Author Archives: த. சீனிவாசன்

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் – திட்டப்பணி

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்களின் தேவை பெருமளவில் உள்ளது. அவற்றை உருவாக்கவும், நிரலாளர்களை ஊக்குவிக்கவும் Google Summer of Code போன்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தலாம். திட்டப்பணிகள் 1. தமிழ் மொழி சார்ந்த மென்பொருட்களை பட்டியலிடுதல். உங்களுக்கு தேவையான மென்பொருட்களின் பட்டியலை tshrinivasan@gmail.com க்கு அனுப்புக. அவை கணிணி, மொபைல் சார்ந்து இருக்கலாம். மொழியியல், வணிகம், விளையாட்டுகள் என எத்துறையிலும் இருக்கலாம். 2. வல்லுனர் குழு உருவாக்கம் பட்டியல் வெளியானதும், வல்லனர் குழு உருவாக்க வேண்டும்.… Read More »

Chennai Events – சென்னை நிகழ்வுகளின் தொகுப்பு

சென்னை மாநகரம் பல நிகழ்வுகளின் துறைமுகமாகத் திகழ்கிறது. சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்றாடம் பல பொது நிகழ்ச்சிகள் நடைபெறுகிறன. அவற்றுள் தொடர்நிரல் நிகழ்வுகள் (Hackathon), மென்பொருள் பயனர் குழுக்களின் சந்திப்புகள் (Software Users Group meetings), பயன்பாடு வெளியீடு (Product launch), துவக்க விழாக்கள் போன்ற கணினியாளர்களுக்கான தொழில்நுட்ப நிகழ்ச்சிகளும், பதிவர் சந்திப்பு, கீச்சர் சந்திப்பு (Tweetup), புகைப்பட பயிற்சி மற்றும் பயிலரங்குகளும் அடங்கும். இந்நிகழ்ச்சிகள் பற்றி வலைத்தளங்கள், பதிவுகள், முகநூல் நிகழ்வுகள் (Facebook Events),… Read More »

Python – errors and exceptions தமிழில்

  பைதான் – நிரல் அமைப்புப் பிழைகளும் இயக்க நேரப் பிழைகளும் Errors and Exceptions இதுவரை நாம் செய்த நிரல்களில் சில நேரம் பிழைகள் ஏற்படலாம். அவை பற்றி இங்கு விரிவாகக் காணலாம். 8.1 Syntax Errors ஒரு நிரலை தவறாக, எழுத்துப் பிழை அல்லது அமைப்புப் பிழையுடன் இயக்கும் போது ஏற்படுகிறது. பிழைக்கான காரணமும் காட்டப்படுகிறது. உதாரணம் >>> while True print ‘Hello world’ File “<stdin>”, line 1, in ?… Read More »

பைதான்-7

5.1.3 Functional Programming Tools: Functional programming-ல் நாம் function-களையே மற்றொரு function-க்கு argument-ஆகத் தரலாம். இந்த முறையில் நிரல் எழுத நமக்கு மூன்று முக்கிய functions உள்ளன. அவை filter(), map() மற்றும் reduce(). filter(function,sequence) இது ஒரு function மற்றும் ஒரு வரிசையான items-ஐ arguments-ஆக பெறுகிறது. function(item) என்பது true-வாகும் items-ஐ மட்டும் return செய்கிறது. இந்த sequence-ஆனது string அல்லது tupleஎனில், filter-ன் result-ம் அதே வடிவில் இருக்கும். இல்லையெனில் ஒரு… Read More »

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பாகம் -1

  Free For All – by Peter Wayner புத்தகத்தின் மொழிபெயர்ப்பு   விவாதம்   ஜனவரி 1998   பணம் மட்டுமே முதன்மையாக வஞ்சகம் மட்டுமே உயிர் குணமாய் கொண்ட உலகம். வாஷிங்டன் D.C-ன் ஒரு நீதிமன்றத்தில், உலகின் பெரும் பண முதலையான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனக்காக வாதாடுகிறது. “மைக்ரோசாப்ட், ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகிறது. தனது பலத்தால் போட்டியாளர்களை நசுக்கி வளரவிடாமல் செய்கிறது” என்பதே குற்றச்சாட்டு. ஆனால் இவற்றை மைக்ரோசாப்ட் மறுக்கிறது. இது ஒரு… Read More »

பைதான் – 8

மாடியூல் – Module: பைதான் interpreter- ல் சிறிது நேரம் வேலை செய்கிறீர்கள். பல variableமற்றும் functionகளை உருவாக்கி பயன்படுத்துகிறீர்கள். பின் interpreter-ஐ விட்டு வெளியேறுகிறீகள். சிறிது நேரம் கழித்து மீண்டும் python interpreter-ஐ இயக்குகிறீர்கள். இதில் சற்று நேரத்திற்கு முன் உருவாக்கிய variable மற்றும் functions கிடைப்பதில்லை. அவற்றை பயன்படுத்த, மீண்டும் உருவாக்க வேண்டும். இதற்கு ஒரே மாற்று வழி, நாம் எழுதும் program வரிகளை ஒரு text file-ல் சேமித்து, பைதான் மூலம் அந்த… Read More »

வெர்சன் கன்ட்ரோல் சிஸ்டம் – ஓர் அறிமுகம்

பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு(Version Control System) என்பது மென்பொருள் உருவாக்கும் வல்லுனர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். ‘அப்படியா? நான் அதைப்பற்றி கேள்விப்பதே இல்லையே!’ என்கிறீர்களா? உங்களுக்கு அறியாமலேயே இதை பயன்படுத்தி வருகிறீர்கள். பொதுவாக ஒரு மென்பொருளை குழுவில் ஒன்று முதல் பத்து வரை (சிறிய மென்பொருளுக்கு) அல்லது நூற்றுக்கணக்கான (பெரிய, சிக்கலான மென்பொருளுக்கு) வல்லுனர்கள் இருப்பார். குழுவில் அனைவருக்கும் உரித்தான பணிகள் பகிரப்படும்.மென்பொருள் நூற்றுக்கணக்கான சிறு சிறு துண்டு வேலைகளாக பிரிக்கப்படும். நீங்கள் தான் முதலில் Program-ஐ… Read More »

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – 2

  க்னு/லினக்ஸின் கதை வித்தியாசமானது. உலகெங்கும் உள்ள மென்பொருள் வல்லுனர்கள், தங்கள் இருட்டு அறையில் அமர்ந்து தங்கள் நேரங்களை செலவிட்டு இதை உருவாக்கினர். ஆனாலும் க்னு/லினக்ஸ் பயன்படுத்த எளிதானதாக இல்லை. நிறுவுதலும் மிகவும் கடினம். தெளிவான உதவிக் குறிப்புகளும் ஆவணங்களும் இல்லை. க்னு/லினக்ஸ் பெரும்பாலும் ஒரு hobby-யாக ஒரு பொழுதுபோக்காகமட்டுமே இருக்கிறது. சாதாரண பயனர்கள் யாருக்கும் க்னு/லினக்ஸ் கடினமாகவே இருந்தது. ஆனாலும் க்னு/லினக்ஸின் பின் உள்ள பல கோடி நிரலர்கள் அதனை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர். நிரல்களை… Read More »

கணியம் – இதழ் 12

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2012 ஆண்டில் கட்டற்ற மென்பொருட்கள் கணிப்பொறியை தாண்டி மொபைல் சாதனங்களை  பெரிய அளவில் சென்றடைந்தன. ஆண்ட்ராயிடு இயங்குதளம் முன்னிலையில் இருந்தாலும், அதில் உள்ள பெரும்பான்மையான மென்பொருட்கள் தனியுரிம மென்பொருட்களே. ஆண்ட்ராயிடு இயங்குதளத்திலும் அதிக அளவில் கட்டற்ற மென்பொருள்களை உருவாக்கவும் பயன் படுத்தவும் வேண்டும். Firefox OS மற்றும் ubuntu போன்றவை மொபைல் சாதனங்களில் முழுதும் கட்டற்ற மென்பொருள்களை கொண்டு வரும்… Read More »

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் –  சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in  Fundamental & Usage of Tamil Computing 02.12.12 – 28.12.12 எனும் ஒரு மாத காலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு டிசம்பர் மற்றும் மே மாதங்களில் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித் தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது. கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி,… Read More »