Category Archives: இரா. அசோகன்

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 14: பயனர் கதையை தெளிவாகத் தயார் செய்தால் பாதி வேலையை முடித்தது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 14   நாம் முன்னர் பார்த்தபடி, மென்பொருள் தேவைகள் பட்டியல் ஒரு தகவல் தொடர்பு பிரச்சினை. மென்பொருள் உருவாக்கி வாங்க விரும்புபவர்கள் அதை உருவாக்கத் தெரிந்தவர்களுக்கு தெளிவாகச் சொல்வது அவசியம். இல்லாவிட்டால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது என்று சொல்கிறார்களே அம்மாதிரி ஆகிவிடும்.   70 – 80 களில் அமெரிக்க வங்கிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அவர்கள் மற்ற வங்கிகளுடன் போட்டியில் வெல்ல என்ன செய்யலாம் என்று சிந்திக்கத்… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 13: தன்னமைவு மற்றும் பன்முக செயல்பாட்டுக் குழுக்களை ஊக்குவித்துத் தகவல் யுகத்துக்கு வந்து சேருங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 13 அப்பொழுது நான் ஒரு வணிக ஊடக நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். நான்கு அணிகள் இருந்தன. ஒவ்வொரு அணியிலும் வடிவமைப்பாளர்கள், நிரலாளர்கள் மற்றும் சோதனையாளர்கள் இருந்தனர். இரண்டு வாரக் குறுவோட்டம், மொத்தம் பத்து வேலை நாட்கள். முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு வடிவமைப்பாளர்கள் மிகவும் ஓய்வில்லாமல் வேலை செய்வர். நிரலாளர்களும் சோதனையாளர்களும் வடிவமைப்புகள் தயாராகி பங்குதாரர்கள் ஒப்புதல் தரும் வரை ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் உற்பத்தித்திறன் குறைவு.… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 12: நேருக்கு நேர் உரையாடல்தான் சிறந்தது என்கிறார்கள், ஆனால் நாம் இருப்பதோ கடல்கடந்து!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 12 “ஒரு மென்பொருள் உருவாக்கும் அணி கருத்துப் பரிமாற மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள முறை நேருக்கு நேர் உரையாடல்தான்.” தகவெளிமை கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிடப்பட்ட மென்பொருளுக்கான கோட்பாடுகளில் இது ஒன்று. ஆனால் எப்பொழுதும் குழு உறுப்பினர்கள் யாவரும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. என்னுடைய அணிகளில் இரண்டில் யாவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாரத்தில் பல நாட்கள் தொலைவேலை… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 10: ஒருக்கால் தேவைப்படலாம் என்று எவ்வளவு தேவையற்ற வேலைகள் செய்கிறோம்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 10 “செய்யாத வேலையை முடிந்த அளவுக்கு அதிகப்படுத்தும் கலை, இன்றியமையாதது.” மென்பொருள் உருவாக்குவதற்கான கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிட்ட 12 கோட்பாடுகளில் ஒன்று இது. இது விநோதமாக இல்லை? இவர்கள் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறார்கள் போல் அல்லவா தோன்றுகிறது! ஆனால் இதன் அர்த்தம் அதுவல்ல. பின்னால் தேவைப்படலாம் என்று வேலையை இழுத்துப் போட்டுகொண்டு செய்யாதீர்கள். அது தேவைப்படாமல் போகலாம். எடுத்துக்காட்டாக You Aren’t Gonna Need It (Yagni)… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 9: லேத் பட்டறையில் வேலையை மாற்றி மாற்றி ஏற்றி இறக்குவது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 9 நான் தகவல் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு முன் ஒரு இயந்திர பொறியாளராக என் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன். நடுத்தர அளவிலான தொழிற்சாலையில் வேலை திட்டமிடல் எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். லேத் பட்டறை இயக்குபவரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார், “காலைல கிருஷ்ணன் சார் சொல்ற வேலையை ஏத்துவோம் சார். அதைக் கஷ்டப்பட்டு அலைன் பண்ணி முடிச்சு டூல் செட் பண்ணி கடைசல ஆரம்பிக்கலாம்னு இருப்போம். அப்பதான் சக்திவேல்… Read More »