திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 9. மாணவர்களுக்கு திறந்த மூல உலகம் அறிமுகம்: நாள் 1
ஃபயர்பாக்ஸ் இணைய உலாவியின் இணை உருவாக்குநர் பிளேக் ராஸ் (Blake Ross) முதல் லினக்ஸ் கருநிரல் உருவாக்கிய லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) வரை, மாணவர்கள் திறந்த மூல சமுதாயத்தில் முக்கிய சாதனைகள் செய்து பெரிதும் நன்மதிப்பைப் பெற்றவர்கள். ஆனால் பிலடெல்பியாவில் ஒரு ஓபன்ஹாட்ச் (OpenHatch) சந்திப்பில் மேசையில் என் எதிர்ப்புறம் அமர்ந்து யுவி மேஸொரி (Yuvi Masory) சொன்னது அதற்கு எதிர்மாறாக இருந்தது. “என் ஆய்வகத்தில் வேலைக்கு ஆள் எடுக்கிறோம்,” என்று அவர் விளக்கினார். கேள்விகளுக்கு… Read More »