எளிய தமிழில் Car Electronics 10. இயங்கும் பாதுகாப்பு அமைப்புகள்
ஊர்தியின் வடிவமைப்பில் புவியீர்ப்பு மையம் (center of gravity) தாழ்வாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது எளிதில் குடைசாயாமல் இருக்கும். எதிர்பாராதவிதமாக ஊர்தி விபத்துக்குள்ளாகி மோதினாலும்கூட உள்ளே இருக்கும் பயணிகளைப் பாதுகாக்க அடிச்சட்டமும் (Chassis) உடற்பகுதியும் வலுவாக இருக்கவேண்டும். எரிபொருள் கலன் எளிதில் தீப்பற்றிக் கொள்ளாமல் வடிவமைக்கப்படவேண்டும். மானிப்பலகையில் (dashboard) இருக்கும் நெகிழி, இருக்கையிலுள்ள துணிகள், நுரை ரப்பர் (foam rubber) ஆகியவை ஒருக்கால் தீப்பிடித்தாலும் பரவாமல் இருக்க வேண்டும். இவை யாவும் பாதுகாப்பு அமைப்புகள்தான். இவற்றை இயங்காப்… Read More »