Category Archives: கணியம்

[தினம் ஒரு கட்டளை] passwd கடவுச்சொல் மாற்றலாமா?

நாள் 21 :  passwd passwd :இந்த கட்டளை ஒரு பயனர் உள்நுழைய பயன்படுத்தும் கடவுச்சொல்லை மாற்ற பயன்படுத்தப்படுகிறது. சில தெரிவுகளுடன் இந்த கட்டளையை பயன்படுத்தி பயனர் கணக்கை பூட்டவும் திறக்கவும் மூடவும் இயலும்.sudo or as root ஆக பயன்படுத்தப்படும் போது தற்போதைய  கடவுச்சொல் தேவையில்லை பிற பயனரின் கடவுச்சொல்லை மற்றும் போது கேட்கும். sudo வைப் பயன்படுத்தியோ அல்லது root கணக்கிலிருந்தோ கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளலாம். தொடரியல் : sudo password username passwd sudo… Read More »

[தினம் ஒரு கட்டளை] cd கோப்புறையை மாற்று

நாள் 20: cd cd : இந்த கட்டளை ஒரு கோப்புறையிலிருந்து வேறொரு கோப்புறைக்கு மாற பயன்படுகிறது. இந்த கட்டளை மிக எளிமையான பயன்பாட்டினை கொண்டுள்ளாதால் பிற தெரிவுகள் பெரியதாக கவனிக்கப்படுவதில்லை. cd /path/to/directory :ஒரு குறிப்பிட்ட கோப்புறைக்கு மாற cd .. : தற்போதைய கோப்புறையின் தாய் கோப்புறைக்கு செல்ல cd : எந்தொரு அளபுருக்களும் இல்லாது இருப்பின் $HOME கோப்புறைக்கு செல்லும் cd – :கோப்புறை மற்றத்திற்கு முன்னர் இருந்த கோப்புறைக்கு செல்ல பயன்படுகிறதுcd… Read More »

[தினம் ஒரு கட்டளை] rm நீக்கு

நாள் : 19 rm : இந்த கட்டளை கோப்புகளை தெரிவுகளுடன்  நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதே கட்டளையை நாம் கோப்புறையை நீக்கவும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடரியல் : hariharan@kaniyam : ~/odoc $ rm file.extension rm file1.extension file2.extension தெரிவுகள் : rm -r : இந்த தெரிவு மூலம் நீக்கவேண்டிய கோப்புறையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் கோப்புறையினில் இருக்கும் பிற கோப்புறைகளையும் நீக்ககூடியது. இந்த தெரிவில்  r  என்பது recursive… Read More »

டிஜிட்டல் தெர்மாமீட்டர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 24

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் செயல்முறை குறித்து கடந்த சில கட்டுரைகளாக பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் பொருள், தற்காலத்தில் அனைவர் வீட்டிலும் குடிகொண்டு விட்ட டிஜிட்டல் தெர்மாமீட்டர் பற்றி தான். இன்றைக்கு கையில் கட்டி இருக்கக்கூடிய ஸ்மார்ட் வாட்ச் முதல் வீட்டில் இருக்கும் ஓவன் வரை தெர்மாமீட்டர்களோடு இணைந்து வருகின்றன. அதையும் கடந்து, நமக்கு நாமே மருத்துவர்களாக மாறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், பெரும்பாலானோர் வீட்டில்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 29. பழைய மின்கலம் மறுசுழற்சி

மறுசுழற்சிக்கு முன் மறுபயன்பாடு முதலில் சிக்கனம், அடுத்து மறுபயன்பாடு, பின்னர் மறுசுழற்சி (Reduce, reuse, recycle) என்பதுதான் நம் கொள்கை. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் முதலில் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது வீணாவதைத் தவிர்க்கவேண்டும். அடுத்து மறுபயன்பாடு. அதாவது அப்படியே வேறு வேலைக்குப் பயன்படுத்த முடியுமானால் அதைச் செய்ய வேண்டும். கடைசியாகத்தான் மறுசுழற்சி. ஆகவே மறுசுழற்சிக்கு முன்னர் மறுபயன்பாட்டுக்கு என்ன வழி என்று முதலில் பார்ப்போம். தடையிலா மின் வழங்கி (uninterrupted power supply – UPS),… Read More »

[தினம் ஒரு கட்டளை] history னா வரலாறு தானே

நாள் 18: history history :  இந்த கட்டளை நாம் முனையத்தில் முன்பு கொடுத்த கட்டளைகளை பார்க்க பயன்படுத்தபடுகிறது. தொடரியல் : hariharan@kaniyam:~/odoc $  history தெரிவுகள்: history -w : இந்த தெரிவு தற்போதைய அமர்வில் பயன்படுத்தப்படும் கட்டளையை சேமித்து ஒரு கோப்பில் எழுதி பிறகு பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. hariharan@kaniyam:~/odoc $  history -w history -r : இது -w தெரிவின் மூலம் பயன்படுத்தப்பட்ட கட்டளைகளை படிக்க பயன்படுகிறது. hariharan@kaniyam:~/odoc $  history -r… Read More »

[தினம் ஒரு கட்டளை] reboot மீள்துவங்கு

நாள் 17: reboot reboot : இந்தக் கட்டளை கணினியின் இயக்கத்தை நிறுத்தி கணினியை மீள்துவக்கம் செய்ய பயன்படுகிறது. தொடரியல் : sudo reboot தெரிவுகள் : reboot “[message]” : இந்த கட்டளை கணிணியை மீள்துவக்கம் செய்யும் முன்னர் எதாவது செய்தியை காட்டுவதற்கு பயன்படுகிறது. இந்த கட்டளை எல்லா செயல்பாடுகளும் பதிவு செய்யப்படும்போது பயன்படும். hariaharan@kaniyam:~/odoc $  sudo reboot “message” –force : கட்டளையை இந்த தெரிவுடன் பயன்படுத்தப்படும்போது reboot போலவே செயல்படுகிறது. அனால்… Read More »

[தினம் ஒரு கட்டளை] wc வார்த்தைகளின் எண்ணிக்கை

நாள் 16 :  wc wc: இந்த கட்டளை கோப்பாகவோ அல்லது உள்ளீடாகவோ கொடுக்கப்பட்ட சரத்திலிருந்து வரிகளின் எண்ணிக்கை (அ)  வார்த்தைகளின் எண்ணிக்கை (அ) எழுத்துக்களின் எண்ணிக்கை (அ)  பைட்டுகளின் எண்ணிக்கையை அளிக்கிறது. தொடரியல் : hariharan@kaniyam :~/odoc $ wc மேற்கண்ட கட்டளை வரிகளின் எண்ணிக்கை,வார்த்தைகளின் எண்ணிக்கை மற்றும் எழுத்துகளின் எண்ணிக்கையை ஒரு தத்தி (tab) இடைவெளியில் தரும். hariharan@kaniyam :~/odoc $ cat “filename” | wc -l தெரிவுகள்: உள்ளீடு அளிக்கும் வகையில்… Read More »

[தினம் ஒரு கட்டளை] df வட்டுகளின் பயன்பாடு எவ்வளவு?

நாள்15: df அமைப்பில் உள்ள வட்டுகளின் பயன்பாடு எவ்வளவு என்பதனை அறிய இந்தக்கட்டளை பயன்படுகிறது. df: இந்த கட்டளை இணைக்கப்பட்ட சேமிப்பிட விவரங்களை குறிப்பாக மொத்த அளவு, பயன்படுத்தப்பட்ட அளவு, பயன்பாட்டிற்கு இருக்கும் சேமிப்பிட அளவு ஆகியவற்றை காட்டுகிறது. தொடரியல்: hariharan@kaniyam: ~/odoc/ $ df தெரிவுகள்: -h: இந்த தெரிவானது கோப்பின் அளவுகளை வெறும் பைட்டுகளில் காட்டாமல் mb,gb எனும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அளிக்கிறது. Syntax: df -h df -T: எனும் தெரிவு… Read More »

[தினம் ஒரு கட்டளை] ping கணினி இணைப்பில் இருக்கிறதா?

நாள் 14: ping ping: இந்தகட்டளை இரு கணிணிகள் சரிவர இணைய இணைப்பில் இருக்கின்றனவா என்பதை சோதிக்க பயன்படுகிறது.இந்த பிங் கட்டளை கொடுக்கப்பட்ட கணினியின் இணையப் பெயரையும் (hostname) அல்லது இணைய நெறிமுறை முகவரி (ip address)வைத்து ICMP துணுக்குகளை கொடுக்கப்பட்ட  முடிவில்லாமல் இணைய முகவரிக்கு அனுப்பும். தொடரியல்:  hariharan@kaniyam : ~/odoc $ ping [ipaddress/websiteaddress] hariharan@kaniyam : ~/odoc $ ping google.com hariharan@kaniyam : ~/odoc $ ping 8.8.8.8 தெரிவுகள்: -c:… Read More »