Category Archives: பங்களிப்பாளர்கள்

எளிய தமிழில் 3D Printing 7. ஒளித் திண்மமாக்கல் (photo-solidification)

பொருள்சேர் உற்பத்திக்கு பலவிதமான செயல்முறைகள் உள்ளன. பாகங்களை உருவாக்க அடுக்குகள் கட்டும் விதத்திலும், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலும்தான் இவை முக்கியமாக வேறுபடுகின்றன. ஒரு இயந்திரத்தை நாம் தேர்ந்தெடுப்பதில் முக்கிய காரணங்கள் அதன் வேகம், அதன் விலை, பாகத்தை  அச்சிட ஆகும் செலவு, எம்மாதிரிப் பொருட்களில் அச்சிட இயலும் ஆகியவையே. இழையை உருக்கிப் புனைதல் தவிர மற்ற சில செயல்முறைகளைப் பற்றிப் பார்ப்போம். ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்கள் ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்கள்… Read More »

எளிய தமிழில் 3D Printing 6. திறந்தமூல சீவுதல் மென்பொருட்கள்

நாம் பாகத்தின் வடிவத்தை ஒரு கணினி வழி வடிவமைப்பு (CAD) மென்பொருளை வைத்து உருவாக்கி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். நம் மூலப்பொருள் மற்றும் எந்திரத்தின் திறனைப் பொருத்து தடிமன் வைத்து அந்த பாகத்தை படிவம் படிவமாக சீவிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு படிவத்திற்கும் நம் அச்சு எந்திரத்தின் தலை முன்னும் பின்னும் செல்ல வேண்டும். ஒரு படிவம் முடிந்தபின் அந்தப் படிவத்தின் தடிமன் அளவு மேல் நோக்கி நகர வேண்டும். இம்மாதிரி அச்சு எந்திரத்தின் தலை… Read More »

எக்ஸ்எம்எல்( XML) என்றால் என்ன?

XML என சுருக்கமாக அழைக்கப்படுகின்ற விரிவாக்க குறியீட்டு மொழி (extensible markup language) என்பது ஒரு படிநிலை குறியீட்டு மொழியாகும். இதுதரவுகளை வரையறுப் பதற்காக அவற்றை திறக்கின்ற, மூடுகின்ற குறிச்சொற்களைப் பயன் படுத்துகிறது. இது தரவுகளைச் சேமிக்கவும் பரிமாறிகொள்ளவும் பயன் படுகிறது, மேலும் இதனுடைய தீவிர நெகிழ்வுத் தன்மை காரணமாக, இது ஆவணங்கள் முதல் வரைகலை வரை அனைத்து பயன்பாடுகளிலும் பயன்படுத்தி கொள்ளப் படுகிறது.ஒரு மாதிரி XML ஆவணம் பின்வருமாறு: <xml> <os> <linux> <distribution> <name>Fedora</name>… Read More »

எளிய தமிழில் 3D Printing 5. கோப்பு வடிவங்கள்

முப்பரிமாணப் பொருளை அச்சிட, ஒரு 3D அச்சுப்பொறிக்கு பொருளின் எண்ணிம வரைபடம் தேவை. இது வடிவியல், நிறம், அமைப்பு மற்றும் மூலப்பொருட்கள் போன்ற நம் பாகத்தைப் பற்றிய அனைத்து தொடர்புடைய தரவுகளையும் சேமிக்கும் ஒரு கோப்பு. அத்தகைய தரவை வைத்திருக்கக்கூடிய பல கோப்பு வடிவங்கள் உள்ளன.  உங்களிடமுள்ள வடிவமைப்பு மென்பொருட்கள் எந்தவிதமான கோப்பு வகையில் சேமிக்க முடியும் அல்லது ஏற்றுமதி செய்ய முடியும் என்று பாருங்கள். மேலும் நீங்கள் பயன்படுத்தப்போகும் சீவுதல் மென்பொருள் மற்றும் முப்பரிமாண அச்சு… Read More »

விண்டோ இயக்கமுறைமைகளில் செயவ்படும் பயன்பாடுகளை பயன்படுத்திகொள்வதற்காக உதவிடும்ReactOS எனும் இயக்கமுறைமை

நாம் அதிகம்நம்பக்கூடிய திறமூல சூழலில் நமக்குப் பிடித்த விண்டோ இயக்கமுறைமை பயன்பாடுகளும் இயக்கிகளையும் செயல்படுவதை கற்பனை செய்து பார்த்திடுக. அதுதான் ReactOS என்பதன் அடிப்படைநோக்கமாகும்! உலகளாவிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பது, போல, நம்முடைய சொந்த தனிப்பட்ட திறன்களை மிக உயர்ந்த புதிய நிலைக்கு உயர்த்த இந்த ReactOS ஆனது உதவுகின்றது. குறிமுறைவரிகளையும் விண்டோ இயக்கமுறைமையின் உள்ளமைப்புகளையும் பற்றி அறிய விரும்பினால், ஒரு சிறந்த உண்மையான தள பிரச்சினையைக் கண்டுபிடிக்க முடியாது. புத்தகக் கோட்பாட்டிலிருந்து நடைமுறை வாழ்க்கைக்குச்… Read More »

மொசில்லா பொதுக்குரல் திட்டம் – அரைமணிநேர அறிமுகக் கூட்டம் – 26 செப்டம்பர் 2021

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 26.09.2021 ஞாயிறு – காலை 10… Read More »

எளிய தமிழில் 3D Printing 4. வடிவமைப்புக்குத் திறந்தமூல மென்பொருட்கள்

பாகத்தை வடிவமைப்பதுதான் முக்கிய வேலை  நாம் பொருள்சேர் உற்பத்தி முறையில் ஒரு பாகத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு முக்கிய வேலை அதை வடிவமைப்பது தான். ஆகவே இந்த வேலைக்கு என்னென்ன திறந்த மூல மென்பொருட்கள் உள்ளன அவற்றின் அம்சங்கள் யாவை என்று முதலில் பார்ப்போம். அளவுரு மாதிரியமைத்தல் (parametric modeling) நாம் ஒரு சிக்கலான வடிவத்தை பல படிகளில் உரு மாற்றங்கள் செய்து தயாரித்து முடித்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இதை சேமித்து வைக்க நாம் இரண்டு… Read More »

கணினியில் தீம்பொருளைக் கண்டறிந்து தடுத்திட ClamAV ஐப் பயன்படுத்துதல்

  தீம்பொருள் என்பதும் ஒருகணினி மென்பொருளாகும், ஆனால் இது நமக்கு முக்கியமான தரவுகளின் இழப்பு முதல் பிணைய பாதுகாப்பு மீறல் வரை கடுமையான பேரழிவுகளுக்கு வழிவகுக்கின்றது. இது தரவுகளின் பரிமாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர் கணினி அல்லது சேவையகத்தை பாதிப்படைய செய்கின்றது, மேலும் அதிநவீன தீம்பொருள் தடுப்பு மென்பொருள் மட்டுமே இதனை நிகழ் நேரத்தில் வருடுதல் செய்து கண்டறிய முடியும். தற்போது இவ்வாறான பணியை செயல்படுத்திடுவதற்காக பயன்படுத்திகொள்வதற்காகவென சந்தையில் ஏராளமானஅளவில் தீம்பொருள் தடுப்பு மென்பொருட்கள் உள்ளன, ஆனால் அவை… Read More »

RT-Thread எனும் உட்பொதிக்கப்பட்ட அமைவுகளுக்கான புதிய திறமூல இயக்க முறைமை ஒரு அறிமுகம்

தற்போது உட்பொதிக்கப்பட்ட இயக்க முறைமைகளுக்கான தேவை நாளுக்குநாள் மென்மேலும் அதிகரித்துகொண்டே வருகிறது, மேலும் நாம் உருவாக்குகின்ற பயன்பாடானது திறமூலஇயக்கமுறைமையிலிருந்து உருவாக்கு வதாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா. RT-Threadஎன்பது அவ்வாறான திறமூல இயக்க முறைமைகளில் உட்பொதிக்கப்பட்ட ஒரு அமைவாகும் . நிற்க. நிகழ்வுநேர திரி (Real-Time thread) என்பதன் சுருக்கமான பெயரே RT-Threadஆகும் ஆராய்ச்சி மேம்படுத்துதல் குழுவின் கடந்த மூன்று வருட தீவிர ஆய்வின் பயனாக நடுநிலையிலானதும் சமூக அடிப்படையி லானதுமான இந்த RT-Threadஎனும் உட்பொதிக்கப்பட்ட திறமூல… Read More »

எளிய தமிழில் 3D Printing 3. செயல்முறைப் படிகள் (process steps)

வடிவமைப்பு உருவாக்குதல் நமக்குத் தேவையான வடிவத்தை உருவாக்க முதலில் ஒரு கணினி வழி வடிவமைப்பு (Computer Aided Design – CAD) மென்பொருள் தேவை. இதற்கு சில திறந்த மூல மென்பொருட்கள் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நாம் நமக்குத் தேவையான வடிவமைப்பை முதல்படியாகத் தயார் செய்து கொள்ள வேண்டும். பொருள்சேர் உற்பத்திக்குத் தோதான கோப்பு வகையில் சேமித்தல் இம்மாதிரி மென்பொருட்களில் பலவிதமான கோப்பு வகைகளில் சேமிக்க முடியும். நாம் பொருள்சேர் உற்பத்திக்குத்… Read More »