கணியம்

எளிய தமிழில் Car Electronics 19. ஓடும்போது பழுது கண்டறிதல்

வண்டியில் ஏதேனும் செயல்பிழை ஏற்பட்டால் பணிமனைக்குக் கொண்டு சென்று பழுது பார்க்கலாம்தானே? ஓடும்போதே பழுது கண்டறிதல் அவசியமா, என்ன – என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி. இதற்கு இரண்டு பதில்கள் உள்ளன. முதலாவது, உங்கள் வண்டியிலிருந்து வெளிவரும் உமிழ்வு (emission) தரநிலைக்குள்தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதில் அரசாங்கங்கள் குறியாக இருக்கின்றன. ஆகவே 1988 இல்…
Read more

எளிய தமிழில் Car Electronics 18. CAN உட்பிணையம்

இது நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) CAN உட்பிணையம் (bus) என்பது ஒரு நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) தகவல் பரப்பு அமைப்பாகும். அதாவது இதில் இணைந்திருக்கும் எந்தவொரு கட்டுப்பாட்டகமும் (ECU) தகவலை அனுப்பவும் பெறவும் முடியும். பிணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு ECU வையும் பொதுவாகப் பிணையத்திலுள்ள ஒரு கணு (node) என்று கருதலாம். இது…
Read more

விக்கிப்பீடியா பயிலரங்கம் – சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி

நாள் – 01,02 மார்ச்சு 2024 கல்லூரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி விக்கிப்பீடியா பயிலரங்கம் – சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி விவரங்கள் படங்களில் காண்க.

மின்னூல் உருவாக்கம் – தன்னார்வலர்கள் தேவை

FreeTamilEbooks.com தளத்தில் மின்னூல்களை வெளியிட, தன்னார்வலர்கள் தேவை. கணினி பயிற்சி, இணைய வசதி இருக்க வேண்டும்.அட்டைப்படங்கள் வரைய ஆர்வம் இருத்தல் இனிது. மின்னூலாக்கம், அட்டைப்படம் உருவாக்கத்துக்குத் தேவையான பயிற்சிகள் வழங்குவோம். பின் வரும் காணொளிகளை பார்க்கவும். மேற்கண்ட காணொளிகள் வழியே மின்னூல், அட்டைப்படங்கள் உருவாக்க வழிகளை விளக்கியுள்ளோம். அவற்றைக் கண்டு ஏதேனும் ஐயம் எனில் எங்களுக்கு…
Read more

எளிய தமிழில் Car Electronics 17. ஊர்திப் பிணைய நெறிமுறைகள்

ஒரு உணரி பல ECU க்களுக்குத் தகவல் அனுப்பவேண்டுமென்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு ECU க்கும் நேரடியாகத் தனித்தனி கம்பி போட்டால் காரில் கம்பிகளின் எண்ணிக்கை அதிகமாகிப் பராமரிப்பது மிகவும் கடினமாகிவிடும். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கப் பிணையத்தைப் பயன்படுத்துகிறோம்.  பிணையமும் (network) உட்பிணையமும் (bus) பிணையம் (network) என்பது மிகவும் பரவலாக இருப்பது. எடுத்துக்காட்டாக, ஒரு அலுவலகத்தில்…
Read more

கடலூர் குனு லினக்ஸ்‌ பயனர் குழுவின் 3 ஆண்டுகள் நிறைவு விழா

கடலூர் குனு லினக்ஸ்‌ பயனர் குழுவின் 3 ஆண்டுகள் நிறைவு பெற்று 4ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. இதனை வரும் ஞாயிறு காலை முதல் மதியம் வரை கொண்டாட‌ உள்ளோம். முக்கியமாக இந்நிகழ்வில் கடலூர் பகுதியை OpenStreetMap-ல் கூட்டாக தமிழாக்கம் செய்ய உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

பல்லூடக அகராதி உருவாக்கப் பயிலரங்கம்

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூரில் பல்லூடக அகராதி உருவாக்கப் பயிலரங்கம் நடைபெறுகிறது. நாள்: 26, 27-02-2024 அகராதியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் இடம் : வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க அறை

[KanchiLUG] வாராந்திர கலந்துரையாடல் – டிசம்பர் 04, 2022

அனைவருக்கும் வணக்கம்,இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 25, 2024 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத்…
Read more

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை, தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து நடத்தும் கல்வியாளர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியாப் பயிலரங்கம்

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை, தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து நடத்தும் கல்வியாளர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியாப் பயிலரங்கம்  மார்ச் 1, 2 – 2024 நாடகளில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடக்கிறது. அனைத்துத் துறை சார்ந்த பேராசிரியர்களும் பங்கேற்கலாம். பதிவுக் கட்டணம் ஏதுமில்லை. பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் தமிழ் விக்கிப்பீடியாவும்…
Read more