Author Archives: த. சீனிவாசன்

எளிய தமிழில் பைத்தான் – 4

சில அடிப்படைகள் hello world என்று அச்சிடுவது மட்டும் போதாது. அதற்கும் மேலே ஏதாவது செய்தால் நன்றாக இருக்குமே. பயனரிடம் ஏதாவது கேள்வி கேட்கலாம். பதில் வாங்கி, அதில் ஏதாவது மசாலா சேர்த்து, புது கலவையாக்கித் தரலாமா? அதற்கு, பைத்தானில் உள்ள Constant, Variable ஆகியவை உதவும். அவை பற்றி இங்கே காணலாம். அதற்குள்ளே புது வார்த்தைகளைக் கண்டு பயந்து விட வேண்டாம். நான் முதலில் இவற்றைக் கண்டு மிகவும் கலங்கிப் போன நாட்கள் பல. செந்தமிழும்… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 3

முதல் நிரல் கணினி நிரல் உலகில், காலம் காலமாக செய்யப்பட்டு வரும் ஒரு சடங்கு ஒன்று உள்ளது. எல்லா கணினி நிரல் நூல்களிலும் இதைக் காணலாம். என்ன? அறிவியலிலும் சடங்கா? ஏன் இப்படி? ஆம். ஆனால் இங்கு நாம் எந்தக் கடவுளையும் வணங்கத் தேவையில்லை. பூசைகள் ஏதுமில்லை. முதல் நிரலாக, ‘Hello World’ என்பதை திரையில் அச்சடிப்பதே முதல் நிரல். இதுதான் இத்துறையின் ஒரு சின்ன சடங்கு. சாதாரணமாகவே நாம், சடங்கு என்று வந்து விட்டால், எந்தக்… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 2

வீடியோ எப்போது? ‘உங்க பைத்தான் கட்டுரை அருமையாக இருக்காமே. வீடியோ ஏதாவது தறீங்களா? நித்யாவையும் GenAI வீடியோ போட சொல்றீங்களா?’ என்று நேற்று ஒருவர் கேட்டார். ‘ஏங்க. இப்போதான் முதல் கட்டுரையே எழுதியிருக்கேன். அதைப் படிச்சிட்டீங்களா?’ ‘இல்லீங்க. அதுக்கெல்லாம் நம்மால முடியாதுங்களே?’ ‘ஐயோ. உங்களுக்கு படிக்கத் தெரியாதா?’ ‘அட. காலேஜ் படிச்சிருக்கேன். ஆனா இதையெல்லாம் படிக்க எனக்கு வராதுங்க. தமிழ் படிப்பது கஸ்டம்.’ ‘ஓ. அப்படியா? இந்தாங்க. ஆங்கிலப் புத்தகம் . A byte of Python… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 1

அனைவரும் தாய் மொழி, ஆங்கிலம், கூடவே மூன்றாவது மொழியாக பைத்தான் ( லினக்சுடன் ) கற்றுக் கொண்டால், இந்த உலகம் இன்னும் இனிமையானதாகும். மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வழி ஏற்படும். அந்தப் பொற்காலம் விரைவில் வரட்டும்.

என்று கூறியபோது, மகன் வியன் வியந்து போனான்.

‘அம்மா உனது பிறந்தநாளுக்கு என்ன பரிசு தந்தார்?’
‘GenAI பற்றிய ஒரு தொடர் இன்று இணையத்தில் எழுதத் தொடங்கியுள்ளார். அதுவே சிறந்த பரிசு.’
‘அம்மா எழுத்தாளரா?’
‘ஆமா. திருமணமாகி 14 ஆண்டுகளில், 14 நூல்கள் எழுதியுள்ளார்.’
‘ஆ. நான் பெரியவனாகி அவற்றை எல்லாம் படிப்பேன்.’
‘நீயும் எழுத வேண்டும்’
‘எழுதுவேன் எழுதுவேன். நீங்கள் எத்தனை புத்தகம் எழுதியுள்ளீர்கள்?’

சாப்ட்வேர் டெஸ்டிங் -3 – சாப்ட்வேர் என்றால் என்ன?

முந்தைய பதிவுகளில் டெஸ்டிங் என்றால் என்ன என்பது பற்றியும் சாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படை நோக்கம் பற்றியும் பார்த்திருந்தோம்.  இப்போது நம் முன்னால் நிற்கும் கேள்வி – சாப்ட்வேர் (மென்பொருள்) என்றால் என்ன?  இதெல்லாம் என்ன கேள்வி?  இதோ சொல்கிறேன் – கணினிக்கு ஏதோ ஓர் உள்ளீட்டைக் கொடுத்து தேவைப்படும் பதிலை எடுத்துக்கொள்வது – சரிதானா?  என்கிறீர்களா!  நூற்றுக்கு நூறு சரி!  மென்பொருள் என்பது அது தான்!  அதைத் தான் நாம் சோதிக்கப் (டெஸ்டிங்) போகிறோம். மென்பொருளை, லினக்சில்… Read More »

பெரும் தரவு (பிக் டேட்டா) பகுதி – 3 HADOOP

பெரும் தரவு (பிக் டேட்டா) பகுதி – 3 HADOOP அனைவருக்கும் வணக்கம். நாம் முந்தைய இரண்டு கட்டுரைகளில் பெரும் தரவு என்றால் என்ன அதன் பண்புகள், பெரும் தரவு கட்டமைப்பில்லுள்ள பல்வேறு கூறுகள், நவீன தரவு செயலாக்கம் மற்றும் மேலாண்மை எப்படி பாரம்பாிய தரவு செயலாக்கத்தில் இருந்து வேறுபடுகிறது என்று கண்டோம். அந்த வரிசையில் Hadoop என்றால் என்ன, அது எப்படி மிகப்பொிய பெரும் தரவு பிரச்சினையை சமாளிக்கிறது என்பதனை இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.… Read More »

பைதான் – 10

6.4 Package பைதான் மாடியூல்களில் பலரும் பங்களிக்கும் போது ஒரே variable அல்லது function பெயரை பலரும் உருவாக்கும் நிலை நேரிடலாம். அப்போது ஏற்படும் பெரும் குழப்பத்தை தவிர்க்க packageஎன்ற முறை பயன்படுகிறது. ‘dotted module name’ அதாவது ‘பெயர்களை புள்ளி மூலம் பிரித்தல்’ என்ற முறையால், பல்வேறு பெயர்களை எளிதாக கையாள முடியும். உதாரணமாக A.Bஎன்பது Aஎன்ற package-ல் உள்ள B என்ற மாடியூலை குறிக்கிறது. இவ்வாறு பல மாடியூல்களை ஒரே package-ல் சேர்க்க முடியும்.… Read More »

பைதான் – 11

6.4.1 From package import *   from sound.effects import * என எழுதும்போது என்ன நடக்கிறது? File system-க்குள் சென்று, அந்த package-ல் உள்ள submodules-ஐ படித்து அவை அனைத்தையும் import செய்கிறது. மிக எளிதாக தோன்றும் இந்த வழி mac மற்றும் windows ஆப்பரேடிங் சிஸ்டங்களில் சரியாக இயங்குவதில்லை. இவற்றில் filename-ஆனது ஒரே மாதிரியாக இல்லை. ECHO.PY என்ற file-ஐ import செய்யும்போது echo, Echo, ECHOஎன்ற எந்த பெயரில் importசெய்வது என்று… Read More »

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்

1. பதிப்புரிமை பதிப்புரிமை (Copyright) என்பது ஓர் எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், பயன்படுத்துதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை உரிமையாளருக்குப் படைப்பின் மீதான கட்டுப்பாட்டினையும் இலாபமீட்டும் உரிமையையும் தருகிறது. சில சந்தர்ப்பங்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம். இந்த அனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம். பதிப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிப்பாடுகளை; எண்ணங்களை அல்ல.… Read More »

கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்?

அன்புள்ள கணிணி மாணவருக்கு, கணிணி அறிவியல் படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடும், வேலை தேடப்போகும் மாணவருக்கு, வணக்கம். உங்கள் வேலை தேடும் படலம் பற்றி சிறிது பேசலாமா?   தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் படித்து, பட்டம் பெற்று, கணிணித் துறையில் வேலை தேடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 2 லட்சம் வேலைக்கு பணியிடங்கள் உருவாவது சாத்தியம் இல்லைதானே. இதனால் தான் அனைவருக்கும் உடனே வேலை கிடைப்பதில்லை. ஒரு பத்து சதம் பேருக்குதான்… Read More »