எளிய தமிழில் Car Electronics 6. சுழற்செலுத்தி கட்டுப்பாட்டகம்
சுழற்செலுத்தி (Transmission) அல்லது பல்லிணைப் பெட்டி (Gear box) என்பது ஒரு இயந்திர சாதனமாகும். இது ஊர்தியின் வேகத்தை மாற்றுவதற்கும் பின்னோக்கிச் செல்லவும் பல்லிணைகளைப் பயன்படுத்துகிறது. தற்போது தயாரிக்கப்படும் பெரும்பாலான பயணிகள் கார்களின் சுழற்செலுத்திகள் 5 முன்னோக்கிய பல்லிணை விகிதங்களும் ஒரு பின்னோக்கிய பல்லிணை விகிதமும் கொண்டவை. தானியங்கி சுழற்செலுத்தி (Automatic Transmission) முன்னோக்கிய வேகத்திற்குத் தகுந்தவாறு தானியங்கியாக பல்லிணை மாற்றுவதற்கு (automatic gear shifting) ஓட்டுநரிடமிருந்து எந்த உள்ளீடும் தேவையில்லை. சுழற்செலுத்தி கட்டுப்பாட்டகம் (Transmission Control… Read More »