Author Archives: ஆமாச்சு

கணிச்சொற் விளக்கம் – 2

இயங்கு தளம் – Operating Systemதங்களின் கணினியை இயக்கத் தேவையான அடிப்படை நிரல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது இயங்கு தளமாகும். பிரபலமாகக் கிடைக்கப் பெறும் கட்டற்ற இயங்கு தளங்கள் லினக்ஸ் கருவினைப் பயன்படுத்துகின்றன.   கரு – Kernel இயங்கு தளங்களின் பிரதான பகுதி கருவென்று அழைக்கப்படும். கணினியின் வளங்களை பராமரிப்பது கருவின் முக்கியப் பணிகளுள் ஒன்று. எளிமையாக வன்பொருள் மற்றும் மென்பொருட்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கருவினுடையது எனலாம்.   மேலோடு – Shell இடப்படும்… Read More »

find கட்டளை

GNU find ஒரு திறம் வாய்ந்த கட்டளை–வரி பயனமைப்பு (command-line utility) ஆகும். இது கோப்புகளையும், அடவைகளையும் (files and folders) படிநிலை மரவமைப்பாக (hierarchical tree structure) தேட பயன்படுகிறது. KDE மற்றும் GNOMEகளில் உள்ள வரைகலை தேடல்களுக்கு இதுவே பின்னிலை (backend) ஆகும். எனினும் find தொடக்கத்தில் பயன்படுத்த கடினமாக இருக்கும். இக்கட்டுரையில் நாம் எளியதிலிருந்து கடினமான பயிற்சிக்கு செல்லலாம். நான் find 4.4.2 பதிபபை நிறுவியுள்ளேன். ஏனனில் இது உபுண்டு 12.04 Precise… Read More »

கணிச்சொற் விளக்கம்

நிரல்   குறிப்பிட்ட பணியினை செய்திடும் பொருட்டு கணினிக்கு இடப்பட வேண்டிய ஏவற்களின் தொகுப்பை நிரல் என்கிறோம். இதனை செய்நிரல் எனவும் வழங்குவர். நிரல் எழுதுவதை தொழிலாக கொண்டவர் நிரலாளர் ஆவார். இங்ஙனம் நிரலாக்குதற்கு பல்வேறு நிரலாக்க மொழிகள் துணை புரிகின்றன. சி, சி++, பைதான், ஜாவா, பேர்ல், ரூபி, பிஎச்பி இவற்றுள் குறிப்பிடத் தக்கவை. மென்பொருள் குறிப்பிட்ட பயனைக் கருத்திற் கொண்டு இயற்றப்படும் நிரட் கோப்புகளின் ஆவணமாக்கத்தோடு கூடிய முறையானத் தொகுப்பு மென்பொருள் ஆகும். மென்பொருட்கள்… Read More »