ADP எனும்நிரலாக்க மொழி

ADP என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மற்றொரு தரவுகளின் செயலி(Another Data Processor) ஆனது இணையதளத்தின் தரவுதள நிரலாக்கததிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மொழியாகும் இது ஒரு உரைநில் மொழியாகும் மேலும் இலகுரக நிரலாக்க கணினிமொழியாக இருப்பதால் இதனை எளிதாக SQL உடன் கலந்து பயன்படுத்த முடியும் .இது Prolog அடிப்படையிலானதாக இருப்பதால் இதனை நிறுவுகை செய்வது எளிது. ஆனால் ADP பின்னடைவு , ஒருங்கிணைப்பை மட்டுமே பயன்படுத்துகிறது. தொடரியலின் உண்மையான மற்றொரு உரைநிரல் மொழியை போன்று, வழிமுறை அழைப்பை ஆதரிக்கிறது.இதனுடைய இணையதள பக்கமானது ADP உடன் உருவாக்கப்பட்டது.
ADP க்கான கருத்தமைவு: இந்த ADPஅனது பின்வரும் கருத்தமைவுகளுடன் உருவாக்கப் பட்டுள்ளது. இது தருக்க நிரலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதொரு பன்முக மொழியாகும் .இதுஒரு இலகுரக உரைநிரல் மொழியாகும் .இது SQLஇற்கான அதிக ஈடுபாடு கொண்டது .இது பழக்கமானஎளிய தொடரியலை கொண்டது .இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென சிக்கலான நடைமுறைகள் எதையும் நிறுவ வேண்டிய அவசியமில்லை .இது ஒழுங்கான இயங்கும் வேகம் கொண்டது பல செயலிகளை ஆதரிக்கிறது.மிகமக்கியமாக அதிகவேலைபளு கொண்டுள்ள பொறியாளர்களுக்கு உதவுகின்ற மிகவும் சக்திவாய்ந்த கணினிமொழியாக இந்த ADP ஆனது திகழ்கின்றது.
பயிற்சிகள் (அடிப்படை தொடரியல்)
சரம்(String):இந்த கணினிமொழியில் (“) எனும் இரட்டை மேற்கோள்குறிகளுக்குள் சரத்தை இணைப்பதன் மூலம் சி எனும் கணினிமொழியின் பாணியில் இதில் சரத்தினை வரையறுக்கலாம். நாம் ஒரு சரத்தில் இரட்டை மேற்கோள்குறிகளை வைத்திட விரும்பினால், சரத்தில் \” என்றவாறு குறிப்பிட வேண்டும்.
\” , \r , \n, \\ ஆகியவை C எனும் கணினி மொழிபோன்றே இருப்பவை களாகும். (‘) எனும் ஒற்றை மேற்கோள்குறிகளுக்குள் சரத்தை இணைப்பதன் மூலம் அடிப்படை பாணியை அந்த சரத்தில் வரையறுக்கலாம்.சரத்தில் இரட்டை மேற்கோள்குறியை வைக்க விரும்பினால்,அந்தசரத்தில் ” என்று குறியீட்டினை குறித்திட வேண்டும். ஒரு சரத்தில் புதிய வரி இருந்தால், அது செல்லுபடியாகும். எடுத்துக்காட்டாக
“SELECT *
FROM tab ”
மாறிகள்(Variables):ஒரு மாறியின் பெயர் $ எனும் டாலர் அடையாளத்தில தொடங்க வேண்டும். எடுத்துக்காட்டாக
$x
$value
முன்கணிப்பு(Predicate): (ஒரு செயலியை அழைப்பது போல) முன்கணிப்பு என்பது ADP மதிப்பீட்டு அலகுகாகும். அதனைபின்வருமாறுஎழுதிடுக.
predicate_name(argment list)
எடுத்துக்காட்டாக
print(“Hello World”)
சொல் (term):சரங்கள் , எண்கள், மாறிகள் , முன்னறிவிப்பு ஆகியவை சொல்(term) என்று அழைக்கப்படுகின்றன.
இலக்கு இனம்(Goal cluase)(ஒரு செயலியின் உடல்உறுப்புகள் போன்றவை) இலக்கு இனத்தில் காற்புள்ளிகளால் பிரிக்கப்பட்ட சொற்கள் “,” அரைப்புள்ளி “;” மூலம் முடிவுபெறுகின்றன. Adp எனும் கட்டளை மூலம் மூல கோப்புகளின் வரிசையின் விளக்கத்தில் இலக்கு விதி மதிப்பீடு செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக
,print(“Hello World”);
மேலே உள்ள மூல கோப்பினை adp கட்டளையுடன் உள்ளிடுக, பின்னர் திரையில் ‘Hello World’ எனும் கட்டளைவரியாக உள்ளிடுக.
கொம்பு இனம்(Horn clause)(ஒரு செயலியின் வரையறை போன்றது) கொம்பு இனத்தில் ஒரு கொம்பின் தலைப்பும் ஒரு இலக்குஇனமுடிவும் உள்ளன. கொம்பின் தலைப்பானது “+” எனும் கூட்டல் குறயீட்டில் இருந்து தொடங்குகிறது மேலும்இது horn_clause_name, argment ஆகிய பட்டியல்களைக் கொண்டுள்ளது.
+horn_clause_name(argment list)goal_cluase
எடுத்துக்காட்டாக
+horn_name($x,$y),print($x, ‘=’, $y);
கருத்துகள்(Comments): ஒரு கருத்து ‘#’ எனும் குறியீட்டிலிருந்து தொடங்கி வரியின் இறுதி வரை சென்று முடிவடைகிறது. ,
,printn(“Hello World”); # இதோஒரு கருத்து.
பயிற்சி (குறிமுறைவரியின் எடுத்துக்காட்டு)
Hello Wold
・program code(helloworld.p)
,printn(“Hello World.”);
・#example of the execution
D:\sample>adp helloworld.p
Hello World.
பொதுாக ADP எனும் கட்டளையானது முதலில்நிரலை ஏற்றுகிறது, பின்னர் அதனை தொகுக்கிறது. அதன்பின்னர், ADP இலக்கு உட்பிரிவுகளை மதிப்பிடுகிறது, இறுதியாக நிரலை செயல்படுத்துகிறது.
இது GPLv2 எனும் உரிமத்தின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது
மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் www.adp.la/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: