எளிய தமிழில் Electric Vehicles 4. மோட்டாருக்கு அவசியம் தேவையான அம்சங்கள்
மின் ஊர்தியில் பொருத்தும் ஒரு மோட்டாருக்கு அவசியம் தேவையான அம்சங்கள் என்ன என்று பார்ப்போம். குறைந்த வேகத்திலேயே நல்ல முறுக்குவிசை கிடைத்தால் ஊர்தியை நிற்கும் நிலையிலிருந்து நகர்த்தி ஓடத்துவக்குவதற்கு வசதியாக இருக்கும். முறுக்குவிசை (Torque) என்றால் என்ன? அதிக முறுக்குவிசை என்றால் ஆரம்ப கட்டத்தில் வேகமான முடுக்கம். அதிக குதிரைத்திறன் என்றால் அதிக வேகம். இதனால்தான் சரக்கு வண்டிகள் போன்ற கனரக வாகனங்கள் அதிக முறுக்குவிசை கொண்டவை. ஆனால் பந்தய ஒட்டக் கார்கள் அதிகக் குதிரைத்திறன் கொண்டவை.… Read More »