Author Archives: கி. முத்துராமலிங்கம்

சாப்ட்வேர் டெஸ்டிங் -15 – வெள்ளைப் பெட்டி உத்திகள் -2

போன பதிவில் வெள்ளைப் பெட்டி என்றால் என்ன என்பது பற்றியும் அதன் உத்திகள் என்னென்ன என்பதையும் பார்த்தோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது அந்த உத்திகளைப் பற்றித் தெரிந்து கொள்வது தான்! போன பதிவில் என்னென்ன உத்திகளைப் பற்றிப் பேசினோம் என்று நினைவில் இருக்கிறதா? ஆம்! 1) வரிவரிச் சோதனை முறை (Statement Coverage) 2) கிளைவரிச் சோதனை முறை (Branch Coverage) 3) வழிச் சோதனை முறை (Path Coverage) 4) மாற்றச் சோதனை முறையும் (Mutation… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 15 – வெள்ளைப் பெட்டி உத்திகள்

வெள்ளைப் பெட்டி என்று சாப்ட்வேர் டெஸ்டிங்கில் எதைச் சொல்கிறார்கள்? கருப்புப் பெட்டி என்றால் என்று பார்த்தோம் அல்லவா? அதற்கு நேர் எதிரானது தான் வெள்ளைப் பெட்டி! வெளிப்படையான (transparent) பெட்டியைத் தான் வெள்ளைப் பெட்டி என்று சொல்கிறார்கள். வெளிப்படை என்றால் என்ன? கணினியில் இரண்டு எண்களைக் கூட்டுவதற்கு நிரல்(program) எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நிரலின் முடிவில் இரண்டு எண்களைக் கொடுக்கிறீர்கள். வரும் வெளியீடு(output) சரியா என்று பார்க்கிறீர்கள். இது தான் கருப்புப் பெட்டி முறை! அதாவது… Read More »

ஒரு Fresher – IT துறை வல்லுநர் ஆவது எப்படி? பைசா செலவில்லாமல் எளிய வழிகள்

Fresher – IT துறை வல்லுநர் ஆவது எப்படி? பைசா செலவில்லாமல் எளிய வழிகள் ஐடி துறையில் நுழைந்து வல்லுநர் ஆவதற்கு வயதோ படிப்போ ஒரு தடையில்லை – ஆர்வமும் நேரமும் இருந்தால் மட்டும் போதும் – பைசா செலவில்லாமல் பெரிய ஆள் ஆகலாம் – அதற்கான எளிய வழிகளைப் பற்றி விளக்குகிறார் முத்துராமலிங்கம் (பயிலகம்)   பார்க்கவும் பகிரவும் – இணைப்பு youtu.be/BJiPDazIcdw

ஜாவாஸ்கிரிப்ட் – சென்னையில் 2 நாள் பயிற்சி வகுப்புகள்

ஜாவாஸ்கிரிப்ட் – சென்னையில் 2 நாள் பயிற்சி வகுப்புகள் வணக்கம். வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் ஜாவாஸ்கிரிப்ட் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பயிற்றுநர்: இராம் காலம்: அக்டோபர் 19,20 – 2019 காலை 9.30 முதல் மாலை 4.30 வரை இடம்: பயிலகம் 7, விஜய நகர் முதல் தெரு, வேளச்சேரி சென்னை 42 (ஆர்த்தி ஸ்கேன் அருகில் உள்ள மாநகராட்சிப் பூங்கா எதிரில்) பேசி: 8344777333 என்னென்ன பயிற்றுவிக்கப்படுகின்றன: இந்த இணைப்பில் பார்க்கலாம்.… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – சென்னையில் 2 நாள் பயிற்சிப் பட்டறை

சாப்ட்வேர் டெஸ்டிங் என்றால் என்ன என்று தெரிய வேண்டுமா? சாப்ட்வேர் டெஸ்டிங் துறைக்குள் நுழைய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இதற்கான பயிற்சிக்கு நிறைய செலவும் ஆகும்! நேரமும் இல்லையே! என்று யோசிக்கிறீர்களா? கவலையை விடுங்கள்! இதற்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை சென்னையில் வரும் செப்டம்பர் 28, 29இல் நடைபெறவிருக்கிறது. ஐடி துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி கொடுக்கவிருக்கிறார்கள். பயிற்சியோடு சேர்ந்து டெஸ்டிங் துறையில் கட்டற்ற மென்பொருட்கள் திட்டப்பணிகளில் நம்மை எப்படி ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்ற செய்முறையும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 14 – கருப்புப் பெட்டியும் வெள்ளைப் பெட்டியும்

வானூர்தியில் தான் கருப்புப் பெட்டி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதென்ன சாப்ட்வேர் டெஸ்டிங்கிலும் கருப்புப் பெட்டியா? என்று வியக்கிறீர்களா? வியக்க வேண்டாம். எளிமையானது தான்! பார்த்து விடலாமா? கருப்புப் பெட்டிச் சோதனை: வீட்டில் இருக்கும் மோடத்திற்கு (Modem) இணைய இணைப்புக் கொடுக்கிறீர்கள். ஆனால் அந்த மோடம் எப்படி உள்ளீட்டை வாங்குகிறது? எப்படி உங்களுக்கு இணைய வசதி கிடைக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? எப்படிக் கிடைத்தால் என்ன – இணையம் கிடைத்தால் போதும் அல்லவா? வண்டிக்குப் பெட்ரோல் நிரப்புகிறோம். பெட்ரோல் இஞ்சினுக்குப்… Read More »