Electric Vehicles

எளிய தமிழில் Electric Vehicles 30. வளர்ந்து வரும் மின்கலத் தொழில்நுட்பங்கள்

சோடியம் அயனி மின்கலம் செலவும் குறைவு, மூலப்பொருளும் எளிதில் கிடைக்கும்  லித்தியம் அயனி மின்கலம் போன்றே சோடியம் அயனி மின்கலமும் ஒரு வகையான மீள் மின்னேற்றத்தக்க மின்கலம் ஆகும். இது லித்தியத்துக்குப் பதிலாக சோடியத்தைப் பயன்படுத்துகிறது. சமையல் உப்பிலிருந்து சோடியம் தயாரிக்கலாம். ஆகவே இதற்கு செலவு குறைவு. மேலும் லித்தியம் போன்று ஓரிரு நாடுகளில் ஓரிரு…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 29. பழைய மின்கலம் மறுசுழற்சி

மறுசுழற்சிக்கு முன் மறுபயன்பாடு முதலில் சிக்கனம், அடுத்து மறுபயன்பாடு, பின்னர் மறுசுழற்சி (Reduce, reuse, recycle) என்பதுதான் நம் கொள்கை. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் முதலில் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது வீணாவதைத் தவிர்க்கவேண்டும். அடுத்து மறுபயன்பாடு. அதாவது அப்படியே வேறு வேலைக்குப் பயன்படுத்த முடியுமானால் அதைச் செய்ய வேண்டும். கடைசியாகத்தான் மறுசுழற்சி. ஆகவே மறுசுழற்சிக்கு…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 28. மின்கலத்தை மாற்றீடு செய்தல்

எரிவாயு உருளையைப் போல் மின்கலத்தையே மாற்றீடு செய்தல் (swapping) ஒரு உருளையில் எரிவாயு தீர்ந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம்? அதே உருளையிலேயே எரிவாயுவை மீண்டும் நிரப்புவதில்லை. அந்த உருளையைக் கொடுத்துவிட்டு வேறொரு நிரப்பிய உருளையை பதிலுக்கு வாங்கிக் கொள்கிறோம் அல்லவா? மின்கலத்தையே மாற்றீடு செய்தல் என்பது இதேபோல வடிந்த மின்கலத்தைக் கொடுத்துவிட்டு முழுமையாக மின்னேற்றிய வேறொரு…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 27. மின்னூர்திகளின் தரநிலைகள்

வண்டியை வாங்குவதற்கு முன் அதன் திறன் (power), முறுக்கு விசை (torque), முடுக்கம் (acceleration), ஓடுதூரம் (range) பொன்ற பல விவரங்களைக் குறிப்பாகப் பார்க்கிறீர்கள். ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவரவர் வழியில் சோதனை செய்து வெளியிட்டால் உங்களால் இவற்றை ஒப்பீடு செய்து பார்க்க முடியாது. இவற்றைப் பொதுவாகச் சோதிக்கும் செயல்முறைகள் தேவை. மேலும் சார்பற்ற மையம் ஒன்று…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 26. ஓட்டுநர்களுக்கு உதவிக் குறிப்புகள்

மின்னூர்திகள் ஓடும்போது சத்தமே இருக்காது பெட்ரோல் டீசல் கார்களில் வரும் எஞ்சின் ஓடும் சத்தமும், அதிர்வும் மின்னூர்தி மோட்டார்களில் மிகக் குறைவு. காரில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் வசதியானது. ஆனால் சாலையில் செல்லும் பாதசாரிகளால் வண்டி மிக அருகில் வந்தாலும் அதை உணர முடியாது. இது விபத்து ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆகவே ஓட்டுநர்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 25. பேருந்து, சரக்குந்து போன்ற வணிக ஊர்திகள்

ஈய-அமில மின்கலத்தைப் பயன்படுத்தும் மின் கவைத்தூக்கி சரக்குந்துகள் (Electric forklift trucks) பல பத்தாண்டுகளாக சந்தையில் உள்ளன. இவை கப்பல்கள், கிடங்குகள் போன்ற இடங்களில் புகை இல்லாமல் உள்வேலை செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில் வேகமாக ஓட இயலாது.  பேருந்துகளும் சரக்குந்துகளும் அடிப்படையில் கார்கள் போன்றவையே. எனினும் அதிக பளுவை சமாளிக்க அதிக முறுக்கு விசையும் (torque)…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 24. சக்கரத்திலேயே மோட்டார்

இரு சக்கர ஊர்திகளில், கார்கள் போன்று, இரண்டு சக்கரங்களை வேறுபாட்டுப் பல்லிணை (differential) வைத்து ஓட்டவேண்டிய பிரச்சினை கிடையாது. அப்படியிருக்க மோட்டாரிலிருந்து வார்ப்பட்டை (belt) அல்லது பல்லிணை (gear) மூலம்தான் சக்கரத்தைச் சுழற்றவேண்டுமா என்ன? உள்ளேயே மோட்டாரை வைத்து நேரடியாகச் சக்கரத்தைச் சுழற்றலாம் அல்லவா? அதுதான் சக்கர மோட்டார் (wheel or hub motor). சுற்றகம்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 23. மின்-ரிக்‌ஷா

மின்-ரிக்‌ஷாக்கள் (E-Rickshaw) பகிர்ந்து கொள்ளும் வாடகை ஆட்டோவாக (share auto) வட, கிழக்கு மாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மணிக்கு சுமார் 20 கிமீ வேகம்தான் செல்ல முடியும், வசதிகளும் குறைவு. ஆனால் கட்டணம் மிகக்குறைவு. ஆகவே மக்கள் இவற்றை உள்ளூர் வேலைகளுக்குப் பெருவாரியாகப் பயன்படுத்துகின்றனர். தொடக்கத்தில் சீனாவில் இருந்து பெரும்பாலான பாகங்களை இறக்குமதி செய்து…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 22. மூன்று சக்கர மின்னூர்திகள்

மூன்று சக்கர மின்னூர்திகள் இரண்டு வகை. குறைந்தத் திறன் கொண்ட மின்-ரிக்‌ஷாக்கள் (E-Rickshaw) ஈய அமில மின்கலம் வைத்து வருகின்றன. இவற்றைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஈய அமில மின்கலத்தைவிட லித்தியம் அயனி மின்கலம் அதிக ஆற்றல் கொண்டது. ஆகவே எடை குறைவு. துரிதமாக மின்னேற்றம் செய்யவும் முடியும். ஆனால் விலை அதிகம். இங்கு…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 21. இரு சக்கர மின்னூர்திகள்

மின்சாரத்தில் ஓடும் மிதிவண்டிகள் (bicycles), சிறுவர்களுக்கான உதைக்கும் ஸ்கூட்டர்கள் (kick scooters) போன்ற இலகுரக இரு சக்கர ஊர்திகள் பல பத்தாண்டுகளாக சந்தையில் உள்ளன. அடுத்து தற்போது சந்தையில் புதிய போக்கு என்னவென்றால் மின்சார ஸ்கூட்டர்கள் மின்சாரக் கார்களை விட அதிவேகமாக விற்பனை ஆகின்றன. வளரும் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யப் புதிய மாதிரிகளும் புதிய…
Read more