Category Archives: பங்களிப்பாளர்கள்

அறிந்துகொள்ள வேண்டியபைதானின் 5 முக்கிய கோட்பாடுகள்

அறிமுகம்: Python-இன் எளிய தொடரியல் (syntax) அமைப்பானது, அதைக் கற்றுக்கொள்வதை எளிதாக்குகிறது; இதுவே தரவு அறிவியல் (Data Science), இயந்திரக் கற்றல் (Machine Learning) , செய்யறிவு (AI) ஆகிய துறைகளுக்கு முதன்மையான மொழியாக மாற்றுகிறது. இருப்பினும், ஒரு தொடக்க நிலையில் இருப்பவர், திறமையான, பராமரிக்க எளிதான அமைவுகளை உருவாக்கும் ஒரு தொழில்முறை வல்லுநராக மாறுவதற்கு, Python-இன் முக்கிய செயல்பாட்டு வழிமுறைகளை முழுமையாகக் கற்றுத் தேர்ந்திருப்பது மிகவும்அவசியமாகும். ஒவ்வொரு Python நிரலாளரும் (developer) தங்கள் திறன்களின் தொகுப்பில் கட்டாயம்… Read More: அறிந்துகொள்ள வேண்டியபைதானின் 5 முக்கிய கோட்பாடுகள் »

மைக்ரோசாஃப்டின் பெரும் மாற்றம்: Azure Linux 4.0 ஓர்அறிமுகம்-

வட அமெரிக்காவில் நடைபெற்ற திறமூல உச்சி மாநாட்டில் , மைக்ரோசாஃப்ட் ஆனது தனது முதல் பொது-நோக்கு சேவையாளர் லினக்ஸ் விநியோகமான Azure Linux  4.0-என்பதை வெளியிடுவதாக அறிவித்தது. ஒரு காலத்தில் லினக்ஸை “ஒரு புற்றுநோய்” என்று முத்திரை குத்திய ஒரு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிக்கு இது ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தைக் குறிக்கிறது. இன்று, மைக்ரோசாஃப்ட் ஆனது மேசைக்கணினியின் தளத்திற்கு வெளியே ஒரு லினக்ஸ்-மைய நிறுவனமாக திறம்பட செயல்படுகிறது, மேலும் அஸூர் வாடிக்கையாளர் உள்ளகங்களில் மூன்றில் இரண்டு… Read More: மைக்ரோசாஃப்டின் பெரும் மாற்றம்: Azure Linux 4.0 ஓர்அறிமுகம்- »

செய்யறிவு (AI), இயந்திரக் கற்றலுக்கான சிறந்த லினக்ஸ் விநியோகங்கள்

அறிமுகம்   லினக்ஸ் (Linux) அதன் திறமூல இயல்பு, நெகிழ்வுத்தன்மை , சக்திவாய்ந்த கட்டளை வரி கருவிகள் ஆகியவற்றின் காரணமாகச் செய்யறிவு (AI) , இயந்திரக் கற்றல் (ML) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களுக்கு முதன்மையான இயக்க முறைமையாக உள்ளது. 2026-ஆம் ஆண்டில், இத்துறைக்கான லினக்ஸ் விநியோகங்கள் (Distributions) மேலும் சிறப்புப் பதிப்புகளாக உருவெடுத்துள்ளன. ஏன் செய்யறிவிற்கும் (AI) , இயந்திரக் கற்றலுக்கும் லினக்ஸ் தேவை? திறமூல மென்பொருள்: உரிமக் கட்டணங்கள் இல்லை; வலுவான சமூககுழுவின் ஆதரவு உண்டு.      செயல்திறன்… Read More: செய்யறிவு (AI), இயந்திரக் கற்றலுக்கான சிறந்த லினக்ஸ் விநியோகங்கள் »

ஒரு பைதான் பயன்பாட்டை புரலராக செய்வதற்கானகட்டணமற்ற வழிகள்

அறிமுகம்: ஒரு மாணவராகவோ அல்லது பயன்பாடுகளை உருவாக்குவதன் செயல்பாட்டுப் பக்கத்தைக் கற்கத் தொடங்குபவராகவோ இருக்கலாம். பயன்பாட்டை வளாககணினியில் உருவாக்கிபரிசோதிப்பதன் மூலம் ஏற்கனவே முதல் படிமுறையை செய்துவிட்டோம். இப்போது, அதை எங்கிருந்தும் அணுகுவதற்காக மேககணினியில் வெளியிட விரும்புவதாககொள்க. பிரச்சனை என்னவென்றால், புதிதாகத் தொடங்கும் போது மேககணினியின் புரவலராக செய்வது சிக்கலானதாகவும் விலை உயர்ந்ததாகவும் உணரப்படலாம். இந்தக் கட்டுரையில், பைதானின் இணையஅல்லது பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API) பயன்பாட்டை முன்பணம் செலுத்தாமல் புரவலராக செய்ய அனுமதிக்கின்ற சில எளிமையான கட்டணமற்ற… Read More: ஒரு பைதான் பயன்பாட்டை புரலராக செய்வதற்கானகட்டணமற்ற வழிகள் »

குவாண்டம் கணினியின் பாய்ச்சல்: 2026 ஆம்ஆண்டின்பதிப்பு-3

இந்த கட்டுரையானது குவாண்டம் கணினித்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய திருப்புமுனைகளுக்கான ஒரு தொடக்கநிலை வழிகாட்டியாகும் பல பத்தாண்டுகளாக, குவாண்டம் கணினிகள், விண்வெளியை விடக் குளிரான வெப்பநிலையில் இயங்க வேண்டிய, எளிதில் பாதிப்படையக்கூடிய ஆய்வகச் பரிசோதனைகளாகவே இருந்துவந்தன. இன்று, 2026-ல், நாம் “தர்க்கரீதியான கியூபிட் சகாப்தத்தின்” பிறப்பைக் காண்கிறோம். நாம் இனி வெறுமனே அதிக கியூபிட்களைச் சேர்க்கவேண்டியதில்லை; வரலாற்றில் முதன்முறையாக அவற்றை நம்பகத்தன்மையுடன் செயல்பட வைக்கின்றோம். “இரைச்சல்(Noisy)” சகாப்தத்தின் முடிவு சமீப காலம் வரை, குவாண்டம் கணினிகள் NISQ என… Read More: குவாண்டம் கணினியின் பாய்ச்சல்: 2026 ஆம்ஆண்டின்பதிப்பு-3 »

ஆண்ட்ராய்டு கைபேசியை மேசைக்கணினி பயன்முறையுடனான(desktop mode) மீச்சிறு கணினியாக மாற்றுவது எவ்வாறு

மேசைக்கணினி ,போன்ற அமைவிற்குள் மூளையாக(brains) இருக்கும் ஆண்ட்ராய்டு கைபேசி என்ற கருத்தமைவு கடந்த பத்தாண்டிற்கு முன்பு பிரபலமடையவில்லை, ஆனால் இந்த வழிமுறை இன்னும் நிறைய நம்பிக்கைக்குரியதாகின்றது. உண்மையில், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் கைபேசியில்”மேசைக்கணினியின் பயன்முறை(desktop mode)” திறக்கப்படுவதற்கு காத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்புகூட உள்ளது. அதை எவ்வாறு செயல்படுத்தி பயன்பெறுவது என இப்போது காண்போம். முற்காலத்தில், Motorola Atrix 4G, Asus PadFone போன்ற கைபேசிகளுக்கு அவற்றில் சிறந்தமேசைக்கணினி வசதிவாய்ப்புகளைப் பயன்படுத்த விலையுயர்ந்த பாகங்கள் தேவைப்பட்டன. இப்போதெல்லாம்,… Read More: ஆண்ட்ராய்டு கைபேசியை மேசைக்கணினி பயன்முறையுடனான(desktop mode) மீச்சிறு கணினியாக மாற்றுவது எவ்வாறு »

சிறிய மொழி மாதிரிகள் (SLM)அறிமுகம்

அறிமுகம் தற்போது செய்யறிவு(AI) பயன்பாடு மாறிகொண்டே வருகிறது. புதிய வரையறைகளை உடைக்கும் பெரிய மொழி மாதிரிகளில் தலைப்புச் செய்திகள் கவனம் செலுத்தும் அதே வேளையில், சிறிய மாதிரிகள் பெரும்பாலான அன்றாட பணிகளை அதனுடையசெலவின் ஒரு பகுதியிலேயே கையாள முடியும் என்பதை உற்பத்தி குழுக்கள் கண்டுபிடித்துள்ளன. ஒரு அரட்டையறையைப் பயன்படுத்தியிருந்தால், ஒரு குறிமுறைவரிகளின் உதவியாளரை உருவாக்கியிருந்தால் அல்லது தானியங்கி ஆவண செயலாக்கத்தை உருவாக்கியிருந்தால், நூற்றுக்கணக்கான பில்லியன் அளவுருக்கள் கொண்ட மாதிரிகளுக்கான மேககணினியின் APIஇன் அழைப்புகளுக்கு  பணம் செலுத்தியிருக்கலாம். ஆனால் 2026 இல் பணிபுரியும்… Read More: சிறிய மொழி மாதிரிகள் (SLM)அறிமுகம் »

மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவு(AI)ஆனது நமக்கு ஒரு உதவியாளர்ஆகும், மாற்று அன்று

மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவின் பங்கு வேகமெடுத்து வருகிறது, ஆனால் மனிதனின் முடிவெடுக்கும் திறனுடன் இணையும்போதுதான் அதன் உண்மையான வலிமை வெளிப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அது வளர்ந்து வந்த காலகட்டத்தில், மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவின்(AI) பங்கு ஒரு பரிசோதனை முயற்சியாகவே இருந்தது. அது அடிப்படையில் சிறிய பணிகளைத் தானியக்கமாக்குவதற்கான ஒரு துணைவனாகவே இருந்தது. இன்று, மென்பொருளைக் கருத்தாக்கம் செய்யும், உருவாக்கும் , மேம்படுத்தும் விதத்தை அது உண்மையில் மாற்றியமைக்கிறது. Zoho-வின் ZIA , Anthropic-இன் Model Context… Read More: மென்பொருள் உருவாக்கத்தில் செய்யறிவு(AI)ஆனது நமக்கு ஒரு உதவியாளர்ஆகும், மாற்று அன்று »

நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்திடுகின்றமென்பொருட்களுக்கு ஆற்றல்வழங்குகின்ற திறமூலக் கருவிகள்

“திறமூலம்(open-source)” என்ற சொல் 1990-களின் பிற்பகுதியில் தான் புழக்கத்திற்கு வந்தது என்றாலும், 1950-கள் , 1960-களில் மென்பொருளின்நிரலாக்கம் பெரும் வளர்ச்சி கண்ட காலத்திலிருந்தே இந்தக் கொள்கை இருந்து வருகிறது. தொடக்ககால உருவாக்குநர்கள் தங்கள் குறிமுறைவரிகளையும் நெறிமுறை வடிவமைப்புகளையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்; 1969-ல் இணையத்தின் வருகையுடன் இந்த செயல்முறை மேலும் விரிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது திறமூல மென்பொருள் எங்கெங்கும் பரவியுள்ளது; அது வெளிப்படையாகத் தெரிந்தாலும் மறைந்திருக்கிறது, அதே சமயம் திரைக்குப் பின்னால் ஒரு புகழ்பெறாத (பிரபலமாகாத) கதாநாயகனாகவும்… Read More: நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்திடுகின்றமென்பொருட்களுக்கு ஆற்றல்வழங்குகின்ற திறமூலக் கருவிகள் »

இந்த நவீன லினக்ஸ் செயலிகளை முயற்சித்திடுக

லினக்ஸ் செயலிகள் பற்றி நம்முடைய மனதில் இன்னும் சாம்பல் நிற விண்டோக்களும், கட்டளை வரி சார்ந்த சிக்கல்களுமாகவே இருந்தால், இந்த புதிய நவீன செயலிகள் அதை மாற்றக்கூடும். இப்போது அறிமுகப்படுத்தும் இந்த மூன்று செயலிகளும், ஒரு புதிய தலைமுறை லினக்ஸ் மென்பொருள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கின்றன—ஒரு உண்மையான செயலிகளின் அங்காடியைப் போன்று உருவாக்கப்பட்ட Flatpak store,ஆனது உள்ளூர் செய்யறிவால் இயக்கப்படும் இணையஇணைப்பில்லாமலேயே படியெடுப்பதற்கான ஒருகருவியாகும், இது வேகமான, நேர்த்தியான, உண்மையாகவே நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட… Read More: இந்த நவீன லினக்ஸ் செயலிகளை முயற்சித்திடுக »