Category Archives: பங்களிப்பாளர்கள்

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 12. ஏன் திறந்த மூலமும், திறந்த தரவுகளும், திறந்த ஆய்வும்?

இது நாள் வரை பொதுமக்களின் வரிப் பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகளும், மென்பொருட்களும் பெரும்பாலும் சமூகம், பொதுமக்கள், அரசாங்கம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாமலே செய்யப்படுகின்றன. ஆராய்ச்சித் தரவும் மென்பொருட்களும் பெரும் செலவில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்வதேயில்லை. பெரும்பாலும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்த பிறகு விரைவில் அந்தத் திட்டம் தரவுகளை இழந்து விடுகிறது. மென்பொருட்கள் மக்களுக்குப் பயன் தராமல் வீணாகின்றன. பண விரயம் மட்டுமல்லாமல், ஒத்துழைப்பையும் முன்னேற்றத்தையும் இந்த அணுகுமுறை தடுக்கிறது. ஆய்வறிக்கைகள்படி இக்கருவிகள், வளங்கள் யாவும் உருவாக்கப்பட்டு… Read More: தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 12. ஏன் திறந்த மூலமும், திறந்த தரவுகளும்,… »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 11. பெரு நிறுவனங்களின் தமிழ் சேவைகளை நம்பியே இருந்தால் என்ன?

கூகிள், ஆப்பிள், முகநூல், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரு நிறுவனங்கள் மொழி பற்றிய சேவைகள் பலவற்றை இலவசமாகத் தருகின்றன. எடுத்துக்காட்டாக கூகிள் தரும் மொழிக் கருவிகளைப் பற்றி விவரமாகப் பார்ப்போம். கூகிள் ஜி-போர்ட் – தமிழில் தட்டச்சும் சொல்வதெழுதலும் ஜி-போர்ட் என்பது ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் சாதனங்களுக்காக கூகிள் உருவாக்கிய மெய்நிகர் விசைப்பலகை செயலியாகும். தற்போது ஆண்ட்ராய்ட் திறன்பேசிகளில் 300 க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கிறது. இதன் கணிக்கக்கூடிய இயந்திரம் (predictive typing engine), நாம் தட்டச்சு… Read More: தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 11. பெரு நிறுவனங்களின் தமிழ் சேவைகளை நம்பியே… »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 10. கணினிக்குத் தமிழ் கற்றுக் கொடுப்போம் வாருங்கள்

பண்டைய காலத் தமிழர் இலக்கியப் படைப்புகளை மனப்பாடம் செய்து காத்தனர் இறையனார் களவியல் அல்லது அகப்பொருள் உரையை உருவாக்கியவர் நக்கீரர். இவரது காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டு வாக்கில். இவர் தாம் செய்த களவியல் உரையை வாய்மொழியாகத் தம் மகனார் கீரங்கொற்றனாருக்கு உரைத்தார். கீரம் கொற்றனார் தேனூர் கிழாருக்கு உரைத்தார். இவ்வாறாக இந்த உரை அடுத்தடுத்து மனப்பாடமாக எட்டு தலைமுறைக்கு ஒப்படைக்கப்பட்டது. இறுதியில் கி.பி. 10-ம் நூற்றாண்டு வாக்கில் முசிரி நீலகண்டன் இந்த உரையை ஓலைச்சுவடியில் எழுதி… Read More: தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 10. கணினிக்குத் தமிழ் கற்றுக் கொடுப்போம் வாருங்கள் »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 9. உங்கள் பிள்ளைகளை இயந்திர மனிதர்களாக வளர்க்கிறீர்களா?

தாய்மொழியை இழந்தால் தாயை இழந்ததுபோல் பரிதவிப்போம் என்பது மிகையாகாது “பல புலம்பெயர்ந்த தமிழ்ப் பிள்ளைகளைப் போலவே வளரும் காலத்தில் நான் தமிழ் பேசவில்லை. என் கல்லூரிப் பருவத்திலும் வயதுவந்த பின்னும் என் பெற்றோரைத் திட்டிக் கொண்டிருந்தேன், ஏன் எனக்குக் குழந்தைப் பருவத்திலேயே தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை என்று. வயது வந்தபின் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அதே நேரத்தில் என் வாழ்க்கைக்கு நான்தானே பொறுப்பு. நான் தமிழ் பேச விரும்பினேன். தாய்மொழியைப் பேச வேண்டுமென்ற… Read More: தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 9. உங்கள் பிள்ளைகளை இயந்திர மனிதர்களாக வளர்க்கிறீர்களா? »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 8. புதிய தலைமுறையின் மரபணுவே எண்ணிமத்தால் ஆனது போலுள்ளது

நுகர்பொருள் ஆய்வக அறிக்கையின்படி இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட இளையவர்கள் சுமார் 200 மில்லியன் உள்ளனர், அவர்களில் 69 மில்லியன் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். 1981 முதல் 1995 வரை பிறந்த தலைமுறையை ஆங்கிலத்தில் மில்லேனியல் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு தகவல்தொடர்பு, ஊடகம், எண்ணிம தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் நல்ல பரிச்சயம் உண்டு. இவர்களுக்கு அடுத்து வந்த 1996 முதல் 2010 வரை பிறந்தவர்களை இணைய அல்லது எண்ணிம தலைமுறை என்றே சொல்லலாம். இந்த இளைய தலைமுறையின் குழந்தைப்… Read More: தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 8. புதிய தலைமுறையின் மரபணுவே எண்ணிமத்தால் ஆனது… »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 7. “ஆளும் மொழியே வாழும்; மற்றவை மாளும்” இதுதான் நியதியா?

ஆக்ஸ்போர்ட் மொழியியல் பேராசிரியர் ஜீன் அட்சிசன் சொல்கிறார், “ஒரு மொழியின் பரவல் அதைப் பயன்படுத்துபவர்களுடைய சக்தியைச் சார்ந்தது, அம்மொழியின் உள் அம்சங்களைப் பொருத்தது அல்ல.” தமிழின் பயன்பாட்டைக் கட்டாயமாக்கும் ஒரு நாட்டைத் தமிழர்கள் அமைத்தால் மட்டுமே தமிழ் வளரவும் செழிக்கவும் முடியும் என்று சிலர் உறுதியாக நம்புகின்றனர். எடுத்துக்காட்டாக இதோ ஒரு கட்டுரை. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய தமிழ் மொழியின் எதிர்காலம். “தமிழ் மொழி, எதிர்காலத்தில் வாழ்வது நிலப்பரப்பிலோ, மக்கள் தொகையிலோ அல்ல; மாறாக அதன் ஆளும்… Read More: தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 7. “ஆளும் மொழியே வாழும்; மற்றவை மாளும்”… »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 6. தடை செய்யப்பட்ட கட்டலான் மொழி புத்துயிர் பெற்றது எப்படி?

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டலான் மொழி சிறுபான்மை மக்களால் பேசப்படுகிறது. வெற்றிபெற்ற ஆட்சியாளர்களால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட கட்டலான் மொழி இப்பொழுது 9 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. உலகில் 150 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்த மொழியை கற்றுத் தருகின்றன. 400 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் இம்மொழியில் பிரசுரிக்கப்படுன்றன. பேரிடர்களை சந்தித்துப் பிழைத்து வந்த கட்டலான் மொழி 1714 ஆம் ஆண்டில் ஸ்பானிய துருப்புக்கள் பார்சிலோனாவை வெற்றி கண்ட பின், கட்டலோனியா அதன் தன்னாட்சி… Read More: தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 6. தடை செய்யப்பட்ட கட்டலான் மொழி புத்துயிர்… »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 5. பரவும் இந்த ஆங்கில மொழி ஆதிக்கம் தணிய வாய்ப்பு உள்ளதா?

ஆங்கிலம் மற்ற மொழிகளையும் கலாச்சாரங்களையும் அழிக்கிறதா? உலகமயமாக்கல், அமெரிக்க கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பப் பேரலைகளின் மேல் ஏறி உலகில் இதுவரை எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. சீன அல்லது ஸ்பானிஷ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை விட அதிகமாக இருக்கலாம், ஆனால் வேற்று மொழியாளர்களுடன் பேசும் போது அவர்களும் ஆங்கிலம்தான் பேச வேண்டியிருக்கிறது. மேலும் பிணைப்பு பெருகி வரும் உலகின் குடிமக்களாக ஆக்குவதற்காக அவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம்தான் கற்றுக்கொடுக்கிறார்கள்.… Read More: தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 5. பரவும் இந்த ஆங்கில மொழி ஆதிக்கம்… »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 4. அமெரிக்க கலாச்சார ஆதிக்கமும் தகவல் தொழில்நுட்பமும்

முதலில் ஹாலிவுட் திரைப்படங்களும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களும் 1920 களில் தொடங்கி அமெரிக்க திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொழில் மையமான ஹாலிவுட், உலகின் பெரும்பாலான ஊடகச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்க பாணி, பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவற்றைப் பின்பற்ற முயற்சி செய்யவும் முக்கிய ஊடகம் இது. ஹாலிவுட் திரைப்படங்கள் ஆங்கில மொழியைப் பரப்புகின்றன மற்றும் பிரபலப்படுத்துகின்றன. ஆங்கில மொழி உலக மொழியாக மாறி,… Read More: தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 4. அமெரிக்க கலாச்சார ஆதிக்கமும் தகவல் தொழில்நுட்பமும் »

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்

கோட்பாட்டைப் பொருத்தவரை உலகமயமாக்கல் நன்றாகத் தானிருக்கிறது. உங்கள் நாட்டில் எந்தப் பொருட்களைக் குறைந்த செலவில் நல்ல தரத்தில் செய்ய முடியுமோ அவற்றை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யுங்கள். அந்த வருமானத்தை வைத்து உங்கள் நாட்டுக்குத் தேவையான பொருட்களை அவற்றைத் திறமையாகச் செய்யும் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி தன் கையே தனக்குதவி என்று இல்லாமல் அன்றாட இன்றியமையாத பொருட்களுக்குக் கூட மற்ற நாடுகளை நம்பி இருப்பதுதான் உலகமயமாக்கல். இதனுடைய ஒரு துணை விளைவுதான் ஆங்கில மொழி ஆதிக்கம்.… Read More: தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும் »