Category Archives: பங்களிப்பாளர்கள்

சென்னை பயிலகத்தில் பெண்களுக்கு இலவசக் கணினி, நிரலாக்கப் பயிற்சி

வரும் ஏப்ரல் 1 முதல் 5 வரை பெண்களுக்கு இலவசக் கணினி, நிரலாக்கப் (Programming) பயிற்சி சென்னை வேளச்சேரி பயிலகத்தில் நடைபெறுகிறது. என்னென்ன சொல்லிக் கொடுப்பார்கள்? கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன, லினக்ஸ் ஓர் அறிமுகம், ஆண்டிராய்டில் எஃப்-டிராய்டு பயன்பாடு, ஸ்கிராட்ச் நிரலாக்க மொழி (Scratch Programming) ஆகியன சொல்லிக் கொடுக்கப்படும். நான் இல்லத்தரசி. எனக்குக் கணினி அடிப்படைகள் மட்டுமே தெரியும். நான் இதில் சேரலாமா? தாராளமாக! கணினி / மடிக்கணினியை இயக்கத் தெரிந்தால் போதும்! நீங்கள்… Read More »

சிறந்த திறமூல தரவுத்தளத்தை தேர்வு செய்வதற்காகCAP எனும் தேற்றத்தினை பயன்படுத்திகொள்க

ஒரு சரியான திறமூல தரவுத்தளத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது CAP தேற்றத்தின் தெளிவான புரிதலுடன் ,பல்வேறு திறமூல தரவுத்தளங்களின் தனித்துவமான பண்புகளையும் பொறுத்தது ஆகும். நம் வாழ்வின் ஒவ்வொரு இயல்பிலும் தரவு நம்மைச் சூழ்ந்துள்ளது. நாம் கையில் வைத்திருக்கும் சாதனங்கள் முதல் நிறுவன தரவுத்தளங்கள் வரை, தரவு சேமிப்பகம் இன்றியமையாததாக ஆகிவிட்டது. தரவு சேமிப்பிற்காக ஒரு சில பிரபலமான நிறுவனங்களை மட்டுமே என நம்பியிருந்த நாட்கள் நீண்ட காலமாகிவிட்டன, மேலும் வெவ்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு தரவுத்தளங்களைத் தேர்ந்தெடுக்கும் போது… Read More »

எளிய தமிழில் Car Electronics 20. பணிமனையில் பழுது கண்டறிந்து சரிசெய்தல்

ஒருமித்த பழுது கண்டறியும் சேவைகள் (Unified Diagnostic Services – UDS) என்பது தானுந்துகளின் கட்டுப்பாட்டகங்களுக்கான (automotive ECU)  ISO 14229 என்ற பன்னாட்டுத் தரநிலையில் வரையறுக்கப்பட்டுள்ள தொடர்பு நெறிமுறை ஆகும். முழுமையான பழுது கண்டறிதல் நீங்கள் ஒரு பழைய கார் வாங்கப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வாங்குவதற்கு முன்பு மேலோட்டமான ஆய்வு மூலம் அதன் செயல்பாட்டில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் கண்டறிய முடியாது. இம்மாதிரி வேலைகளுக்கு முழுமையான பழுது கண்டறிதல் தேவைப்படுகிறது. குறிப்பாக மின்னணு சாதனங்கள்… Read More »

ஜாவாஉரைநிரல் இயக்க நேரத்தில் புதிய சகாப்தத்தை படைக்கவுள்ள Bun எனும்பயன்பாடு

தற்போதையநிலையில் ஜாவாஉரைநிரல் மேம்பாட்டிற்கு புதியசெயல்வேகம் தேவைப்படுகிறது, அதனை நிறைவுசெய்திடுவதற்காக இந்த Bun எனும் கட்டற்ற பயன்பாடானது மின்னல் வேக செயல்திறனையும், சொந்த TypeScript ஆதரவினையும் , நெறிப்படுத்தப்பட்ட பணிப்பாய்வுகளையும்ன் வழங்குகிறது. ஆனால் இன்னும் அதற்கான மேலும் கூடுதலான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த Bun.ஆனது ஜாவாஉரைநிரல் மேம்பாட்டில் விரைவான , எப்போதும் உருவாகின்ற அகண்மையில், ஒரு புதிய, நம்பிக்கைக்குரிய செயலியாக சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது: இந்த Bun.ஆனது ஜாவாஉரைநிரலில் , TypeScript பயன்பாடுகள் கட்டமைக்கப்பட்ட, பரிசோதனை , பயன்படுத்தப்படும்… Read More »

எளிய தமிழில் Car Electronics 19. ஓடும்போது பழுது கண்டறிதல்

வண்டியில் ஏதேனும் செயல்பிழை ஏற்பட்டால் பணிமனைக்குக் கொண்டு சென்று பழுது பார்க்கலாம்தானே? ஓடும்போதே பழுது கண்டறிதல் அவசியமா, என்ன – என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி. இதற்கு இரண்டு பதில்கள் உள்ளன. முதலாவது, உங்கள் வண்டியிலிருந்து வெளிவரும் உமிழ்வு (emission) தரநிலைக்குள்தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதில் அரசாங்கங்கள் குறியாக இருக்கின்றன. ஆகவே 1988 இல் கலிஃபோர்னியாவில் தொடங்கி, பின்னர் அமெரிக்கா முழுவதும், அதன் பின்னர் ஐரோப்பா, இந்தியா உட்படப் பல உலக நாடுகளும் ஓடும்போது உமிழ்வு… Read More »

தரவு அறிவியலிற்காக R அல்லது பைதான் ஆகியஇரண்டில் எந்த கணினிமொழியை கற்றுக்கொள்ள வேண்டும்?

எப்போதும் மாறிகொண்டேயிருக்கின்ற தரவு அறிவியலின் நிலப்பரப்பில், எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்தஉதவுகின்ற கருவிகளில் எது மிகவும் சரியானது அல்லது பொருத்தமானது என தேர்வுசெய்வதற்கான, ஒரு அடிப்படை கேள்வியே பெரும்பாலும் ஆர்வமுள்ள ஒவ்வொரு தரவு நிபுணரின் குறுக்காக தடைகல்லாக வழியில் நிற்கிறது: ஆயினும் இந்நிலையில் R அல்லது பைதான். ஆகிய இரண்டு கணினிமொழிகளும் தரவுஅறிவியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளன,என்ற செய்தியை மனதில் கொள்க ஒவ்வொன்றும் தனித்துவமான பலம் , பயன்பாடு ஆகியவற்றுடன்ப் பெருமைப்படுத்துகின்றன. அதனால் இந்த கட்டுரையில், இவ்விரண்டின் நுணுக்கங்களை… Read More »

எளிய தமிழில் Car Electronics 18. CAN உட்பிணையம்

இது நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) CAN உட்பிணையம் (bus) என்பது ஒரு நிகரிடைப் பிணையம் (Peer-to-peer network) தகவல் பரப்பு அமைப்பாகும். அதாவது இதில் இணைந்திருக்கும் எந்தவொரு கட்டுப்பாட்டகமும் (ECU) தகவலை அனுப்பவும் பெறவும் முடியும். பிணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு ECU வையும் பொதுவாகப் பிணையத்திலுள்ள ஒரு கணு (node) என்று கருதலாம். இது 125 kbps இலிருந்து அதிகபட்சம் 1 Mbps வரை தகவலை அனுப்ப முடியும். இதில் அதிகபட்சமாக 2048 தனிப்பட்ட அடையாளம்… Read More »

Dayon எனும்கட்டற்ற மேஜைக்கணினியின் தொலைைதூரஉதவி-யாளர்

தற்போது பயன்பாட்டில் உள்ள Dayon என்பது கட்டற்ற மேஜைக்கணினியின் தொலைைதூர உதவித்தீர்வாகும் .இது பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பானது, இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென பதிவுஎதுவும் செய்யத்தேவையில்லை , தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், வணிக பயன்பாட்டிற்கும் கட்டணம்எதுவுமில்லாமல் கிடைக்கின்றது தொலைநிலை உதவி சேவை இது தொலைதூரத்திலிருந்து கணினியின் செயலை காணவும் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கின்ற ஒருதிறமூல, குறுக்கு-தள JAVA தீர்வாகும். இந்த அர்த்தத்தில், இது ஏற்கனவே இருக்கின்ற பல்வேறுதொலைநிலை மேசைக்கணினி தீர்வுகளைப் போன்றே உள்ளது.ஆனால் இது அவைகளைவிட மதிப்புமிக்ககூடுதலான சில வசதிகளையும், கொண்டுள்ளது.… Read More »

மூலக் குறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்கிட Doxygenஎனும் பயன்பாட்டினை பயன்படுத்திகொள்க

Doxygen என்பது இயல்புநிலையில் குறிப்புரை செய்யப்பட்ட C++ எனும் மூலகுறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்குவதற்கான நடைமுறையில் செந்தரமான கருவி ஆகும், ஆனால் இது C, Objective-C, C#, PHP, Java, Python, IDL (Corba, Microsoft, , UNO/OpenOffice flavors போன்ற பிற பிரபலமான நிரலாக்க மொழிகளையும் ஆதரிக்கிறது. ), Fortran, Dஇன் விரிவாக்க வன்பொருள் விளக்க மொழியான VHDLஆகியவற்றினை ஆதரிக்கிறது. இது நமக்கு மூன்று வழிகளில் உதவுகின்றது: 1. இது ஒரு இணையத்தின் ஆவண உலாவியையும் (HTML… Read More »

எளிய தமிழில் Car Electronics 17. ஊர்திப் பிணைய நெறிமுறைகள்

ஒரு உணரி பல ECU க்களுக்குத் தகவல் அனுப்பவேண்டுமென்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு ECU க்கும் நேரடியாகத் தனித்தனி கம்பி போட்டால் காரில் கம்பிகளின் எண்ணிக்கை அதிகமாகிப் பராமரிப்பது மிகவும் கடினமாகிவிடும். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கப் பிணையத்தைப் பயன்படுத்துகிறோம்.  பிணையமும் (network) உட்பிணையமும் (bus) பிணையம் (network) என்பது மிகவும் பரவலாக இருப்பது. எடுத்துக்காட்டாக, ஒரு அலுவலகத்தில் உள்ளத் தனிநபர்க் கணினிகள், வழங்கிகள் (இணையம், தரவு, கோப்பு), அச்சு எந்திரங்கள் ஆகியவற்றை இணைப்பது பிணையம். உட்பிணையம் (bus) என்பது… Read More »