Category Archives: கணியம்

எளிய தமிழில் Car Electronics 25. மின்னணு அமைப்புகளின் பாதுகாப்பான செயல்பாடு

ISO 26262 சாலை ஊர்திகள் – செயல்பாட்டுப் பாதுகாப்பு ISO 26262 என்பது மொபெட் போன்ற சிறிய ஊர்திகளைத் தவிர்த்து மற்ற தொடர் உற்பத்தி சாலை ஊர்திகளில் நிறுவப்பட்ட மின் மற்றும் மின்னணு அமைப்புகளின் செயல்பாட்டுப் பாதுகாப்புக்கான பன்னாட்டுத் தரநிலை ஆகும். விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும், ஊர்தி பாகங்கள் அவற்றின் நோக்கம் கொண்ட செயல்பாடுகளைச் சரியாகவும் சரியான நேரத்திலும் செய்வதை உறுதி செய்யவும் இது வழிகாட்டுதல்களை வரையறுக்கிறது. ISO 26262 போன்ற தரங்களைப் பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பான… Read More »

தமிழ் விக்கிப்பீடியா – இணையவழிக் கலந்துரையாடல்

ஏப்ரல் மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல், ஏப்ரல் 28 ஞாயிறு அன்று, காலை 11 மணியளவில் நடைபெறும். சந்திப்பிற்கான இணைப்பு: meet.google.com/prq-hynf-kig வாய்ப்பிருப்பவர்கள் கலந்துகொண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் தொடர் முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.

இணைய உரைமென்பொருள் நிறுவனங்களின் உள்ளே ஒரு நாள் உலா – இணைய உரை

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்உரையாடல் எண்:: 150 தலைப்பு: மென்பொருள் நிறுவனங்களின் உள்ளே ஒரு நாள் உலா 2024-04-27 (சனி) பிற்பகல் 7.30-8.30 (இலங்கை) உரையாளர்:த. சீனிவாசன்,கணியம் அறக்கட்டளை Zoom : நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09 மட்டுறுத்துனர் சந்திர கௌரி சிவபாலன் ( கெளசி ) தமிழ் வான் அவை நிகழ்ச்சி நிரல் 7.25 – 7.30 – உள்வருகை 7.30 – 7.31 – நிகழ்வை தொடக்குதல் – க.விக்னேஸ்வரானந்தன்,… Read More »

எளிய தமிழில் Car Electronics 24. ஊர்தி மென்பொருள் தரநிலை

கார் மற்றும் இருசக்கர ஊர்தி  உற்பத்தியாளர்களை மூல தளவாட உற்பத்தியாளர் (Original Equipment Manufacturer – OEM) என்று சொல்கிறோம். இவர்களுக்கு ECU போன்ற தொகுப்புகளைத் தயாரித்து அதற்கேற்ற மென்பொருளுடன், சோதனை செய்து வழங்கும் போஷ் (Bosch), கான்டினென்டல் (Continental) போன்ற நிறுவனங்களை முதலடுக்கு வழங்குநர்கள் (Tier 1 suppliers) என்று சொல்கிறோம். பல ஊர்தி  உற்பத்தியாளர்களும் வழங்குநர்களும் சேர்ந்து உருவாக்கியதுதான் ஆட்டோசர் (AUTOSAR – AUTomotive Open System ARchitecture) என்ற ஊர்தி மென்பொருள் தரநிலை.… Read More »

சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு

1960 முதல் 1990 வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பதிப்பகங்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில், அறிவியல், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் எனப் பல்துறைகளில் பல நூல்களை வெளியிட்டன. மிர் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்கள் அவற்றுள் முதன்மையானவை. தமிழ்நாடு முழுதும் உள்ள அனைத்து ஊர்கள், கிராமங்கள் தோறும் அவர்களது நடமாடும் விற்பனை நிலைய வண்டிகள், மிகவும் குறைந்த விலையில் அனைத்து அறிவுச் செல்வங்களையும் மக்களுக்கு அள்ளி வழங்கின. சோவியத்… Read More »

எளிய தமிழில் Car Electronics 22. ஊர்தித்தர லினக்ஸ்

லினக்ஸ் (Linux) முதன்முதலில் தனிநபர் கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் வழங்கிகள் (servers) முதல் மீத்திறன் கணினிகள் (super computers) வரை, திறன்பேசிகள் (smartphones) முதல்  பொருட்களின் இணையம் (Internet of Things – IoT) வரை லினக்ஸ் இயங்குதளமே ஆதிக்கம் செலுத்துகிறது.  ஊர்தித் தர லினக்ஸ் (Automotive Grade Linux – AGL) என்பது லினக்ஸ் கருநிரலின் (kernel) அடிப்படையிலான திறந்த மூலத் திட்டமாகும். இதை உருவாக்கி மேம்படுத்தப் பல வாகன உற்பத்தியாளர்கள், முதல் அடுக்கு வழங்குநர்கள்… Read More »

எளிய தமிழில் Car Electronics 21. ஊர்தி இயங்குதளங்கள்

வன்பொருளையும் மென்பொருளையும் நிர்வகிப்பதற்கான அனைத்து முக்கிய செயல்பாடுகளையும் உள்ளடக்கியன இயங்குதளங்கள் (operating systems). மேலும் செயலிகள் வன்பொருளின் அம்சங்களை நேரடியாக அணுக இயலாது. இயங்குதளம் மூலமாகத்தான் அணுகவேண்டும். ஆன்டிராய்டு ஊர்தி இயங்குதளம் (Android Automotive OS – AAOS), ஊர்தித்தர லினக்ஸ் (Automotive Grade Linux), பிளாக்பெரி கியூனிக்ஸ் (BlackBerry QNX) ஆகியவை சந்தையில் பயன்பாட்டில் உள்ள சில ஊர்தி இயங்குதளங்கள் ஆகும். நிகழ் நேர இயங்கு தளம் (Real-time Operating System – RTOS) கணினிகள்,… Read More »

எளிய தமிழில் Car Electronics 20. பணிமனையில் பழுது கண்டறிந்து சரிசெய்தல்

ஒருமித்த பழுது கண்டறியும் சேவைகள் (Unified Diagnostic Services – UDS) என்பது தானுந்துகளின் கட்டுப்பாட்டகங்களுக்கான (automotive ECU)  ISO 14229 என்ற பன்னாட்டுத் தரநிலையில் வரையறுக்கப்பட்டுள்ள தொடர்பு நெறிமுறை ஆகும். முழுமையான பழுது கண்டறிதல் நீங்கள் ஒரு பழைய கார் வாங்கப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வாங்குவதற்கு முன்பு மேலோட்டமான ஆய்வு மூலம் அதன் செயல்பாட்டில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் கண்டறிய முடியாது. இம்மாதிரி வேலைகளுக்கு முழுமையான பழுது கண்டறிதல் தேவைப்படுகிறது. குறிப்பாக மின்னணு சாதனங்கள்… Read More »

மின்னுருவாக்கத்திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்

உங்களிடம் உள்ள அரிய நூல்களை / புகைப்படங்களை இலவசமாக மின்னுருவாக்கம் (DIGITAL) செய்யவேண்டுமா? தகவல் அளிக்கவேண்டிய அலைபேசி எண்கள்: திரு.இரா.சித்தானைஆய்வுவளமையர்அலைபேசி எண் : +919444443035 (அச்சுப்புத்தகம், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், அரியகாகிதச்சுவடிகள், ஒளி-ஒலி ஆவணங்கள்)

தமிழில் React – பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் இணையவழி இலவசப் பயிற்சி

பயிலகம், கணியம் இணைந்து React JS இலவச இணையவழிப் பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  வாரம் ஒரு வகுப்பு, ஒரு மணிநேரம் இவ்வகுப்பு நடத்தப்படும். பயிற்றுநர்: விஜயராகவன், பயிலகம் நேரம்: ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி இந்திய நேரம் பயிற்சியில் என்ன கற்றுக் கொடுக்கப்படும்? HTML, CSS, JS அடிப்படைகளில் இருந்து React JS வரை கற்றுக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  கணினி அடிப்படைகள் தெரிந்த எவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கான முன்னேற்பாடு எதுவும் உண்டா?… Read More »