Category Archives: கணியம்

[தினம் ஒரு கட்டளை] mkdir கோப்புறை உருவாக்கு

10 வது நாள் நாம் பார்க்கவிருப்பது கோப்புறை உருவாக்கும் கட்டளை நாம் தொடர்புள்ள கோப்புகளை எல்லவற்றையும் சேர்த்து ஒரு கோப்புறை உருவாக்கி அதில் சேமிப்பது தேவைப்படும் நேரத்தில் அந்த கோப்பினை நாம் எளிதாக கண்டறிய வழிவகை செய்யும். mkdir – இந்த கட்டளை கோப்புறையை உருவாக்கு (make directory) எனும் ஆங்கில சொற்சுருக்கத்தை அதன் பெயராகக் கொண்டுள்ளது. கோப்புறையை உருவாக்க பயன்படும் இந்த கட்டளை சில கோப்புறைகளின் உள்ளே மூல பயனர் மட்டுமே இயக்க இயலும். அவ்வாறான… Read More »

[தினம் ஒரு கட்டளை] Date நாள்

9-வது நாளாகிய இன்று நாம் பார்க்கவிருக்கும் கட்டளை date பெயரிலேயே அது எதைப்பற்றியது என்று எளிதில் விளங்கும். date – நாள் இந்தக்கட்டளை இயங்குதளம் பராமரிக்கும் இன்றைய தேதி மற்றும் நேரத்தை (வன்பொருள் கடிகாரம் நேரத்தை மற்றொரு வடிவத்தில் பராமரிக்கும்.) காட்டும். தொடரியல் : hariharan@kaniyam: ~/odoc/ $ date மேற்கண்ட கட்டளை இன்றைய தேதி மற்றும் நேரத்தை காண்பிக்கிறது. date கட்டளை மூலம் காட்டப்படும் தேதியை நமக்கு தேவையானபடி வடிவமைப்பு செய்துகொள்ள முடியும். வடிவமைப்புக்காண குறியீடுகள்… Read More »

[தினம் ஒரு கட்டளை] PS செயல்பாட்டு நிழற்படம்

மற்றொரு தினம் ஒரு கட்டளை பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 8 வது நாள் PS – Process Selection (Snapshot) லினக்ஸ் கணினியில் துவங்கியதிலிருந்து பல செயல்படுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அந்த நிகழ்வுகளை ஒரு நிழற்படம் போல ஒருகனப் பொழுதில் இருப்பனவற்றை பட்டியலிட்டு காட்ட இந்த கட்டளை பயன்படுகிறது. தொடரியல்: hariharan@kaniyam : ~/odoc $ ps இந்த கட்டளை தற்போது கட்டளை இயக்கியில் இயக்கத்தில் இருக்கும் செயல்பாடுகளை காண்பிக்க பயன்படுகிறது. தெரிவுகள்: இந்த கட்டளைக்காண… Read More »

[தினம் ஒரு கட்டளை] GREP தேடுதல் வேட்டையின் கருவி

இன்று 7ம் நாள். நாம் பார்க்கவிருக்கும் கட்டளை GREP – Global Regular Expression Print ஒரு கோப்பிலோ அல்லது ஒரு திரையிலோ (ஒரு கட்டளையின் வெளியீடு) உள்ள உரையில் ஒரு உள்ளீடாக கொடுக்கப்பட்ட சொல் அல்லது காட்டுரு (pattern)க்கு பொருத்தமானவைகளை பட்டியலிடக்கூடிய ஒரு கட்டளை ஆகும். தொடரியல் : hariharan@kaniyam: ~/odoc $ grep “pattern” filename தெரிவுகள் : -i எனும் தெரிவு ஆங்கில பெரிய மற்றும் சிறிய எழுத்து வேறுபடுகளை புறக்கணித்து பொருத்தங்களை… Read More »

பழைய டிவியின் திரைகள், எவ்வாறு வேலை செய்தன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 22

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல கட்டுரைகள் குறித்து நாம் விவாதித்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நாம் விவாதிக்க இருக்கக்கூடிய கட்டுரை நம்மில் பலருக்கும் பழைய நினைவுகளை கொண்டு வரும் என நம்புகிறேன். சரி! அதற்கெல்லாம் முன்பாக வழக்கம் போல என்னுடைய இன்னபிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை, நீங்கள் படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். kaniyam.com/category/basic-electronics/ 1990களில் தான், தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இந்தியாவில் தொடங்கியது. அதற்கு முன்பெல்லாம், பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் ஒளியும்… Read More »

PostgreSQL database – இலவச இணைய வழி தொடர் வகுப்பு

PostgreSQL என்பது ஒரு இலவச, கட்டற்ற, திறமூல database மென்பொருள் ஆகும்.இது பல்வேறு மென்பொருள் உருவாக்கத்துக்கான தகவல்களை சேகரிக்கும் கிடங்கு ஆகப் பயன்படுகிறது. இதைக் கற்பதன் மூலம் தகவல் சார் மென்பொருட்களை எளிதில் உருவாக்கலாம். இப்பயிற்சி வகுப்புகளில் SQL அடிப்படைகளையும் PostgreSQL பயன்படுத்துவதையும் கற்போம். யாவரும் இணையலாம். அனுமதி இலவசம். ஆசிரியர் – சையது ஜாபர் contact.syedjafer@gmail.com வகுப்பு தொடக்கம் – 18-Nov-2024 7-8 PM IST திங்கள், புதன், வெள்ளி மாலை 7-8 PM IST… Read More »

[தினம் ஒரு கட்டளை] Head and Tail தலையும் வாலும்

இன்று 6 வது நாள் வார இறுதியாக வருவதாலும், இரு எதிரெதிரான கட்டளைகளை புரிந்துகொள்வதற்கு எளிதாக இருப்பதாலும், இன்று  இரு கட்டளைகளைக் காண்போம். அதில் முதலாவதாக HEAD பற்றி காண்போம். head கட்டளை ஒரு உரை கோப்பின் முதல் சில வரிகளை காண்பிக்க பயன்படுகிறது. தானமைவு (default) அமைப்பாக 10 வரிகளை அளிக்கிறது. இருநிலை தரவுகளைக்கொண்ட கோப்புகளாக இருப்பின் அவற்றில் உள்ள உரை மற்றும் குறியீடுகளை காண்பிக்கிறது. பல கோப்புகளை உள்ளீடாக அளிக்கும் போது ஒவ்வொறு கோப்பின்… Read More »

[தினம் ஒரு கட்டளை] echo எதிரொலி

5 வது நாள் echo –  எதிரொலி ஒரு செய்தியையோ அல்லது ஒரு மாறியையோ  அனைத்து உயிர்ப்போடு இருக்கும் பயனர்களுக்கு அனுப்பவும் கோப்புகளை உருவாக்கவும். உள்ளடக்கத்தை மாற்றி எழுதவும் பயன்படுகிறது. தொடரியல்: hariharan@kaniyam:~/odoc $ echo ” Hi Everyone” Hi Everyone என்ற செய்தியை முதல்நிலை வெளியீட்டில் அனுப்பகிறது. hariharan@kaniyam:~/odoc $ echo $HOME $HOME எனும் மாறியில் உள்ள மதிப்பை வெளியிடுகிறது. hariharan@kaniyam:~/odoc $ echo “the text” > filename.extension the text… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 27. மின்னூர்திகளின் தரநிலைகள்

வண்டியை வாங்குவதற்கு முன் அதன் திறன் (power), முறுக்கு விசை (torque), முடுக்கம் (acceleration), ஓடுதூரம் (range) பொன்ற பல விவரங்களைக் குறிப்பாகப் பார்க்கிறீர்கள். ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவரவர் வழியில் சோதனை செய்து வெளியிட்டால் உங்களால் இவற்றை ஒப்பீடு செய்து பார்க்க முடியாது. இவற்றைப் பொதுவாகச் சோதிக்கும் செயல்முறைகள் தேவை. மேலும் சார்பற்ற மையம் ஒன்று சோதனை செய்து அறிக்கை வெளியிட்டால்தான் வாங்குபவர்களுக்கு நம்பத்தக்கதாக இருக்கும்.  இந்தியத் தானுந்து ஆராய்ச்சிக் கழகம் (Automotive Research Association of… Read More »

[தினம் ஒரு கட்டளை] CAT ஒன்றிணை.

4 வது நாளில் நாம் காண இருக்கும் கட்டளை CAT cat என்றவுடன் பூனை என்று எண்ணிவிடாதீர்கள். concatnate என்பதன் சுருக்கமே அது. தொடரியல்: hariharan@kaniyam :~/odoc $ cat ./bashrc ஒரே ஒரு கோப்புடன் இந்த கட்டளையை பயன்படுத்தும்போது கோப்பின் உள்ளடக்கத்தை  முனையத்தில் காட்டும். hariharan@kaniyam:~/odoc $ cat video.mp4 அப்படியெனில் படம் அல்லது காணொலிகளை இந்த கட்டளை பயன்படுத்தி படித்தால் முனையத்தில் படத்தின்(காணொளியின்) இருநிலை மதிப்பின் உரைவடிவம் வெளியிடப்படும். hariharan@kaniyam:~/odoc $ cat file1… Read More »