Author Archives: ச. குப்பன்

திறந்த படிவம் (OpenFOAM)

திறந்த படிவம் (OpenFOAM) என்பது ஒரு கட்டணமற்ற, கட்டற்ற CFD மென்பொருளாகும், இது OpenCFD Ltd என்றநிறுவனத்தாரால்2004 இல் முதன்முதல் உருவாக்கப்பட்டது. வணிகநிறுவனங்களிலும் , கல்வி நிறுவனங்களிலும் பொறியியல், அறிவியல் ஆகி யதுறைகளில் இது ஒரு பெரிய பயனாளர் தளத்தைக் கொண்டுள்ளது. வேதியியல் எதிர்வினைகள், கொதித்தலும்( turbulence ) வெப்பப் பரிமாற்றமும், ஒலியியல், திட இயக்கவியல் , மின்காந்தவியல் உள்ளிட்ட சிக்கலான திரவ ஓட்டங்களிலிருந்து எதையும் தீர்க்க இது ஒரு விரிவான வசதிகளைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளரின் முன்னேற்றங்கள்… Read More »

கெர்பரோஸ்(Kerberos) ஒருஅறிமுகம்

கெர்பரோஸ்(Kerberos) என்பது ஒரு திறமூல அங்கீகரிக்கப்பெற்ற கணினி துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒற்றையான உள்நுழைவு நெறிமுறையாகும்.பொதுவாக விநியோகிக்கப்பட்ட அமைப்புகளில், வாடிக்கையாளர்கள் வலைபின்னல்களில் பிற வளங்களை அணுக வேண்டியிருக்கும் போது, அவை காலப்போக்கில் உருவாகியுள்ள பிணைய நெறிமுறைகள் மூலம் அங்கீகரிக்கப்படுகின்றன. அவ்வாறான விநியோகிக்கப்பட்ட அமைப்புகள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதால் பாதுகாப்பில் முக்கிய அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. நம்மால் பயன்படுத்தப்படும் அடிப்படை குறியாக்க வழிமுறையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட பல்வேறு அங்கீகார நெறிமுறைகள் உள்ளன.அவைகளுள் தற்போது சமச்சீர் விசை குறியாக்கவியல் (தனியார்… Read More »

இயற்கை மொழி செயலாக்கம் (NLP), காட்சிப்படுத்தல் ஆகியவற்றிற்கு spaCy யைப் பயன்படுத்துதல்

spaCy என்பது ஒரு திறமூல பைதான் நூலகமாகும், இது உரைகளிலான தரவை இயந்திர நட்பு வில்லைகளாக பிரித்திட உதவுகிறது. உரையை சுத்தம் செய்வதற்கும் செயலாக்குவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் பயன்படுத்தக்கூடிய பலவிதமான கருவிகள் இதில் உள்ளன, மேலும்இது இயற்கையான மொழி செயலாக்கத்திற்கு உதவுகிறது. இயற்கையான மொழி செயலாக்கம் (Natural language processing (NLP)) என்பது உரைவடிவிலான தரவுகளை பயன்படுத்திகொள்ளும்போதான இயந்திர கற்றலுக்கு (machine learning (ML)) ஒரு முக்கியமான முன்னோடியாகும். உரைகளிலான தரவானது பெரும்பாலும் கட்டமைக்கப்படாதது மேலும் இயந்திர கற்றல்… Read More »

செயற்கை பொது நுண்ணறிவு (AGI)

செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டமாக இருக்கும் செயற்கை பொது நுண்ணறிவானது(AGI), மனித அறிவைவிட கணினியின் நுண்ணறிவை மீறச்செய்கின்றது, இது நிச்சயமாக திறமூலமாக இருக்கும். புத்திசாலித்தனமான மனிதர்களால் தீர்வுசெய்யக்கக்கூடிய பரந்த அளவிலான பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க இது முயல்கிறது. இது குறுகிய AIஎனும் செயற்கை நுன்னறிவுடன் (இன்றைய AI இன் பெரும்பகுதியை உள்ளடக்கியது) நேர்மாறாக உள்ளது, இது ஒரு குறிப்பிட்ட சிக்கலில் மனித திறன்களை மீற முயற்சிக்கிறது. எளிமையாகச் சொல்வதானால், AI இன் அனைத்து எதிர்பார்ப்புகளையும் AGIஆனது நிறைவேற்றும்.… Read More »

FuryBSD எனும் இயக்கமுறைமை ஒரு அறிமுகம்

இது ஒரு சக்திவாய்ந்த, சிறிய, புதிய, திற மூல FreeBSD இன்அடிப்படையிலான இயக்கமுறைமையாகும். இது அதனுடைய வரைகலை இடைமுகத்துடன் PC-BSD , TrueOS ஆகியவை போன்ற கடந்த கால மேஜைக்க்கணினி BSD செயல்திட்டங்களுக்கு மரியாதை செலுத்துகின்றது மேலும் நிறுவுகைசெய்திடாமல் நேரடியாகசெயல்படும், கலவையான USB / DVD image போன்ற கூடுதல் கருவிகளை சேர்க்கின்றது. இது பயன்படுத்த முற்றிலும் இலவசமாகவும் BSD உரிமத்தின் கீழும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விநியோகிக்கப்படுகிறது. இது முற்றிலும் FreeBSD மேஜைக்கணினியின் புகழ்பெற்ற நிலைத்தன்மையை அடிப்படையாகக்… Read More »

அடுத்த தலைமுறைவலைபின்னல் மேலாண்மை அமைப்பு(NG-NetMS)

பிணைய மேலாண்மை மென்பொருளிற்காக பல்லாயிரக்கணக்கான டாலர் ஏன் செலுத்த வேண்டும்? அதற்கு பதிலாக இப்போது NG-NetMS எனும் சுருக்கமான பெயரால் அழைக்கப்பெறும் அடுத்த தலைமுறை வலைபின்னல் மேலாண்மை அமைப்பின் (Next Gen Network Management System ) மூலம் நம்முடைய வலைபின்னல்களின், சிக்கலான செயல்முறைகளில் தெளிவாக கட்டணமில்லாமல் பயன் பெறுக! இது நம்முடைய லினக்ஸ் சேவையகங்கள், சிஸ்கோ, ஜூனிபர், ஹெச்பி , மேம்பட்ட வழிசெலுத்திகள், நிலைமாற்றிகள் , ஃபயர்வால்கள் ஆகியவற்றிற்கான இரண்டு முனைகளுக்கு இடையேயான புதிய பிணைய… Read More »

முற்போக்கான இணைய பயன்பாடுகள் (PWA )

தற்போது பொதுமக்களின் பயன்பாட்டில் இணைய பயன்பாடுகள், சொந்த பயன்பாடுகள் ஆகிய இரண்டுவகைகளாக உள்ளன, அவற்றுடன்மூன்றாவதாக, முற்போக்கான இணைய பயன்பாடுகளும் (progressive Web applications (PWAs)) உள்ளனஎன்ற செய்தியையும் மனதில் கொள்க, பின்கூறியவை முந்தைய இரண்டின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்து கின்றன. பெரும்பாலான மக்கள் அன்றாட தேவைகளுக்கு இணையத்தை பயன்படுத்துவதால் இந்த புதிய முற்போக்கான வலை பயன்பாடுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். இருப்பினும், இந்த சொல் இன்னும் சிலரைக் குழப்பிகொண்டேயிருக்கின்றது. வேறொரு களத்திலிருந்து சமீபத்தில் இணைய மேம்பாட்டிற்கு வருபவர்கள் அல்லது புதிய… Read More »

GNS3 ஒரு அறிமுகம்

மெய்நிகரானதும் உண்மையானதுமான வலைபின்னல்களை கட்டமைக்கவும், பரிசோதிக்கவும் சரிசெய்யவும் உலகளவில் ஆயிரக்கணக்கான பிணைய பொறியாளர்களால் இந்த GNS3 ஆனது பயன்படுத்தப் பட்டு வருகின்றது. நம்முடைய மடிக்கணினியில் ஒரு சில சாதனங்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய இடவியலை இயக்க இந்த GNS3 ஆனது நம்மை அனுமதிக்கிறது, அதாவது பல சேவையகங்களில் விருந்தோம்புதல் செய்யப்பட்ட அல்லது மேககணினியில் விருந்தோம்புதல் செய்யப்பட்ட பல சாதனங்களைக் கொண்டவர்களுக்கு இந்த GNS3 ஆனது மிகபயனுள்ளதாக அமைகின்றது இந்த GNS3 என்பது ஒரு கட்டற்ற பயன்பாடாகும்,… Read More »

அனைவருக்குமான ஜாவா பதிப்பாளர் (பதிப்பு 2.9)

EJE எனும் சுருக்கமானபெயரால் அழைக்கபெறும் அனைவருக்குமான ஜாவா பதிப்பாளாரானது(Everyone’s Java Editor) ஒரு எளிய ஜாவா எனும் கணினிமொழியின் பதிப்பாளராகும், இது புதியவர்கள் எவரும் மிகவும் சிக்கலான பல்வேறு மேம்பாட்டுக் கருவிகள் எதையும் கற்றுக்கொள்ளாமலேயே எளிதாக , ஜாவாஎனும் கணினிமொழியைக் கற்றுக்கொள்ள உதவிடும் மிகவும் எளிமையான மிகச்சரியானகருவியாகும். இந்த EJE என்பது பல தளங்கள் (ஜாவாவில் எழுதப் பட்டுள்ளது), குறைந்த எடை, பயனாளர் நட்பு என்பன போன்ற பல்வேறு பயனுள்ள அடிப்படை வசதி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. நம்முடைய… Read More »

ரெஸ்குவில்லா(Rescuezilla)

ரெஸ்குவில்லா என்பது ஒரு குறுவட்டில் நேரடியாக இயங்கிடும் திறன்மிக்க வரைகலை இடைமுகத்துடன் கூடிய ஒரு கட்டணமற்ற திறமூலவெற்று உலோக மீட்டெடுப்பு( Bare-metal restore) தீர்வாகும் ,இது மேக், விண்டோஸ், லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது. இது முழு Clonezilla இல்பொருந்தக்கூடிய தன்மையை நோக்கமாகக் கொண்ட ஒருசில மேம்பாடுகளுடன் மீண்டும் செயல்படுத்தக் கூடிய மீட்புக்கான ஒரு முட்கரண்டி ஆகும். இது கணினி மீட்புக்கு மிகவும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வரைகலைச் சூழலாகும், இதுமுழு கணினி காப்புப்பிரதி, வெற்று… Read More »