FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி உருவாக்கிய கலீல் ஜாகீர் பேட்டி – காணொளி
FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி உருவாக்கிய கலீல் ஜாகீர் அவர்களின் பேட்டி – காணொளி காணொளி வெளியிட்ட Comrade Talkies குழுவினருக்கு கணியம் சார்பாக நன்றிகள்
FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி உருவாக்கிய கலீல் ஜாகீர் அவர்களின் பேட்டி – காணொளி காணொளி வெளியிட்ட Comrade Talkies குழுவினருக்கு கணியம் சார்பாக நன்றிகள்
Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை மார்ச்சு, ஏப்ரல் 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள்… Read More »
FreeTamilEbooks.com ல் வெளியாகும் மின்னூல்களைப் படிப்பதற்கென ஒரு ஆன்டிராய்டு செயலி, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. நாள் – மே 12, 2019 நேரம் – காலை 9.30 முதல் மதியம் 1.00 வரை இடம் – தேவி பாலா கூடம், விழுப்புரம் நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை – த.சீனிவாசன், உ. கார்க்கி, கணியம் அறக்கட்டளை FreeTamilEbooks செயலி வெளியீடு – து.இரவிக்குமார் (எழுத்தாளர்), இரா.… Read More »
கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுள் ஒருவரான திரு. அன்வர், எழுத்தாளர்களிடம் கிரியேட்டிவ் காமன்சு உரிமை பற்றி பரப்புரை செய்ய, கோவைக்கு பயணம் செய்தார். இதற்கான உரையாடலை இங்கே காணலாம் – github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/16 மார்ச்சு 16, 2019 முதல் மார்ச்சு 23, 2019 வரையிலான கோவை பயணத்தில், பின்வரும் எழுத்தாளர்களை சந்தித்தார். 1. கோவை ஞானி 2. பாமரன் 3. நாஞ்சில் நாடன் 4. சம்சுதீன் ஹீரா கோவை ஞானி அவர்கள் தமது படைப்புகளை பொதுக்கள உரிமையில் வெளியிட்டார்.… Read More »
சிங்கப்பூரில் தமிழ்மொழி விழாவில் உத்தமம் சார்பில் நடைபெறும் கட்டற்ற மென்பொருள் மற்றும் மின்ஊடகங்களில் போலிச் செய்திகளை கண்டறிதல் எனும் தலைப்பில் சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கணியம் அறக்கட்டளை சார்பாக திரு. செல்வமுரளி அவர்கள் கலந்துகொண்டு, தமிழில் கட்டற்ற மென்பொருள், கட்டற்ற மென்பொருளின் வழியாக தமிழ் கணிமை வளர்ந்தது, பிரபலமான மென்பொருள்களை தமிழுக்கு மொழிமாற்றம் செய்தது, தமிழில் தொழில்நுட்பக் கட்டுரைகள் மற்றும் தமிழ்க் கணிமைக்காக பல ஆண்டுகளாக… Read More »
நண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை பற்றி உரையாடினார். எழுத்தாளர் கோவை ஞானி [ kovaignani.org ] அவர்கள் பெரு மகிழ்வுடன் தமது படைப்புகள் அத்தனையும் CC-BY-SA என்ற உரிமையில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரது படைப்புகளை எவரும் பகிரலாம்.அச்சிட்டு வெளியிடலாம். இந்த அறிவிப்பு மானிடர் அனைவரின் மீதான பேரன்பை வெளிப்படுத்துகிறது. அன்வரின் வார்த்தைகளில் இதோ. 17/03/19 சனி FreeTamilEbooks.com… Read More »
24.03.2019 அன்று பைதான் பயிற்சி இனிதே நடைபெற்றது. 9 பேர் கலந்து கொண்டனர். நித்யா எளிய முறையில் பைதான் அடிப்படைகளை விளக்கினார். பின்வரும் பைதான் கூறுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பைதான் நிறுவுதல் Loops Conditional Operations Strings List Tuple File I/O கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நன்கொடை விவரங்கள் – வரவு – 1650 ரூ செலவு – 680 ரூ (மதிய உணவு, தேநீர்) சில படங்கள் இங்கே –
சென்னை நந்தனம் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கை. சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர் (தமிழ் ஆன்டிராய்டு செயலி உருவாக்குநர்), சீனிவாசன் ஆகியோர் இணைந்து, பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியத்திற்கான குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் செயலி ஆகும். ”இது தமிழ் ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும். இந்தக் குறுஞ்செயலியின் மூலம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய செவ்விலக்கியங்களுக்கான பதிப்புகளை… Read More »
பைதான் நிரல் மொழி, கற்க எளிதானது. எல்லாத் துறைகளுக்குமான நிரல்கள் எழுதும் திறன்கள் கொண்டது. கணியம் அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு தொடர் பயிற்சி வகுப்புகளை நிகழ்த்த உள்ளோம். முதல் பயிற்சியாக பைதான் மொழி. இப்பயிற்சிக்கு பைதான் மொழி கற்கும் ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறோம். நாள் – மார்ச்சு 24, 2019 ஞாயிறு நேரம் – காலை 9.00 முதல் 4.00 வரை இடம் – தரைதளம் 4, சுபிக்ஷா அடுக்ககம், 42, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம்,… Read More »