கணியம்

கிட்லேப் யூடியூப் நேரலை வகுப்புகள் – Gitlab Session Online in Tamil

கிட்லேப் நேரலை வகுப்புகள் யூடியூபில் இன்று முதல் நடத்தப்பட இருக்கின்றன. பயிலகம் யூடிபூப் சேனலில் பயிற்றுநர் விஜயராகவன் இவ்வகுப்புகளை நடத்துகிறார். யூடியூப் இணைப்பு: www.youtube.com/@PayilagamChennai

எளிய தமிழில் Car Electronics 10. இயங்கும் பாதுகாப்பு அமைப்புகள்

ஊர்தியின் வடிவமைப்பில் புவியீர்ப்பு மையம் (center of gravity) தாழ்வாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது எளிதில் குடைசாயாமல் இருக்கும். எதிர்பாராதவிதமாக ஊர்தி விபத்துக்குள்ளாகி மோதினாலும்கூட உள்ளே இருக்கும் பயணிகளைப் பாதுகாக்க அடிச்சட்டமும் (Chassis) உடற்பகுதியும் வலுவாக இருக்கவேண்டும். எரிபொருள் கலன் எளிதில் தீப்பற்றிக் கொள்ளாமல்  வடிவமைக்கப்படவேண்டும். மானிப்பலகையில் (dashboard) இருக்கும் நெகிழி, இருக்கையிலுள்ள துணிகள், நுரை…
Read more

எளிய தமிழில் Car Electronics 9. சீர்வேகக் கட்டுப்பாடு

சீர்வேகக் கட்டுப்பாடு (Cruise control) என்பது நீங்கள் நெடுஞ்சாலையில் நிலையான வேகத்தில் ஓட்டும்போது உதவும் ஒரு  அம்சமாகும். இது உங்கள் காரை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நிலையாக அமைக்க அனுமதிக்கிறது. இவ்வாறு அமைத்தபின் உங்கள் கால்களை முடுக்கி மிதியிலிருந்து (accelerator pedal) எடுத்துவிடலாம். எனவே, இது நீண்ட பயணத்தில் கால் சோர்வையும் வலியையும் குறைக்கும். நிலையான…
Read more

எளிய தமிழில் Car Electronics 8. திறன் உதவித் திருப்பல்

மெதுவாக நகரும் போது ஊர்திகளைத் திருப்ப அதிக முயற்சி போட வேண்டும் என்பது கண்கூடாகத் தெரிந்ததே. திறன் திருப்பல் (Power steering) என்பது ஒரு மோட்டார் ஊர்தியின் திருப்பு வளையத்தைத் (steering wheel) திருப்புவதற்கு ஓட்டுநரின் முயற்சியைக் குறைப்பதற்கான ஒரு அமைப்பாகும். இது திருப்பும் முயற்சியைக் குறைப்பதற்கு இயந்திர சக்தியின் உதவியை அளிக்கிறது. ஆகவே இதைத்…
Read more

எளிய தமிழில் Car Electronics 7. நிறுத்தக் கட்டுப்பாடு

சறுக்காமல் நிறுத்தும் அமைப்பு (Antilock Braking System – ABS)  பழைய கார்களில், அவசர நிலைமையில், பிரேக்கை மிகவும் அழுத்தினால், சக்கரங்கள் சுழலாமல் முற்றிலும் நின்றுவிடும். இதைப் பூட்டுதல் (locking) என்று சொல்கிறோம். சக்கரங்கள் சுழலவில்லை என்றால் வண்டி சறுக்கும். நீங்கள் திருப்பும் பக்கம் போகாது. இதனால் ஊர்தியைத் தடைகளிலிருந்து விலக்கிப் பாதுகாப்பை நோக்கிச் செலுத்த…
Read more

எளிய தமிழில் Car Electronics 6. சுழற்செலுத்தி கட்டுப்பாட்டகம்

சுழற்செலுத்தி (Transmission) அல்லது பல்லிணைப் பெட்டி (Gear box) என்பது ஒரு இயந்திர சாதனமாகும். இது ஊர்தியின் வேகத்தை மாற்றுவதற்கும் பின்னோக்கிச் செல்லவும் பல்லிணைகளைப் பயன்படுத்துகிறது. தற்போது தயாரிக்கப்படும் பெரும்பாலான பயணிகள் கார்களின் சுழற்செலுத்திகள் 5 முன்னோக்கிய பல்லிணை விகிதங்களும் ஒரு பின்னோக்கிய பல்லிணை விகிதமும் கொண்டவை.  தானியங்கி சுழற்செலுத்தி (Automatic Transmission)  முன்னோக்கிய வேகத்திற்குத்…
Read more

எளிய தமிழில் Car Electronics 4. ஊர்தி இயக்கிகள் தொழில்நுட்பம்

ஊர்தி இயக்கிகள் (actuators) எரிபொருளைக் கட்டுப்படுத்துவது முதல் காற்றுக் குளிர்விப்பு அமைப்பில் காற்றோட்டத்தை இயக்குவது மற்றும் திறன் இருக்கைகளை இயக்குவது வரை பல்வேறு செயல்திறன்களையும் பயணிகளின் வசதிக்கான வேலைகளையும் செய்கின்றன. சில நேரங்களில் நீங்கள் இயக்கிகளைக் கைமுறையாக இயக்கலாம். ஆனால் பெரும்பாலும் கணினிகள் தேவைக்கேற்ப முடிவெடுத்து இவற்றை இயக்குகின்றன. எடுத்துக்காட்டாக, பழைய எரி கலப்பி (carburetor)…
Read more

AWS Cloud அறிமுகம் – இணைய வழி தொடர் வகுப்பு

கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் DevOps அறிமுகம் தொடர் வகுப்புகள், தமிழில் நடத்தி வருகிறோம். இதுவரை Linux, git, docker, jenkins, ansible, prometheus/grafana ஆகியவை பற்றி நடத்தியுள்ளோம். எல்லா வகுப்புகளையும் பதிவு செய்து யுடியூபில் வெளியிடுகிறோம். காண்க – www.youtube.com/@kaniyamfoundation/ அடுத்த நிகழ்வாக AWS Cloud, Terraform பற்றி அறிமுக வகுப்புகள் நடத்துகிறோம்.இவ்வகுப்புகளில்…
Read more

எளிய தமிழில் Car Electronics 3. ஊர்தி உணரிகள் தொழில்நுட்பம்

நாம் ஊர்தியை ஓட்டிச் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு மாடு குறுக்கே ஓடி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். நம் கண் அதைப் பார்த்து, மூளைக்குச் செய்தியை அனுப்பி, மூளை அதை ஆபத்து என்று அறிந்து நம் கால்களுக்கு “பிரேக்கை அழுத்து” என்று கட்டளை அனுப்பி நிறுத்துவதற்குள் சிறிது நேரம் தாமதமாகிவிடும். நம் கண்கள்…
Read more

எளிய தமிழில் Car Electronics 2. மின்னணுக் கட்டுப்பாட்டகம்

ஊர்திகளில் மின்னணுக் கட்டுப்பாட்டகம் (Electronic Control Unit – ECU) முதன் முதலில் ஏன், எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று விவரமாகப் பார்ப்போம். இதை மின்னணுக் கட்டுப்பாட்டுக் கூறு (Electronic Control Module – ECM) என்றும் சொல்கிறார்கள். இதன் மூலம் நாம் இவற்றின் தேவையையும், திறனையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். பொறிக்குள் பெட்ரோல் காற்றுக்…
Read more