பாதுகாப்பான தேர்வு உலாவி( Safe Exam Browser(SEB)) என்பது இணையத்தின் வாயிலான நேரடியாக தேர்வுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவதயாராக இருக்கின்ற ஒரு இணைய உலாவி-சூழலாகும் . இம்மென்பொருளானது எந்தவொரு கணினியையும் பாதுகாப்பான பணிநிலையமாக மாற்றுகிறது. இது எந்தவொரு பயன்பாடுகளுக்கான அணுகலையும் ஒழுங்குபடுத்துகிறது மேலும் இணையவாயிலான தேர்வினை எழுதிடும் எந்தவொரு மாணவனும் அங்கீகரிக்கப்படாத வளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. இது மின்-மதிப்பீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவிடும் ஒரு இணையஉலாவி சூழலாகும். இம்மென்பொருளானது எந்தவொரு கணினியையும் தற்காலிகமாக பாதுகாப்பான பணிநிலையமாக மாற்றுகிறது. இது கணினி செயல்பாடுகள், பிற இணையதளங்கள் பயன்பாடுகள் போன்ற ஆதாரங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது மேலும் ஒரு தேர்வின் போது அங்கீகரிக்கப்படாத வளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. இது(SEB)ஒரு வளாக கணினியிலும் செயல்படும் திறன்மிக்கது, மேலும் இது இணையம் வழியாக ஒரு கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS) அல்லது மின் மதிப்பீட்டு அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இது(SEB) எந்தவொரு இணைய அடிப்படையிலான LMS போன்ற பல்வேறுவகையான இணைய அடிப்படையிலான தேர்வு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுமாறு கட்டமைக்கப் பட்டுள்ளது. ஒரு சில கற்றல் மேலாண்மை அமைப்புகளான Moodle, ILIAS, OpenOLAT ,Inspera போன்ற தேர்வுகளுக்கான தீர்வுகள் இந்த(SEB)உடன் குறிப்பாக இணக்கமான வினாடி வினா பயன்முறையை வழங்குகின்றன. இது(SEB) ஒரு கணினிமுனைய (kiosk )பயன்பாடு, இணைய உலாவி பகுதி ஆகிய இருபகுதிகளைக் கொண்டுள்ளது, அவை தேர்வு கணினி அல்லது மடிக்கணினி சாதனத்தில் இயங்குகின்றன. கணினிமுனைய பயன்பாடு தேர்வு கணினியைப் பூட்டிவிடுகிறது, இணையஉலாவி பகுதியானது இணையத்தில் (அல்லது ஒரு வளாக பிணையத்தில்) ஒரு சேவையகத்தில் இயங்கும் LMS வினாடி வினா தொகுப்புடன் தொடர்பு கொள்கிறது.LGPLv2 இன்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது
இதனுடைய வசதி வாய்ப்புகள்: இணையத்தில் நேரடியான தேர்வுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவிடும் இணைய உலாவி-சூழலாக இது அமைகின்றது, இதனை முழுத்திரை அல்லது இணைய உலாவி சாளர பயன்முறை (ஆகிய எந்தவொரு வழிசெலுத்தல் கூறுகளும் இல்லாமல்) பயன்படுத்தி கொள்ளமுடியும், பயனாளர்கள் கணினியில் வழக்கமாக பயன்படுத்திடும் (Ctrl-Alt-Del / Cmd-Alt- Esc), (Alt-Tab, Win-Tab / Cmd-Tab), Print Screen / Screenshot போன்ற எந்தவொரு குறுக்குவழிவிசைகளையும் பயன்படுத்தி குறிப்பிட்ட தேர்வின் போது அந்த தேர்வு முடியும் வரை மாணவர்களுக்கு வேறுஎதையும் பெறமுடியாமல் முடக்கி வைத்திடுகிறது அதாவது குறிப்பிட்ட தேர்வு தவிர வேறு எதற்காகவும் ஒரு தேர்வின் போது மாணவர்கள் இணையத்தில் உலாவுவதைத் தடுக்கிறது, இது அனைத்து இணைய உலாவிகளின் அடிப்படையிலான தேர்வு அமைப்புகளுடன் இணக்கமானது, கற்றல் மேலாண்மை அமைப்புகளுடன் கூடுதல் ஒருங்கிணைப்பு கொண்டுள்ளது Moodle, ILIAS போன்ற வெளிப்புற பயன்பாடுகளின் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை அனுமதிக்கின்றது, தற்போதைய விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1, விண்டோஸ் 10, மேக் எக்ஸ் 10.7 முதல் மேக் 10.13 வரை ஆதரிக்கின்றது வழக்கமான இணையஉலாவியில் அல்லது ஒரு மின்னஞ்சலில் ஒரு சிறப்பு இணைப்பைக் சொடுக்குவதன் மூலம் ஒவ்வொரு தேர்வுக்கும் இந்த SEB 2.x ஐத் துவங்கலாம் அல்லது மறுகட்டமைப்பு செய்திடலாம், இந்த SEB இயங்குகிறதா என்பதைக் மெய்நிகர் இயந்திரத்தின் வாயிலாக கண்டறிந்த கண்காணித்திடலாம், செயல்முறைகள் தேர்வின் போது தேர்வாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு எவ்வெவற்றை அனுமதிக்கலாம் அல்லது எவ்வெவற்றை தடைசெய்யலாம் என இதன்மூலம் கட்டுபடுத்திடலாம், இதன் உள்ளமைவு கோப்புகளை உருவாக்கியபின்னர் இதில் SEB ஐ நிறுவிய பின் கட்டமைக்க / மறுகட்டமைக்க முடியும் என்றவாறான எளிதான நிறுவுகை வசதியையும் வரிசைப்படுத்தலையும் கொண்டுள்ளது மேலும்விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் www.safeexambrowser.org/எனும் இணையதளமுகவரிக்கு செல்க