Category Archives: கட்டற்ற ஆன்டிராய்டு செயலிகள்

ஆண்ட்ராய்டில் திறவுகோள் உருவப்பொத்தான் (Key Icon) ஏன் உள்ளது?

நம்முடைய ஆண்ட்ராய்டு திறன்பேசியின் நிலைபட்டியலில் வீற்றிருக்கின்ற ஒரு சிறிய திறவுகோள் உருவப்பொத்தான் ஆனது அங்கு ஏன் இருக்கின்றது அல்லது அதற்கான அர்த்தம் அல்லது அதற்கான காரணம் என்ன என்று நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா? உண்மையில் அது நமக்கு ஏதேனுமொரு எச்சரிக்கை அளிப்பதை போன்று தோன்றினாலும் அல்லது நம்முடைய சாதனத்தில் ஒரு சிக்கல் இருப்பதைக் குறிப்பது போன்றுத் தோன்றினாலும், பொதுவாக நாம் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அந்த திறவுகோள் உருவப்பொத்தான் ஆனது ஏதேநுமொரு சிக்கலைப் பற்றி நம்மை எச்சரிப்பதற்காக… Read More: ஆண்ட்ராய்டில் திறவுகோள் உருவப்பொத்தான் (Key Icon) ஏன் உள்ளது? »

Android Autoஎனும்இயல்பான செயலுக்கான Wazeஎனும் செயலியால் மின்கலண் (Battery) விரைவாக காலியாவதை நிறுத்துவதெவ்வாறு

Waze என்பது அதன் விரைவான போக்குவரத்து நிலவரங்கள் , சாலை எச்சரிக்கைகள் காரணமாக பல ஓட்டுநர்களுக்குப் பிடித்தமான வழிசெலுத்தல் செயலியாக உள்ளது, ஆனால் இந்த ஆண்ட்ராய்டு தானியங்கி செயலிஆனது பயணங்களின் போது ஆண்ட்ராய்டு கைப்பேசியின் மின்கலணின் மின்சாரத்தினை விரைவாக காலிசெய்துவிடும். இந்த செயலிகளை மாற்றுவதற்குப் பதிலாக, ஆண்ட்ராய்டு அமைவுகளில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் திறன்பேசியின் மின்கலணின்மின்சாரம் விரைவாககாலியாகும் சிக்கலைஎளிதாக சரிசெய்யலாம். Wazeஆனது மின்கலணின்மின்சாரம் காலியாவதை சரிசெய்வதற்கான முக்கிய அமைப்புகள் பின்வருமாறு • இருப்பிட அணுகலைக்… Read More: Android Autoஎனும்இயல்பான செயலுக்கான Wazeஎனும் செயலியால் மின்கலண் (Battery) விரைவாக காலியாவதை நிறுத்துவதெவ்வாறு »

ஆண்ட்ராய்டு கைபேசியை மேசைக்கணினி பயன்முறையுடனான(desktop mode) மீச்சிறு கணினியாக மாற்றுவது எவ்வாறு

மேசைக்கணினி ,போன்ற அமைவிற்குள் மூளையாக(brains) இருக்கும் ஆண்ட்ராய்டு கைபேசி என்ற கருத்தமைவு கடந்த பத்தாண்டிற்கு முன்பு பிரபலமடையவில்லை, ஆனால் இந்த வழிமுறை இன்னும் நிறைய நம்பிக்கைக்குரியதாகின்றது. உண்மையில், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் கைபேசியில்”மேசைக்கணினியின் பயன்முறை(desktop mode)” திறக்கப்படுவதற்கு காத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்புகூட உள்ளது. அதை எவ்வாறு செயல்படுத்தி பயன்பெறுவது என இப்போது காண்போம். முற்காலத்தில், Motorola Atrix 4G, Asus PadFone போன்ற கைபேசிகளுக்கு அவற்றில் சிறந்தமேசைக்கணினி வசதிவாய்ப்புகளைப் பயன்படுத்த விலையுயர்ந்த பாகங்கள் தேவைப்பட்டன. இப்போதெல்லாம்,… Read More: ஆண்ட்ராய்டு கைபேசியை மேசைக்கணினி பயன்முறையுடனான(desktop mode) மீச்சிறு கணினியாக மாற்றுவது எவ்வாறு »

புதிய ஆண்ட்ராய்டு கைபேசியில் எப்போதும் முதலில் நிறுவுகை செய்திடவிரும்புகின்றகட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகள்( apps)

புதிய ஆண்ட்ராய்டு கைபேசியை கட்டமைப்பதுஎனும் செயல் நமக்கு எப்போதுமே உற்சாகமாக இருக்கும், ஆனால் துவக்க அமைப்பை முடித்தவுடன், நமக்குப் பிடித்த பயன்பாடுகளை நிறுவுகைசெய்வது பொதுவாக அடுத்த படிமுறையாகும். இந்த பயன்பாடுகள்(apps) அடிப்படையில் நம்முடைய முழு அனுபவத்திற்கும் ஏற்றவாறு அமைகின்றன. stock apps என்பதுஅடிப்படைகளை உள்ளடக்கி யிருந்தாலும், உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கவும், தனியுரிமையை மேம்படுத்தவும், பயன்பாட்டினை மேம்படுத்தவும் கூடிய கட்டற்றகட்டணமற்ற கருவிகளுக்கு பஞ்சமில்லை. வழக்கமான பணிகளை தானியக்கமாக்குவது , கோப்புகளைப் பகிர்வது முதல் படத்தில் திருத்தத்தை கையாளுதல், மறைக்கப்பட்ட… Read More: புதிய ஆண்ட்ராய்டு கைபேசியில் எப்போதும் முதலில் நிறுவுகை செய்திடவிரும்புகின்றகட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகள்( apps) »

விக்கி மூலத்தில் படங்களை இணைக்க ஒரு கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்

நாம் பல்வேறு கட்டுரைகளில், கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் குறித்து பார்த்திருந்தோம். அடிப்படையில், கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகளில் குறிப்பிடத்தக்க துறையினருக்கு பயன்படும் வகையிலான செயலிகளும் இருக்கத்தான் செய்கின்றன. நமது கணியம் இணையதளத்தில் கூட எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களிடம்  நேர்காணலும்  மேற்கொண்டு இருந்தோம். அது தொடர்பான கட்டுரையில் கூட  ஏற்காடு இளங்கோ அவர்கள் சுமார் 23,000 புகைப்படங்கள் வரை விக்கி மூலத்தில் இணைத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தேன். உண்மையிலேயே, விக்கி மூலத்தில் புகைப்படங்களை இணைப்பதற்கு பெரும்பாலானவர்கள் கணினிகளை பயன்படுத்துகிறார்கள்.… Read More: விக்கி மூலத்தில் படங்களை இணைக்க ஒரு கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு… »

உங்கள் வரவு செலவுகளை கவனிக்க ஒரு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 17

உங்களுடைய வரவு செலவுகளை பார்ப்பதற்கு மற்றும் எங்கு செலவழிக்கிறோம் என்றே தெரியாமல் பணம் செலவழிகிறது? என்று வருந்துபவர்களுக்கு ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி இருக்கிறது இந்த ஆண்ட்ராய்டு செயலியானது முழுக்க முழுக்க கட்டற்ற முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதால், உங்களுடைய தகவல்கள் மற்றும் வரவு செலவு கணக்குகள் பெரு நிறுவனங்களின் கைகளில் சென்று விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுமோ என்று வருந்த வேண்டாம். இந்த செயலியானது மிகவும் எளிமையான மற்றும் நுட்பமான வரவு செலவு கணக்குகளை சமாளிக்கக்கூடிய வசதிகளை வழங்குகிறது. மேலும்… Read More: உங்கள் வரவு செலவுகளை கவனிக்க ஒரு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற… »

6000+ லினக்ஸ் கட்டளைகள்  ஒரே செயலியில்……| கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 16

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட லினக்ஸ் கட்டளைகள் ஒரே இடத்தில்,அதுவும் இணையமின்றி எளிமையாக படித்துப் பார்க்கும் வகையில் ஒரு செயலியில் காணக் கிடைக்கிறது. சமீப காலமாக லினக்ஸ் பயனராக மாறியிருக்கும் எனக்கு, எங்கு லினக்ஸ் கட்டளைகளைப் படிப்பது? ஒவ்வொரு கட்டளையின் அடிப்படை குறித்தும் அறிந்து கொள்வதற்கு ஒரு கையேடு இருந்தால் வசதியாக இருக்குமே என்றெல்லாம் தோன்றியிருக்கிறது. அதற்காக சில இணைய புத்தகங்கள் கூட காணக் கிடைக்கின்றன. நம் கணியத்திலும் கூட விரிவான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இருந்த போதிலும் கூட,அவற்றில் உங்களால்… Read More: 6000+ லினக்ஸ் கட்டளைகள்  ஒரே செயலியில்……| கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 16 »

மொபைல் கருவிகளிலேயே பைத்தானை இயக்க சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 15

பல்வேறு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் குறித்து பார்த்து வருகிறோம். கணினிகளில் நிரலாக்க குறிப்புகளை இயக்கி பார்ப்பதற்கு பல்வேறு விதமான எடிட்டர்கள்(code editors) காண கிடைக்கும். மொபைல் கருவிகளில் கூட பல்வேறு விதமான எடிட்டர்கள்(code editors )இருக்கின்றன. இருந்த போதிலும், இவை கட்டற்ற வகையில் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. மேலும், இவற்றின் செயல் திறன் மிக மிகக் குறைவாகவே இருக்கும். நிரலாக்கத்தின் ஒவ்வொரு வரிக்கும், வெவ்வேறு விதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால், இன்றைக்கு நான் குறிப்பிட… Read More: மொபைல் கருவிகளிலேயே பைத்தானை இயக்க சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு… »

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனின் இருப்பிடத்தை மாற்றியமைக்கும் கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 14

பல்வேறு பயனுள்ள கட்டற்ற செயலிகள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். பலரும் நம்முடைய மொபைல் போனில் தற்போதைய இருப்பிடத்தை, யாராவது கண்டுபிடித்து விடுவார்களா? எனும் அச்சத்திலேயே இருப்பார்கள். உதாரணமாக, நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? எங்கு பொருள் வாங்குகிறீர்கள்? எந்த இடத்தில் அதிக நேரத்தை செலவிடுகிறீர்கள்? போன்ற தகவல்கள் அனைத்தும் திருடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அங்கீகரிக்கப்படாத செயலிகளை உங்கள் மொபைல் கருவியில் நிறுவும் போது, உங்களுடைய இருப்பிட தகவல்கள் மிக எளிதாக வெளியில் கசியும் அபாயம் இருக்கிறது.… Read More: உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனின் இருப்பிடத்தை மாற்றியமைக்கும் கட்டற்ற செயலி | கட்டற்ற… »

புகைப்பட வேலைகள் அனைத்தையும் பார்க்க சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் 13

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் வரிசையில் பல்வேறு சுவாரசியமான சேவைகள் குறித்து பார்த்திருக்கிறோம். ஆனால், பல நண்பர்களும் விருப்பப்பட்டு கேட்கக்கூடிய செயலி என்னவென்றால், சமூக வலைதளங்கள் புகைப்படங்கள் மற்றும் குழு புகைப்படங்கள் என தங்கள் மொபைல் போனில் நிரம்பி வழியும் புகைப்படங்களில் விதவிதமாக edit செய்து பார்ப்பதற்கு ஏதாவது சிறந்த கட்டற்ற செயலி இருக்கிறதா? என்றுதான் கேட்கிறார்கள்.இந்தக் கேள்வியை நான் பலமுறை கடந்து வந்து விட்டேன். ஒரு சில கட்டற்ற செயலிகளை நான் பயன்படுத்தியும் பார்த்தேன்.ஆனால் அவற்றின் செயல்… Read More: புகைப்பட வேலைகள் அனைத்தையும் பார்க்க சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு… »