Category Archives: கணியம்

ஒன்று மட்டும் தான்… | அறிவியல் புனைவு கதை | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 50 |

அன்றைய தினம் இரவு 9:30 மணிக்கு, குடும்பங்கள் அனைத்தும் டிவி திரைக்கு முன்பு காத்துக் கிடந்தது. கார், ரயில் என பயணத்தில் இருந்தவர்கள் கூட தங்கள் மொபைல் ஃபோன்களை ஆன் செய்து வைத்துக் கொண்டு, அந்த நிகழ்ச்சியை காண ஆவலாக காத்திருந்தனர். ஒரு நபர், அந்த ஒரே நபர்!!!! அப்பப்பா அவருக்குள் அவ்வளவு திறமையா? ஒரு நபர் தன்னுடைய புத்தகத்தின் மூலம், உணர்வற்று அலைந்து கொண்டிருந்த உலகிற்கு வெளிச்சத்தை பாய்ச்சி விட முடியுமா? என்னப்பா இப்படி கேட்டு… Read More »

ஆல் ரவுண்டர் NAND லாஜிக் கதவு | லாஜிக் கதவுகள் குறுந்தொடர் முற்று | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 49

லாஜிக் கதவுகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கட்டுரைகளில் விவாதித்து வந்திருக்கிறோம். அவற்றின் வகைகள், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பிறகு சுவாரசியமான தகவல்களை உங்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் லாஜிக் கதவுகள் குறித்த கடைசி கட்டுரை இதுதான். இந்தக் கட்டுரையில், ஆல் ரவுண்டர் NAND கதவு குறித்துதான் பார்க்கவிருக்கிறோம். ஏற்கனவே, கடந்த கட்டுரையில் ஆல்ரவுண்டர் NOR கதவு குறித்து பார்த்திருந்தோம் NOT Using NAND கடந்த கட்டுரையில் பார்த்ததை போலவே, NAND கதவிற்கும் அதனுடைய இரண்டு உள்ளீடுகளையும்… Read More »

C மொழியில் அச்சிடுவது எப்படி ? | எளிய தமிழில் சி பகுதி 7

எளிய தமிழில் சி பகுதியில் ஆரம்பக் கட்டுரைகளிலேயே பொங்கல் வாழ்த்து சொல்வது எப்படி? என ஒரு சுவாரசிய கட்டுரையை எழுதி இருந்தேன். இருந்த போதிலும் கூட, அந்த கட்டுரையில் C மொழியில் அச்சிடுவதற்கான சில விதிமுறைகளை முறைப்படி எழுதவில்லை. எந்த ஒரு மொழியிலேயுமே அச்சிடுவது(print statement)தான் மிக முக்கியமான ஒரு பகுதி. நீங்கள் ஒரு மதிப்பை அச்சிடும்போது தான், நீங்கள் எழுதி இருக்கும் நிரலின் தேவையான பகுதிகளை பயனர்களுக்கு வழங்க முடியும். உதாரணமாக, நீங்கள் ஒரு கணிப்பானுக்கான… Read More »

வருங்காலத்தை ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் – 1| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 45

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்பாக அடிப்படையில் இருந்தே பார்த்து வருகிறோம். ஆனால், தற்கால அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் துறையானது மிக வேகமாக வருங்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்களால், பதிலீடு(replace) செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் காலவெளிக்கு ஏற்ப, எலக்ட்ரானிக்ஸ் துறையும் தன்னை தகவமைத்துக் கொள்ள தவறுவதில்லை. அப்படி வருங்காலத்தைக் கலக்கப்போகும், வருங்காலத்தில் நம்மை ஆளப்போகும் சில எலக்ட்ரானிக்ஸ் துறைகள் தொடர்பாகத்தான் இந்த சுவாரசிய கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம். நீங்கள் இதுவரை படித்து எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளோடு ஒப்பிடும்போது இந்த… Read More »

நாம் டைப் செய்வது கணினிக்கு எப்படி தெரிகிறது? | ASCII CODE|லாஜிக் எலக்ட்ரானிக்ஸ் சங்கமம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 43

எனக்குள் பல ஆண்டுகளாக ஒரு சந்தேகம் இருந்தது. தட்டச்சு பொறிகளில் நாம் உள்ளீடை வழங்கும்போது, அந்த உள்ளீடை எப்படி கணினி புரிந்து கொள்ளும் என்று எனக்கு நீண்ட காலமாக நீடித்த ஒரு சந்தேகம் இருந்தது. சிறுவயதில் எல்லாம் தட்டச்சு பொறிக்குள் M என்றால் அதற்குள்ளும் M என்கிற வடிவத்தில் எழுத்து இருக்கும், அந்த M வடிவத்திலேயே மின்சாரம் சென்று அதற்குரிய வெளியீடு கிடைக்கும் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டு இருந்தேன். ஆனால், அதற்கான பதிலை கடந்த கடைசி… Read More »

சில்லுவின் கதை 16. எதிர்காலம் ஒளிமயமாக இருக்க இப்போதே தீயை மூட்ட வேண்டும்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) 17:16 வரை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். நாட்டிற்குள் புனைதல் ஆலைகள் இருப்பது தேசியப் பாதுகாப்புக்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்தோம் 17:17 பின்னர் 2021-ல் கோவிட் நம்மைத் தாக்கியது. பல நாடுகளுக்குத் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வழங்கியதால், இந்தியா உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், சில்லுகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் விளைவாக… Read More »

சில்லுவின் கதை 15. மதத் தடைகளால் தொழில் புரட்சியையே கோட்டை விட்டோம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) வெளிப்புறத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றியே புகார் செய்யாமல் தன்னிலையை ஆய்வு செய்தல் 0:00 பிரபல வானியற்பியல் (astrophysicist) அறிஞர் பேராசிரியர் ஜயந்த் வி. நர்லிகர் (Prof. Jayant V. Narlikar), புரட்சிகரமான பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். நான் அவரது மின்னஞ்சல் குழுவில் இணைந்திருக்கிறேன். நான் “சில்லுவின் கதை” -யில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது,… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 4

சில அடிப்படைகள் hello world என்று அச்சிடுவது மட்டும் போதாது. அதற்கும் மேலே ஏதாவது செய்தால் நன்றாக இருக்குமே. பயனரிடம் ஏதாவது கேள்வி கேட்கலாம். பதில் வாங்கி, அதில் ஏதாவது மசாலா சேர்த்து, புது கலவையாக்கித் தரலாமா? அதற்கு, பைத்தானில் உள்ள Constant, Variable ஆகியவை உதவும். அவை பற்றி இங்கே காணலாம். அதற்குள்ளே புது வார்த்தைகளைக் கண்டு பயந்து விட வேண்டாம். நான் முதலில் இவற்றைக் கண்டு மிகவும் கலங்கிப் போன நாட்கள் பல. செந்தமிழும்… Read More »

எளிய தமிழில் பைத்தான் – 3

முதல் நிரல் கணினி நிரல் உலகில், காலம் காலமாக செய்யப்பட்டு வரும் ஒரு சடங்கு ஒன்று உள்ளது. எல்லா கணினி நிரல் நூல்களிலும் இதைக் காணலாம். என்ன? அறிவியலிலும் சடங்கா? ஏன் இப்படி? ஆம். ஆனால் இங்கு நாம் எந்தக் கடவுளையும் வணங்கத் தேவையில்லை. பூசைகள் ஏதுமில்லை. முதல் நிரலாக, ‘Hello World’ என்பதை திரையில் அச்சடிப்பதே முதல் நிரல். இதுதான் இத்துறையின் ஒரு சின்ன சடங்கு. சாதாரணமாகவே நாம், சடங்கு என்று வந்து விட்டால், எந்தக்… Read More »

சில்லுவின் கதை 14. மூரின் விதிக்கு மேலும் 25 ஆண்டுகளுக்கு உயிர் கொடுத்தது

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) டிரான்சிஸ்டர்களின் அளவை மிகவும் குறைக்கும்போது கசிவு மின்னோட்டம் பல மடங்கு அதிகரிக்கிறது 0:00 முந்தைய நிகழ்வில் நாம் மீப் புறஊதா (EUV – Extreme ultraviolet) ஒளி பற்றிப் பார்த்தோம். நாம் என்ன செய்ய முயற்சிக்கிறோம்? டிரான்சிஸ்டரின் நீளத்தைக் குறைக்க வேண்டும். ஏன் நாம் அதைச் செய்ய வேண்டும்? ஒரு சதுர… Read More »