Category Archives: kaniyam foundation

அச்சு நூல்களை மின்னூலாக்கம் செயஅதிவேக A3 வருடி வாங்கியுள்ளோம்

  கணியம் அறக்கட்டளை சார்பாக A3 வருடி (ஏற்கனவே பயன்படுத்திய நகலியுடன் இணைந்தது) ஒன்றை வாங்கியுள்ளோம். Xerox 5755 வகை இது.  இதன்மூலம் இன்னும் அதிகமான புத்தகங்களை மின்னூலாக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பரவலாக பயன்படுத்தப்படும் சந்தைகளில் கிடைக்கும் A3 அளவுள்ள வருடிகள் தோராயமாக ரூ.50000/- முதல் ரூ.100000/- வரை இருக்கும். இத்தகைய வருடிகள் பிரத்யேகமாக வருடுவதற்காக உருவாக்கப்பட்டவை. தற்போது கணியம் அறக்கட்டளை வாங்கியுள்ள வருடி நகலியுடன் (Copier Machine) இணைந்தது. ஏற்கனவே பயன்படுத்தியது. மிகக் குறைந்த தொகையில்… Read More »

த.இ.க – மென்பொருட்களின் மூலநிரல் வெளியீடு

தமிழ் இணையக் கல்விக்கழகம் சென்ற ஆண்டு, தமிழ் ஆய்வுகளுக்கான சொல்திருத்தி உள்ளிட்ட 10 மென்பொருட்களை வெளியிட்டது. இவை மூலநிரல்களுடன் வெளிவர பலரும் ஆவலாகக் காத்திருந்தோம். இன்று அவற்றுகான மூல நிரல்களை வெளியிட்டுள்ளதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அரசின் (மக்களின்) பொருட்செலவில் உருவாகும் மென்பொருட்கள், ஆய்வுகள் யாவும் மூலநிரலுடன், கட்டற்ற மென்பொருட்களாக வெளிவரும் போது தான், பலரும் அவற்றை பல்வேறு வகைகளில் வளர்த்தெடுக்கவும் கற்று பல புத்தாக்கங்கள் உருவாக்கவும் இயலும். அந்த வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம்… Read More »

663 மின்னூல்கள் – 78 லட்சம் பதிவிறக்கங்களுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் FreeTamilEbooks.com திட்டம்

78 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 663 மின்னூல்கள், பல்லாயிரம் வாசகர்கள், நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன் சூலை 26 2020 அன்று FreeTamilEbooks.com திட்டம் 7 ஆண்டுகளை நிறைவு செய்து 8 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது. மின்னூல் திட்டமாகத் தொடங்கி, கணியம் அறக்கட்டளையாக வளர்ந்து, மின் தமிழ் உலகில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் வளர்ந்துள்ளது பெருமகிழ்ச்சி. பெருமளவு நேரத்தையும், உழைப்பையும், நன்கொடையையும் அள்ளித்தரும் அனைத்து பங்களிப்பாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பல்லாயிரம் நன்றிகள். உங்கள் கருத்துகளை… Read More »

போய் வாருங்கள் கோவை ஞானி ஐயா

எழுத்தாளர் கோவை ஞானி நேற்று காலை இயற்கை எய்தினார். நண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை பற்றி உரையாடினார். எழுத்தாளர் கோவை ஞானி [ kovaignani.org ] அவர்கள் பெரு மகிழ்வுடன் தமது படைப்புகள் அத்தனையும் CC-BY-SA என்ற உரிமையில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரது படைப்புகளை எவரும் பகிரலாம்.அச்சிட்டு வெளியிடலாம். இந்த அறிவிப்பு மானிடர் அனைவரின் மீதான பேரன்பை… Read More »

தமிழ் கையெழுத்து கொடைத் திட்டம்

தமிழ் கையெழுத்து கொடைத் திட்டம் கையெழுத்து உணரி உருவாக்க உதவுங்கள். வணக்கம். தமிழில் எழுத்துணரி (படங்களை எழுத்துகளாக மாற்றுதல்) ஒரு நீண்ட கால கனவு. Tesseract என்ற இலவச, கட்டற்ற மென்பொருள் (Free/Open Source Software) இதை சாத்தியமாக்கியுள்ளது. இதன் சமீபத்திய பதிப்பான Tesseract Version 4 தமிழுக்கு சிறந்த முறையில் எழுத்துணரி பணியைச் செய்கிறது. இந்த ஆய்வுகளின் அடுத்த கட்டமாக கையெழுத்தை உணர்ந்து யுனிகோடு எழுத்தாக மாற்றும் பெரும் கனவு உள்ளது. இது சாத்தியப்பட்டு விட்டால்,… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி, சென்னை – பிப் 24 2020

மூலம் – ta.wikisource.org/s/96iw இடம்: ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, தி. நகர், சென்னை. நாள்: 24 பெப்ரவரி 2020 நேரம்: 10 மணி முதல் 4 மணி வரை. பயிற்சிப் பட்டறை குறிப்புகள்: etherpad.wikimedia.org/p/taws-ssss-2020 பயிற்சிப் பெற்றவர்கள்: கல்லூரியில் படிக்கும் இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள். பயிற்றுநர்கள் : திவ்யா மற்றும் Balajijagadesh தொடர்பு மற்றும் ஏற்பாடு: tshrinivasan பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட காட்சிப்படங்களின் தொகுப்பு : விக்கிமூலம்… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – தமிழ்க்கணிமை பற்றிய உரை

பிப் 1 2020 அன்று சென்னையில் Gradient Optimisers Community Meetup நிகழ்வில், ‘தற்கால தமிழ்க்கணிமை’ பற்றி உரையாற்றினேன்.   www.meetup.com/Chennai-Gradient-Optimizers/events/267987204/ பின்வரும் படவில்லைகளைப் பயன்படுத்தினேன். கணித்தமிழும் மென்பொருள்களும் – தேவைகளும் தீர்வுகளும் from Shrinivasan T Open-Tamil Python Library for Tamil Text Processing from Shrinivasan T கலந்து கொண்டோரில் நிரலர்கள் அதிகம். நிரல் மூலம் மொழிக்கு அளிக்க்கூடிய பங்களிப்புகளையும் தேவைகளையும் அறிந்து வியந்தனர். open-tamil python library பற்றியும் விளக்கினேன். உரையின்… Read More »

கணியம் அறக்கட்டளை அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019, ஜனவரி 2020 மாத அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019, ஜனவரி 2020 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில்… Read More »

நிகழ்வுக் குறிப்புகள் – மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை 13 10 2019

நாள்: அக்டோபர் 13, 2019 ஞாயிறு மாலை 4 முதல் 7 வரை இடம்: பயிலகம் 7 விஜய நகர் முதல் தெரு வேளச்சேரி சென்னை 42 (நிறுத்தம்: விஜய நகர் பேருந்து நிலையம்) ஆர்த்தி ஸ்கேன்ஸ் அருகில் 40 பேர் கலந்து கொண்டனர். பின்வரும் தலைப்புகளில் சீனிவாசன் உரையாற்றினார். 1. மின்னூல் – வகைகள் – epub, mobi, PDF, HTML 2. மின்னூல் உருவாக்க உதவும் மென்பொருட்கள் – LibreOffice Writer, MS Office… Read More »

கணியம் அறக்கட்டளை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாத அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.… Read More »