Category Archives: பங்களிப்பாளர்கள்

பைத்தான் படிக்கலாம் வாங்க – 3 – எளிமையே இனிமை!

“பைத்தானைப் பற்றிய உங்களுடைய முந்தைய இரண்டு பதிவுகளைப் பார்த்தேன். உண்மையில் பைத்தான் அவ்வளவு எளிதான மொழியா? புதியவர்களைப் பைத்தான் பக்கம் இழுக்க நீங்கள் செய்யும் விளம்பர உத்தி தானே அது?” என்று ஒரு நண்பர் கேட்டார். “விளம்பரங்களைக் கண்டு அப்படியே நம்பும் காலம் எல்லாம் மலையேறிப் போச்சு நண்பரே! நம்முடைய காலத்தில் ஒரு நடிகர் நடித்தாலே படத்திற்குப் போவோம். இப்போதுள்ள இளைஞர்கள் அப்படியா? நடிகர் யார்? இயக்குநர் யார்? ஒளிப்பதிவு யார்? என்று அக்கு வேறு ஆணிவேறாக… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 1

பைத்தான் படிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாட்களாகவே என்னுள் இருந்த சிந்தனை. கல்லூரி படித்த காலங்களில் சி++, ஜாவா ஆகிய இரண்டையும் பாடமாகவே படித்திருந்தேன். ஆனாலும் அவை இரண்டும் பெரிய அளவில் மனத்தில் நிற்கவில்லை. செயலிலும் அப்படித்தான் வெளிப்பட்டது. வேலை பார்த்த நாட்களில் ஜாவா மிகப் பெரிய அளவில் எனக்குத் தேவையாக இருந்தது. வேலையைத் தக்க வைப்பதற்கே ஜாவா வேண்டும் என்னும் நாட்களில் எப்படியாவது ஜாவாவைக் கரைத்துக் குடித்து விட வேண்டும் என்று ஜாவா கம்ப்ளீட்… Read More »

Pandoc எனும் உலகளாவிய ஆவண மாற்றி

இது ஒரு உலகளாவிய குறியீட்டு (markup) மாற்றியாகும் அதாவது இந்தPandoc என்பது ஒரு உலகளாவிய ஆவண மாற்றியாகும், இது பல குறியீட்டு வடிவங்களிலிருந்து கோப்புகளை மற்றொன்றாக மாற்றுகின்ற திறன்மிக்கது. இது(Pandoc)நம்முடன் இருந்தால், நம்மிடம் சுவிஸ்-இராணுவ கத்தி போன்ற ஒரு குறியீடுமாற்றி நம்மிடம் உள்ளது என நாம் எதற்காகவும் பயப்புடாமல் இருக்கலாம், நடைமுறையில் இதன்வாயிலாக நாம் எந்த குறியீட்டு வடிவமைப்பையும் வேறு எந்த வடிவத்திலும் மாற்ற முடியும். Pandoc ஆனது அவ்வாறான மாற்றங்களுக்கான Haskell நூலகத்தையும் இந்த நூலகத்தைப்… Read More »

லினக்ஸின் cowsayஎனும்கட்டளையை வித்தியாசமான வழிகளில் பயன்படுத்தலாம்

பெரும்பாலான நேரங்களில், முனையமானது ஒரு உற்பத்தித்திறன் கொண்ட அதிகார மையமாக திகழ்கின்றது. ஆனால் கட்டளைகள் கட்டமைப்புகளை விட முனையத்தில் இன்னும் ஏரளமாக இருக்கின்றன. அனைத்து சிறந்த திறமூல மென்பொருட்களிலும், சில வேடிக்கைக்காக எழுதப்பட்டவை. இந்தக் கட்டுரை அவ்வாறான ஒன்று பற்றியது: மதிப்பிற்குரிய cowsay எனும்கட்டளை யானது உள்ளமைக்கக்கூடிய பேசுகின்ற (அல்லது சிந்திக்கின்ற) பசுமாடு ஆகும். இது ஒரு உரைச் சரத்தை ஏற்றுக்கொண்டு, பசுமாடு பேசுகின்ற வரைகலையை வெளியிடு கிறது. அதுலினக்ஸை விரும்புவதாக கூறுகின்ற வரைகலைபின்வருமாறு: 2 <… Read More »

லினக்ஸ் கட்டளை வரியில் படங்களைத் திருத்துவதற்கான வழிமுறைகள்

புகைப்படக் கலைஞர்கள் வரைகலை கலைஞர்கள் ஆகியோர்களுக்கு லினக்ஸ் இயக்கமுறைமை மிகப்பயனுள்ளதாக இருக்கின்றது. புகைப்படங்கள் உட்பட பல்வேறு வகையான படக் கோப்புகள் வடிவமைப்புகளைத் திருத்துவதற்கு பல்வேறு வகைகளிலான கருவிகளை வழங்குகிறது. புகைப்படங்களுடன் நாம் பணிபுரிய நமக்கு வரைகலை இடைமுகப்பு கூட தேவையில்லை என்பதை இந்த கட்டுரை காண்பிகிறது. லினக்ஸ் இயக்கமுறைமையின் கட்டளை வரியில் படங்களைத் திருத்துவதற்கு நான்கு வழிமுறைகள் உள்ளன. படங்களுக்கு விளைவுகளைப் பயன்படுத்துக சிலஆண்டுகளுக்கு முன்பு ImageMagick தொகுப்பின் திருத்தம்செய்திடுகின்ற வேடிக்கையான (பகுதியளவு பயனற்ற) Linux பொம்மைகளின்… Read More »

நம்முடைய முதல் இணைய ஆக்கக்கூறுகளை எழுதிடுக

இணைய ஆக்கக்கூறுகள்(Web components)என்பவை ஜாவாஸ்கிரிப்ட்,HTML போன்ற திறமூல தொழில்நுட்பங்களின் தொகுப்பாகும், அவை இணைய பயன்பாடுகளில் நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தனிப்பயன் உறுப்புகளை உருவாக்க அனுமதிக்கிறது. நாம் உருவாக்குகின்ற ஆக்கக்கூறுகளானவை நம்மிடம் மீதமுள்ள குறிமுறைவரிகளிலிருந்து சுதந்திரமானவை, எனவே அவை பல செயல் திட்டங்களில் மீண்டும் பயன்படுத்த எளிதானது.எல்லாவற்றிற்கும் மேலாக, இது முக்கிய அனைத்து நவீன இணைய உலாவிகளாலும் ஆதரிக்கப்படும் ஒரு தளமாகும். ஒரு இணைய ஆக்கக்கூறில் என்னென்ன இருக்கின்றன? தனிப்பயன்உறுப்புகள்: இது JavaScript API இல் புதிய… Read More »

எளிய தமிழில் 3D Printing 11. அச்சிடுகையில் தாங்கும் பொருட்கள்

உள்கூடான (hollow) பாகங்கள் உற்பத்திக்குத் தாங்கும் பொருட்கள் (Support Substances) இன்றியமையாதவை சிலநேரங்களில் நாம் உள்கூடான பாகங்களை உற்பத்தி செய்ய வேண்டி வரலாம். உருவாக்கும் பாகம் நன்கு இறுகியபின் வலிமையாக இருக்கும். ஆனால் உருக்கிப் புனையும்போது கீழே தாங்கும் பொருட்கள் இல்லையென்றால் வளைந்து உருக்குலைந்து விடும் அல்லவா? இம்மாதிரி பாகங்களை அச்சிடுகையில் தாங்கும் பொருட்கள் அவசியம் தேவை. 3D அச்சிடும் விளிம்புகள் (brims) 3D அச்சிடும் விளிம்பு என்பது பாகத்தின் அடி விளிம்புகளிலிருந்து அச்சுப் படுக்கையில் விரிவடையும்… Read More »

எளிய தமிழில் 3D Printing 10. பொருள்சேர் உற்பத்தியா, பொருள்நீக்கு உற்பத்தியா?

சிக்கலான உள் வடிவியல் கொண்ட பாகங்களுக்கு முப்பரிமாண அச்சிடல் இன்றியமையாதது பொருளை அகற்றுவதற்குப் பதிலாக அடுக்குகளை உருவாக்குவதன் மூலம் பொருள்சேர் உற்பத்தி வேலை செய்கிறது. ஆகவே இத்தொழில்நுட்பம் சுழல் காற்றுக்குழல்கள் (spiral vents) மற்றும் உள்ளுக்குள் உள்ளான கூடுகள் (nested hollow cores) போன்ற சிக்கலான உள் வடிவியல் கொண்ட தயாரிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  மேலும் பொருள் நீக்கு உற்பத்தி செயல்முறையில் சில சிக்கலான வடிவமைப்புகளுக்கு இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய பாகங்களை… Read More »

எளிய தமிழில் 3D Printing 9. படிவுத் துகளை உருக்கி இணைத்தல்

சிட்டங்கட்டல் (Sintering) முறையில் துகள்களை முழுவதும் திரவமாக உருக்காமல் நமக்குத் தேவையான வடிவத்தை உருவாக்கலாம் என்று பார்த்தோம். உலோகம் போன்ற துகள்களை படிவம் படிவமாக உருக்கி இணைப்பதன் (Powder bed fusion) மூலமும் உருக்கிப் பீச்சுதல் (Material Jetting) மூலமும் நமக்குத் தேவையான வடிவங்களை உருவாக்கலாம். உலோகங்களை இளக்குவதும், கையாளுவதும் மிகக் கடினமான வேலை வெப்பத்தால் இளகும் நெகிழிகள் (thermoplastics) பெரும்பாலும் 110 முதல் 200 பாகை செல்சியசில் இளகத் தொடங்கும். சுமார் 150 முதல் 300… Read More »

எளிய தமிழில் 3D Printing 8. சீரொளி சிட்டங்கட்டல் (laser sintering)

சிட்டங்கட்டல் என்பது துகள்களை முழுவதும் திரவமாக உருக்காமல் வெப்பம் மற்றும் அழுத்தம் கொடுத்து இறுக்குதல் அல்லது கெட்டித்தல் மூலம் ஒரு திடமான பொருளை உருவாக்கும் செயல்முறை. இது துகள்களை ஒன்றாக இணைத்து ஒரு திடமான பாகத்தை உருவாக்குகிறது. சீரொளி தேர்வு சிட்டங்கட்டல் (selective laser sintering – SLS) மற்றும் நேரடி உலோக சீரொளி சிட்டங்கட்டல் (Direct metal laser sintering – DMLS) இதில் அடங்கும். அடிப்படையில் இவை ஒரே மாதிரியானவை. நெகிழி, கண்ணாடி, பீங்கான்… Read More »