Category Archives: கட்டற்ற ஆன்டிராய்டு செயலிகள்

குழந்தைகள் விளையாட்டாக படிப்பதற்கு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயல்கள் வரிசையில் பல்வேறு அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு செயல்கள் குறித்து மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நான் பார்த்ததிலேயே, என்னை மிகவும் கவர்ந்த மற்றும் ஆர்வத்தை தூண்டிய ஒரு கட்டற்ற செயலி தான் Gcompris. கால் நூற்றாண்டு காலமாக இந்த செயலி இயங்கி வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த செயலி பிரத்யேகமாக குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கும் எளிமையாக உலக நுட்ப அறிவை அறிந்து கொள்வதற்கும், ஆகச் சிறந்த செயலியாக கட்டற்ற முறையில்… Read More: குழந்தைகள் விளையாட்டாக படிப்பதற்கு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் »

Chrome க்கு மாற்றான ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு உலாவி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்

Google செயலிகளுக்கு மாற்றாக இருக்கக்கூடிய செயலிகள் குறித்து தொடர்கட்டுரைகள் எழுதுவதாக முன்பே தெரிவித்திருந்தேன். மேலும், கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாகவும் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு தலைப்புகளின் இணைப்பாக, குரோம் உலாவிக்கு(Chrome browser)மாற்றாக உங்களுக்கு இருக்கக்கூடிய சிறந்த கட்டற்ற உலாவி குறித்து தான் இன்றைக்கு பார்க்க வருகிறோம். அடிப்படையில் குரோம், மைக்ரோசாப்ட் உலாவி, சபாரி போன்ற பல்வேறு விதமான உலாவிகள்(Browser)நம் கருவிகளில் உலாவிக் கொண்டிருக்கிறது. இதில் ஃபயர் ஃபாக்ஸ்(Firefox)போன்ற கட்டற்ற உலாவிகளும் அடக்கம். இருந்த… Read More: Chrome க்கு மாற்றான ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு உலாவி | கட்டற்ற ஆண்ட்ராய்டு… »

விக்கிபீடியாவின் அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு செயலி

தற்காலத்தின் ஆகச்சிறந்த தரவு களஞ்சியமாக விக்கிபீடியா விளங்குகிறது. விக்கிப்பீடியாவின் சிறப்புகள் மற்றும் அதன் முக்கிய பங்களிப்பாளர்கள் குறித்து பல்வேறு கட்டுரைகள் கணியம் தளத்திலேயே காணக் கிடைக்கின்றன . ஆனால், பலருக்கும் விக்கிப்பீடியாவிற்கான அதிகாரப்பூர்வ செயலியானது இருப்பது தெரிந்திருப்பதில்லை. பெரும்பாலும், இணையத்தில் தேடியே விக்கிப்பீடியா கட்டுரைகளைப் படிக்கிறார்கள். விரும்பிய கட்டுரைகளை பதிவு செய்து வைப்பது, தேடும் நேரத்திலேயே எவ்வித தாமதமும் இன்றி கட்டுரைகளைப் படிப்பதற்கும் இந்த ஆண்ட்ராய்டு செயலி பயன்படுகிறது. மேலும், இந்த செயலியை பயன்படுத்தி உங்களால் சில… Read More: விக்கிபீடியாவின் அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு செயலி »

ஆபத்தில் உதவும் கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 9

இந்தப் பகுதியில், பல்வேறு விதமான கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக பார்த்து வருகிறோம். பல்வேறு விதமான பாதுகாப்பு நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உங்களுக்கு காண கிடைக்கும். ஆனால், இவற்றில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், இது போன்ற செயலிகளின் மூலம் உங்களுடைய இருப்பிடம் மற்றும் சில முக்கியமான தகவல்கள் செயலியை தயாரித்தவர்களுக்கு தெரிந்து விடும். மேலும்,இத்தகைய செயலிகள் கட்டற்ற வகையில் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு செயலியை நிறுவி விட்டு… Read More: ஆபத்தில் உதவும் கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 9 »

ஒரு சிறந்த கட்டற்ற துவக்கி (launcher) | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 9

நம்மில் பலரும் அதிகப்படியான நேரம் மொபைல் போன்களில் செலவழிப்பதற்கு, மிக முக்கியமான காரணம் மொபைல் போனை திறந்தாலே நாம் எதை தேட நினைத்தோமோ! அதை தவிர வேறு அனைத்தையும் பார்த்து முடித்து விடுகிறோம். நமது துவக்க திரையிலேயே வரக்கூடிய, விளம்பரங்கள்,காணொளிகள் ஆகியவை நமக்கு கவனச் சிதறலை ஏற்படுத்துகின்றன. இத்தகைய, கவன சிதறல்களை தடுப்பதற்கு, ஏதேனும் செயலி இருக்கிறதா? என தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது! இந்த கட்டுரையில் நான் குறிப்பிடவிருக்கும் துவக்கி செயலி( launcher app).… Read More: ஒரு சிறந்த கட்டற்ற துவக்கி (launcher) | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி… »

உங்கள் மொபைல் போனை இயற்பியல் ஆய்வுக்கூடமாக மாற்றுங்கள் | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்: 8

பல்வேறு விதமான, கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக நம்முடைய கட்டுரைகளில் பார்த்து வருகிறோம். ஆனால், நம் வழக்கமாக பார்க்கக்கூடிய ஆண்ட்ராய்டு செயலிகள் அனைத்துமே, ஏற்கனவே இருக்கக்கூடிய செயலிகளின் மாற்று வடிவமாகவே இருக்கும். அதாவது, ஏற்கனவே விளம்பரத்துடன் கிடைக்க கூடிய செயலிகளை, விளம்பரம் இன்றி பயன்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கும். புதியதாக, நவீனத்துவமாக செயலிகளை காண்பது கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது. மொபைல் போன்களின் ஆதிக்கம் தொடங்கிய காலத்தில், symbian போன்ற இயங்குதளங்களில் வெளியான மொபைல் போன்களில், நகைச்சுவைக்காகவே பல… Read More: உங்கள் மொபைல் போனை இயற்பியல் ஆய்வுக்கூடமாக மாற்றுங்கள் | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்:… »

மின் புத்தகங்களை படிக்க, ஒரு சிறந்த செயலி| கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 7

நமது கணியம் அறக்கட்டளையின் கீழ் உள்ள, இலவச புத்தக இணையதளத்திலிருந்து பல வகையான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படித்திருப்பீர்கள். மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருமே, pdf வடிவிலான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிப்பதை பார்க்க முடிகிறது. வழக்கமாக, மொபைல் செய்திகளிலேயே pdf viewer or file viewer செயலிகள் காணப்படுகின்றன. ஆனால், பெரும்பாலானவற்றில் அதிகப்படியான விளம்பரங்கள் காணப்படுவதை கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, வயதானவர்கள் இத்தகைய செயலிகளை பயன்படுத்தி புத்தகங்களை படிக்க விரும்பினால், பக்கத்திற்கு,பக்கம்… Read More: மின் புத்தகங்களை படிக்க, ஒரு சிறந்த செயலி| கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி… »

தடையின்றி அரட்டைகளை மேற்கொள்ள, ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 6

நம்மில் பலரும் நண்பர்களோடு பேசுவதற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம். தற்பொழுது, telegram போன்ற செயலிகளும் பயன்பாட்டில் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், whatsapp போன்ற செயலிகளில் நீங்கள் உரையாடும்போது, உங்களுடைய தகவல்கள் பிற நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாக ஆண்டாண்டு காலமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு கொண்டு வருகிறது. தனிமனித தகவல்களை விளம்பர மற்றும் வியாபார நோக்கங்களுக்காக இத்தகைய நிறுவனங்கள் பயன்படுத்துவதாக, நாம் அடிக்கடி செய்திகளில் படித்து வருகிறோம். இவற்றிற்கு மாற்றாக, என்னுடைய… Read More: தடையின்றி அரட்டைகளை மேற்கொள்ள, ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு… »

நம் அனைவருக்கும் பரிச்சயமான jitsi இன் ஆண்ட்ராய்டு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 5

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக, அவ்வப்போது பார்த்து வருகிறோம். நம் கணியம் நடத்தக்கூடிய, இணைய வழி நிகழ்வுகளை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். பெரும்பாலும், நாம் jitsi எனும் ஒளி உரையாடல் கருவியை தான் பயன்படுத்துகிறோம். இந்த jitsi தளமானது, முழுக்க முழுக்க கட்டற்றதாகும். இதற்காக, நீங்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியது இல்லை. லினக்ஸ் பயனர்களுக்கும், இன்ன பிற கணினி பயனர்களுக்கும் சிறந்த ஒரு தேர்வாக இது அமையும்! என்பதில் சந்தேகம் இல்லை. காரணம், இங்கு நீங்கள் எவ்வித… Read More: நம் அனைவருக்கும் பரிச்சயமான jitsi இன் ஆண்ட்ராய்டு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு… »

தொலைந்து போன உங்கள் மொபைல் கருவியை கண்டுபிடிக்க, ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி

Google நிறுவனத்தின் பைண்ட் மை டிவைஸ்(Find my device)செயலியை, நீங்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். உங்கள் தொலைந்து போன மொபைல் போனை கண்டுபிடிப்பதற்கு, உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய ஜிபிஎஸ்(GPS ) சேவையை google find my device பயன்படுத்தும். ஆனால், மற்ற நேரங்களில் உங்களுடைய இருப்பிட தகவல்கள் google நிறுவனம் பெறுவதாக கருதப்படுகிறது. மேலும், உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் சேவைகள் ஆன் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே! உங்களால்,உங்களுடைய கருவியை கண்டுபிடிக்க முடியும். தற்காலத்தில் இருக்கக்கூடிய மொபைல் போன்களில்,… Read More: தொலைந்து போன உங்கள் மொபைல் கருவியை கண்டுபிடிக்க, ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி »