சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றினை ஆய்வின் அடிப்படையில் நம்முடைய கானொளி காட்சி செயல்திட்டத்தினை வெற்றியடைய உறுதிஅளிக்கின்றது.
கேடின்லிவ்வை நிறுவுகை செய்தல்:
கேடின்லிவ்வை நிறுவுகை செய்வது என்பது மிகசிக்கலானசெயலாகும். மேலும் அதற்கான வினா எதுவும் எழாதவொரு செயலாகும். இந்த நிறுவுகை செயலிற்காக MLT என்பது பின்புலமாக பல்லூடகத்தை கையாளுவதற்காக தேவைப்படுகின்றது. மேலும் கானொளி காட்சிகளின் அனைத்து வகை குறிமுறைமாற்றி (codeces) களுடன் அதிகபட்ச ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. அதுமட்டுமின்றி பல கானொளிகாட்சிகளின் குறிமொழிமாற்றி (decoding), மொழிமாற்றி (en-decoding) ஆகியவற்றின் நூலகங்கள் இதற்கு தேவையானவையாகும். அதனால் முடிந்தவரை நாம் அதன்வாயிலாகவே இதனை பயன்படுத்தி கொள்ள முடியும்.
வழக்கமாக இந்த கேடின்லிவ் பதிப்பானது எளிதாக அமைத்து ஐயத்துக்கு இடமின்றி விரைவாக பயன்படுத்தி கொள்வதற்காக உங்களின் தொகுபதிவகத்தில் இதனை சேர்த்தே வழங்கப்படுகின்றது. இந்த கேடின்லிவின் ஆற்றொழுக்கு பதிப்பானது நிலைத்தன்மையுடன்கூடிய முழுமையான வசதியுடன் பதிப்பு 0.8 ஆக வெளியிடபட்டுள்ளது. நடப்பில் உள்ள அனைத்து முக்கியமான பகிர்வுகளும் இந்த பதிப்பு 0.8 இல் சேர்க்க பட்டுள்ளன அல்லது அதற்கு மேல் தேவைப்படுபவை இவர்களின் அலுவலக தொகுபதிவகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கேடின்லிவ் ஆனது அவைகளின் அலுவலக, அலுவலகம் சாராத கூடுதல் இணைப்புகளுடன் அல்லது முன்கூட்டிய கட்டமைக்கப்டட சேவைகளுடன் உள்ளது அதுமட்டுமல்லாது இது Slack builds, AUR போன்றவை-யாகவும் உள்ளது.
கேடின்லிவ் இன் முதல் செயல்பாடு
இதனுடைய முதற்செயல்பாட்டின்போது இது திறனுடன் செயல்படுவதற்காக இதிலுள்ள கானொளிகாட்சி குறிமுறைமொழிமாற்றியும் அதன் மூலங்களும் (sources) தயாராக இருப்பதை அறிந்து கொள்ளலாம். இதனை நிறுவுகை செய்தலின்போது விடுபட்ட எந்தவொன்றையும் சரிசெய்துகொள்வதற்கான ஏராளமான வாய்ப்புகள் இதில் வழங்கபட்டுள்ளதன் வாயிலாக அதனை தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பிரச்சினைகளை சரிசெய்வதற்கான வழக்கமான அறிவுரையை செயற்படுத்திடலாம். அவ்வாறான பிரச்சினை ஒன்றாக ஃபெடோரோ 15 இன் பதிப்பித்தல் பணிநிலையத்தினை அமைவு செய்திடும்போது MLT-SDL இன்கு றிமுறைவரிகளில் புதிய கேடின்லிவ்வை நிறுவுகை செய்து முதல் செயல் பாட்டினை செயல்படுத்திடமுடியாமல் பிழை ஒன்று எழுந்தது. அதனால் உடனடியாக இணையத்தில் இந்த பிரச்சினைக்கான தீரவு ஏதேனும் உள்ளதாவென தேடிபிடித்து சரிசெய்யபட்டது ஆயினும் நமக்கு அவ்வாறு சரிசெய்து இயக்குவதற்கு நேரமேதும் இல்லை.
அதனால் இயல்புநிலையில் கேடின்லிவ்வின் செயல்திட்டகோப்பகத்தை உருவாக்கிக் கொள்ளுமாறு நாம் இதனை நிறுவுகை செய்திடும்போது கேட்டுக்கொள்ளப்படுவோம். உண்மையில் அவ்வப்போது சிறந்த செயல் திட்டங்களுக்காகவென தனித்தனியான கோப்பகங்களை உருவாக்கி கொள்வது பொதுவாக நல்லதொருசெயலாகும். ஆனாலும் இது தனியானதாக இருப்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது, ஏனெனில் மிகமுக்கிய செயல்திட்ட கோப்புகளை குவியலாக சேர்த்தபின்னர் இதுதான் என ஏதோஒன்றை அங்கீகரிப்பதற்காக தேடியலைவதை இதன்வாயிலாக தவிர்த்திட முடியும்.
– தொடரும்